செம்மணி மனித புதைகுழியில் இருந்து நேற்று (21) ஏழு எலும்புக்கூடுகள் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ள நிலையில், புதிதாக 11 எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. செம்மணி புதைகுழியின் மூன்றாம் கட்ட அகழ்வு பணியின் 30ஆம் நாள் அகழ்வு பணிகள் இன்றைய தினம் நடைபெற்றது. அதனடிப்படையில் இதுவரையிலான அகழ்வு பணிகளில், 405 மனித ...
சீனாவில் நடைபெற்ற 2026 ஆசிய அஞ்சலோட்ட சேம்பியன்ஷிப் போட்டியில் புதிய தேசிய சாதனை ஒன்று நேற்று (21) பதிவாகியுள்ளது. 4×100 மீட்டர் அஞ்சலோட்டப் போட்டியில், போட்டித்தூரத்தை இலங்கை அணி 38.63 வினாடிகளில் நிறைவு செய்து இந்த புதிய தேசிய சாதனையை படைத்துள்ளது. குறித்த அஞ்சலோட்ட அணியில் தினேத் வீரரத்ன, ...
டீசல் விலை குறைக்கப்பட்டாலும் எதிர்வரும் 6 மாதங்களுக்கு பஸ் கட்டணத்தில் எவ்வித திருத்தங்களையும் மேற்கொள்ளப் போவதில்லை என இலங்கை தனியார் பஸ் உரிமையாளர் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று (21) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார். அவர் ...
எதிர்வரும் 2026 ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் 10 ஆம் திகதி நடத்துவதற்குத் திட்டமிடப்பட்டுள்ள க.பொ.த. உயர்தரப் பரீட்சையை மேலும் ஒத்திவைக்குமாறு பல்வேறு தரப்பினரால் விடுக்கப்பட்டு வரும் கோரிக்கைகள் குறித்து கல்வி, உயர் கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. 2026 உயர்தரப் பரீட்சைக்குத் தயாராவதற்குப் ...
சுமார் ஒரு கோடியே 32 இலட்சம் ரூபாய் (13.2 மில்லியன்) பெறுமதியான வெளிநாட்டு சிகரெட்டுகளை சட்டவிரோதமான முறையில் இலங்கைக்கு கடத்தி வர முயன்ற வெளிநாட்டு பயணி ஒருவர், கட்டுநாயக்க விமான நிலைய சுங்க அதிகாரிகளால் நேற்று (21) அதிகாலை கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேகநபர் சுங்கப் பிரகடனம் செய்வதற்கு ஏதுமில்லாத ...
அமெரிக்காவின் மிசிசிப்பி மாகாணத்தில் உள்ள வால்மார்ட் வணிக வளாகத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்திய துப்பாக்கிச்சூடு சம்பவம் ஒன்று அரங்கேறியுள்ளது. மிசிசிப்பி மாகாணத்தில் உள்ள வால்மார்ட் அங்காடி ஒன்றில் பொருட்கள் கொள்ளையடிக்கப்படுவதாக அங்குள்ள பொலிஸாருக்கு அவசரத் தகவல் கிடைத்துள்ளது. இதனைத் தொடர்ந்து, சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பொலிஸார் அங்கிருந்த ...
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், இத்தாலிய பிரதமர் ஜியோர்ஜியா மெலோனி குறித்து வெளியிட்ட கருத்து காரணமாக இரு நாடுகளுக்கும் இடையே தூதரக மோதல் ஏற்பட்டுள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்னர் நடைபெற்ற ஜி7 உச்சிமாநாட்டின் போது, இத்தாலிய பிரதமர் தன்னுடன் புகைப்படம் எடுப்பதற்காக கெஞ்சியதாகவும், அந்தப் புகைப்படத்தை எடுத்ததில் ...
சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகளின்படி, 225,748 மாணவர்கள் உயர்தரத்தில் கல்வி கற்பதற்குத் தகுதி பெற்றுள்ளதாக பரீட்சை ஆணையாளர் நாயகம் ஏ.கே.எஸ். இந்திகா குமாரி தெரிவித்துள்ளார். இம்முறை பரீட்சையில் அனைத்துப் பாடங்களிலும் ‘A’ சித்தி பெற்ற பரீட்சார்த்திகளின் எண்ணிக்கை 11,790 ஆகும் எனவும் அவர் கூறியுள்ளார். அதேபோன்று, கடந்த வருடத்துடன் ...
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம், சென்னை தலைமைச் செயலகத்தில், நேற்று (19) மாலை, தமிழ்நாடு பொதுப்பணி மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவை மரியாதையின் நிமித்தம் சந்தித்து, சிநேகபூர்வமாகக் கலந்துரையாடினார். சந்திப்பின்போது, இலங்கையின் தற்போதைய அரசியல் கள நிலைவரம் குறித்து கருத்துத் தெரிவிக்கப்பட்டதுடன், இலங்கையிலுள்ள சிறுபான்மைக் ...
யாழ்ப்பாணம் பண்ணைப் பகுதியில் நேற்று (19) இடம்பெற்ற விபத்தில் இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார். அச்சுவேலி, பாரதி வீதியைச் சேர்ந்த 22 வயதான குறித்த இளைஞன், சாரதி அனுமதிப்பத்திரத்தைப் பெறுவதற்காக வாகனப் பயிற்சியில் ஈடுபட்டிருந்த போதே இந்த விபத்து நேர்ந்துள்ளது. பண்ணைப் பகுதியில் வாகனப் பயிற்சியை முடித்துக்கொண்டு, அவர் வாகனத்திலிருந்து ...