யாழில் 10 கிராம் ஹெரோயினை விழுங்கிய 21 வயதுடைய இளைஞர் ஒருவர் யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றார். இது குறித்து மேலும் தெரியவருகையில், வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சுழிபுரம் – கல்லவேம்படி பகுதியைச் சேர்ந்த குறித்த இளைஞனை வட்டுக்கோட்டை பொலிஸார் நேற்றையதினம் 2 கிராம் ...
சுமார் 4 கோடியே 38 இலட்சத்து 90 ஆயிரம் ரூபா பெறுமதியான “குஷ்” போதைப்பொருளை இலங்கைக்கு கடத்தி வந்த இந்தியப் பயணி ஒருவர் இன்று (13) அதிகாலை சுங்க போதைப்பொருள் கட்டுப்பாட்டு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். இவர் 29 வயதுடைய இந்திய வர்த்தகர் என அடையாளம் காணப்பட்டுள்ளார். அவர் இன்று அதிகாலை ...
தமிழக சட்டசபையில் இன்று (13) அரசு சார்பில் நம்பிக்கை கோரும் தீர்மானத்தை ஆளும் கட்சி சார்பில் முன்மொழியப்பட்டது, அதில் முதலமைச்சர் விஜய் உரையாற்றினார். இதனை தொடர்ந்து எதிர்க்கட்சியினரும் உரையாற்றினார்கள். அதன்பின் முதலமைச்சர் விஜயும் பேசினார். சட்டசபையின் அனைத்து நுழைவு வாயில்களையும் மூட சபாநயாகர் ஜே.சி.டி.பிரபாகர் உத்தரவிட்டார். சட்டசபை 6 ...
மாணவர்களை ஏற்றிச் சென்ற பேருந்தும் இலங்கை போக்குவரத்துச் சபைப் பேருந்தும் மோதி கோர விபத்துகொழும்பு – கதிர்காமம் பிரதான வீதியின் திக்வெல்ல, பொல்கஹமுல்ல பகுதியில் உள்ள தனியார் ஆடைத் தொழிற்சாலைக்கு அருகில், பாடசாலை மாணவர்களை ஏற்றிச் சென்ற தனியார் பேருந்தும் இலங்கை போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான பேருந்தும் ஒன்றோடொன்று ...
அம்பலாந்தோட்டை, மாமடல தெற்கு, போகுடுயாய பகுதியில் நபர் ஒருவர் கொல்லப்பட்டமை மற்றும் மற்றொருவருக்கு பாரிய காயம் ஏற்படுத்தியமை தொடர்பில் அம்பலாந்தோட்டை பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். இவ்வாறு கொல்லப்பட்டவர் 34 வயதுடைய மூன்று பிள்ளைகளின் தந்தை எனவும், காயமடைந்தவர் அவரது மனைவியின் தந்தை எனவும் பொலிஸார் தெரிவித்தனர். குறித்த நபரை ...
மே மாதத்தின் முதல் 10 நாட்களில் மாத்திரம் 46,606 சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது. வெளியிடப்பட்டுள்ள புதிய தரவுகளின்படி, குறித்த காலப்பகுதியில் இந்தியாவில் இருந்து 18,533 சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளனர். இது மொத்த வருகையில் 40% ஆகும். ...
வெல்லவாய பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட மஹஆரகம, உல்கந்த பகுதியில் மண்சரிவு ஏற்பட்டுள்ளது. உல்கந்த மலைப்பகுதியின் பெரும் பகுதியில் இந்த நிலச்சரிவு ஏற்பட்டுள்ளதுடன், மண் மேடுகளும் பாரிய மரங்களும் வேரோடு பெயர்ந்து கீழே சரிந்து விழுந்துள்ளதை காணமுடிகிறது. இந்த நிலச்சரிவு நிலைமை குறித்து உடனடியாக ஆராய்ந்து, தேவையான மேலதிக நடவடிக்கைகளை ...
வெனிசுலாவை அமெரிக்கக் கொடியுடன், அமெரிக்காவின் “51 வது மாநிலமாக” சித்தரிக்கும் வரைபடம் ஒன்றை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் வெளியிட்டுள்ளார். தனது ‘Truth Social’ சமூக வலைதளக் கணக்கில் ட்ரம்ப் இந்த வரைபடத்தைப் பகிர்ந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. சீனாவிற்கான பயணத்தை மேற்கொண்டுள்ள நிலையில், ஜனாதிபதி ட்ரம்ப் ...
அமெரிக்கா தனது சமாதானத் திட்டத்தை ஏற்றுக்கொள்ள வேண்டும், இல்லையெனில் தோல்வியைச் சந்திக்க நேரிடும் என ஈரான் தெரிவித்துள்ளது. ஈரானுடனான போர்நிறுத்தம் ஆபத்தான நிலையில் இருப்பதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் எச்சரித்ததைத் தொடர்ந்து ஈரான் இதனைத் தெரிவித்துள்ளது. ஈரானுக்கு எதிராக அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் தொடுத்த போர் மத்திய ...
நாட்டில் தற்போது அமுலிலுள்ள கியூ.ஆர் குறியீடு அடிப்படையிலான எரிபொருள் விநியோக முறையை உடனடியாக நீக்கும் எண்ணம் அரசிடம் இல்லை என எரிசக்தி அமைச்சர் அனுர கருணாதிலக தெரிவித்துள்ளார். ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் இதனைத் தெரிவித்தார். எரிபொருள் விநியோகத்தில் தற்போது எவ்வித தட்டுப்பாடும் ...