நாட்டின் பல பிரதேசங்களுக்குப் பலத்த மின்னல் தாக்கம் குறித்து என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இன்று (09) இரவு 11.30 மணி வரை இது தொடர்பில் அவதானத்துடன் செயற்படுமாறு அந்த அறிவித்தலில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதன்படி மேல், சப்ரகமுவ, மத்திய, தென், ஊவா, வடமேல், வடக்கு மற்றும் வடமத்திய ...
2026 ஆம் ஆண்டிற்கான விசேட மின்சாரக் கட்டண திருத்தம் தொடர்பான தீர்மானத்தை இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு இன்று (09) அறிவித்துள்ளது. எரிபொருள் விலை உயர்வு மற்றும் மின் உற்பத்திச் செலவு அதிகரிப்பு உள்ளிட்ட மூன்று முக்கிய காரணிகளை அடிப்படையாகக் கொண்டு மின்சாரக் கட்டணத்தை 18 சதவீதம் வரை ...
காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகளின் ஆதரவை பெற்றுள்ள தவெகவுக்கு தற்போது வரை 116 இடங்கள் உள்ள நிலையில், ஆட்சியமைக்க இன்னும் 2 இடங்கள் தேவை என்ற நிலை உள்ளது. 2 இடங்களை வைத்துள்ள விசிக, தனது நிலைப்பாட்டை இன்று மாலை 4 மணிக்கு அறிவிப்பதாக தெரிவித்துள்ளது. தொடர்ந்து விஜய் ...
2026 ஏப்ரல் மாதத்தில் இலங்கை மத்திய வங்கியின் உத்தியோகபூர்வ கையிருப்பு சொத்துக்களின் பெறுமதி மீண்டும் 7 பில்லியன் அமெரிக்க டொலர் மட்டத்திற்கு கீழ் வீழ்ச்சியடைந்துள்ளது. மத்திய வங்கி வெளியிட்டுள்ள சமீபத்திய தரவுகளின்படி, 2026 மார்ச் மாத இறுதியில் 7,026 மில்லியன் டொலர்களாகக் காணப்பட்ட மொத்த உத்தியோகபூர்வ கையிருப்பு சொத்துக்களின் ...
திறைசேரி அதிகாரியின் மரணம் தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காக, முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் பிவிதுரு ஹெல உறுமயவின் தலைவருமான உதய கம்மன்பில இன்று (09) காலை குளியாப்பிட்டிய பொலிஸ் நிலையத்திற்கு வருகை தந்துள்ளார். சமீபத்தில் செய்தியாளர் சந்திப்பொன்றை நடத்திய அவர், குறித்த மரணம் தொடர்பாகக் கருத்துக்களை வெளியிட்டிருந்தார். அதற்குப் பதிலளிக்கும் ...
அக்கரையங்குளம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வெனேரிகுளம் பகுதியில், போரின் போது பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படும் நான்கு வெடிகுண்டுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. கடந்த 2026.05.07 அன்று ஜெயப்புரம் பொலிஸ் நிலையத்தில் ஹலோ டிரஸ்ட் (HALO Trust) கண்ணிவெடி அகற்றும் நிறுவன அதிகாரிகளால் இது குறித்த முதற்கட்டத் தகவல் வழங்கப்பட்டது. இருப்பினும், குறிப்பிட்ட பகுதி ...
இந்தோனேசியாவில் உள்ள மவுண்ட் டுகோனோ எரிமலை நேற்று (08) காலை வெடித்ததில் மலையேறுபவர்கள் மூவர் உயிரிழந்துள்ளதுடன், 15 பேர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். எரிமலைப் பகுதிக்குள் நுழைவதற்கும் மலையேறுவதற்கும் தடை விதிக்கப்பட்டிருந்த போதிலும், சிங்கப்பூரைச் சேர்ந்த 09 பேர் கொண்ட குழுவினர் மலையேற்றத்தில் ஈடுபட்டிருந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது. பாதிக்கப்பட்ட ...
சீன இராணுவத்தில் இடம்பெற்ற பாரிய ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பாக, அந்நாட்டின் முன்னாள் பாதுகாப்பு அமைச்சர்களான வெய்ஃபெங்ஹே மற்றும் லி ஷாங்ஃபு ஆகியோருக்கு சீன இராணுவ நீதிமன்றம் மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது. குறித்த இருவரும் பதவியில் இருந்த காலத்தில் பாரியளவில் இலஞ்சம் வாங்கியமை மற்றும் வழங்கியமை ஆகிய குற்றச்சாட்டுகளுக்காக இந்தத் தண்டனை வழங்கப்பட்டுள்ளது. ...
வாய்த்தர்க்கம் கைகலப்பாக மாறியதில் ஒருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவமொன்று அம்பலங்கொடை பகுதியில் நேற்று பதிவாகியுள்ளது. சம்பவத்தில் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்துள்ளார். பலப்பிட்டிய பகுதியில் வசிக்கும் 47 வயதுடையவரே சம்பவத்தில் உயிரிழந்துள்ளார். தாக்குதலை மேற்கொண்ட நபர் சம்பவ இடத்திலிருந்து தப்பிச் சென்றுள்ளார். ...
நாட்டில் நிலவும் மழையுடன் கூடிய வானிலை காரணமாக நீர்த்தேக்கங்கள் பல வான்பாய ஆரம்பித்துள்ளன. தெதுருஓய, லுனுகம்வெஹர, ராஜாங்கணை நீர்தேக்கங்களின் வான்கதவுகள் இன்று காலை முதல் திறக்கப்பட்டுள்ளதாக நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது. தெதுருஓயாவின் 4 வான்கதவுகள் தலா 3 அடி திறக்கப்பட்டுள்ள. லுணுகம்வெஹர நீர்த்தேக்கத்தின் 6 வான்கதவுகள் திறக்கப்பட்டுள்ளன.