நாட்டில் டெங்கு நோயினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 35 ஆக அதிகரித்துள்ளது. டெங்கு நோய் கட்டுப்பாட்டு பிரிவு விடுத்துள்ள புதுப்பிக்கப்பட்ட அறிக்கையில் இந்த விடயம் தொிவிக்கப்பட்டுள்ளது. நேற்றைய (1) நாளில் மாத்திரம் 1025 பேர் டெங்கு நோயினால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் பதிவான டெங்குநோயாளர்களின் எண்ணிக்கை 56,422 ...
ஈரான் அணுசக்தி நிலையங்களை ஆய்வு செய்ய சர்வதேச அணுசக்தி முகவரகத்திற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக வெளியாகும் செய்திகளில் எவ்வித உண்மைத்தன்மையும் இல்லை என அந்தநாட்டின் பாராளுமன்ற சபாநாயகர் முகமது பாகர் காலிபாஃப் தெரிவித்துள்ளார். தாக்குதலுக்கு உள்ளானதாக கூறப்படும் அணுசக்தி நிலையங்களை ஆய்வு செய்வதற்கு சர்வதேச அணுசக்தி முகவரகத்தின் ஆய்வாளர்களுக்கு எவ்வித ...
பொது அவசரகால நிலையினை இம்மாதம் முதல் மேலும் நீடிக்கப்போவதில்லை என அரசாங்கம் அறிவித்துள்ளது. அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று (1) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ இதனைக் குறிப்பிட்டுள்ளார். கடந்த வருடம் இறுதியில் ஏற்பட்ட டித்வா புயல் பேரழிவு காரணமாக ...
பேருந்து கட்டணத்தை 12 சதவீதத்தால் அதிகரிக்கப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி ஆகக் குறைந்த கட்டணம் 30 ரூபாவில் இருந்து 34 ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. எதிர்வரும் 5 ஆம் திகதி நள்ளிரவு முதல் இந்த கட்டண திருத்தம் நடைமுறைக்கு வரவுள்ளது. சாதாரண சேவையின் கீழான பேருந்து கட்டணத்தை 100 கிலோமீற்றருக்கும் ...
அரச புலனாய்வுப் பிரிவின் முன்னாள் தலைவர் ஓய்வு பெற்ற மேஜர் ஜெனரல் சுரேஷ் சலே, மேலதிக விசாரணைகளுக்காகத் தனது தொலைபேசி மற்றும் மடிக்கணினியின் கடவுச்சொற்களை குற்றப்புலனாய்வுத் திணைக்களத்திடம் ஒப்படைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் நேற்று (1) இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. உயர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் ...
சிறுவர்களுக்கான போதைப்பொருள் புனர்வாழ்வு மையம் மற்றும் உளநலத் தேவைப்பாடுகள் தொடர்பில் விசேட கவனம் செலுத்தவுள்ளதாகவும், சிறுவர் இல்லங்களிலிருந்து வெளியேறும் இளைஞர், யுவதிகளுக்கான வீட்டுத் திட்டங்கள் தொடர்பிலும் கவனம் செலுத்தியுள்ளதாகவும் மகளிர் மற்றும் சிறுவர் அலுவல்கள் அமைச்சர் சரோஜா சாவித்திரி போல்ராஜ் தெரிவித்தார். வடக்கு மாகாண நன்னடத்தை மற்றும் சிறுவர் ...
குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் (CID) காவலில் வைக்கப்பட்டுள்ள அரச புலனாய்வுச் சேவையின் முன்னாள் பணிப்பாளர் சுரேஷ் சலே, தான் முன்னெடுத்து வந்த உண்ணாவிரதப் போராட்டத்தை தற்காலிகமாக இடைநிறுத்தியுள்ளார். தனது சட்டத்தரணிகளின் ஆலோசனைகள் மற்றும் கோரிக்கைகளை அடுத்தே, சுரேஷ் சலே இந்த முடிவை எடுத்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. 2019 ஆம் ஆண்டு ...
இந்து ஆலயங்களும் அவற்றின் பரிபாலனமும் 30 சைவத் தமிழர்களை பெளத்தத்திற்கு மதமாற்றம் செய்கின்ற காரியத்தை ஆட்சித் தரப்புகள் செய்யாததன் காரணமாக, ஒரு பெரும் சவாலில் இருந்து நம் சைவத் தமிழ் தப்பிக் கொண்டது. அதேவேளை தமிழ்ப் பெளத்தர்கள் இல்லாத காரணத்தாலேயே தமிழர் தாயகத்தில் பெளத்த விகாரைகள் அமைவது எதிர்ப்புக்கு ...
பாகிஸ்தானின் லாகூர் நகருக்கு அருகிலுள்ள கஹ்னா பகுதியில் அமைந்துள்ள தனியார் மேலதிக வகுப்பு ஒன்றின் கூரை திடீரென இடிந்து விழுந்ததில் 14 சிறுவர்கள் உயிரிழந்துள்ளனர். உயிரிழந்த சிறுவர்களில் பெரும்பாலானோர் 7 முதல் 11 வயதிற்குட்பட்டவர்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த விபத்தில் காயமடைந்து சிகிச்சை பெற்று வருபவர்களில் 10 ...
கடந்த சில நாட்களுக்கு முன்னர் வெனிசுலாவில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தின் தாக்கத்தால் இடிந்து விழுந்த கட்டிடத்தின் இடிபாடுகளுக்குள் சிக்கியிருந்த 3 வயது சிறுவன், 6 நாட்களுக்குப் பிறகு உயிருடன் மீட்கப்பட்டுள்ளான். கிளைபர் மொரான் என அடையாளம் காணப்பட்டுள்ள இந்தச் சிறுவன், லா குவைரா மாகாணத்தில் உள்ள இடிபாடுகளுக்கு இடையில் ...