அரசு மற்றும் தனியார் பாடசாலைகளில் 12 ஆம் தரத்தில் கல்வி பயிலும் மாணவ, மாணவிகளுக்காக நடத்தப்படவுள்ள 2026 ஆம் ஆண்டிற்கான பொதுத் தகவல் தொழில்நுட்ப (GIT) பரீட்சைக்கான விண்ணப்பங்களைக் கோரும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகப் பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள அத்திணைக்களம், இந்த விண்ணப்பங்களை நேற்று முன்தினம் ...
முழு ஐரோப்பிய பிராந்தியம் முழுவதும் சாதனை படைக்கும் வகையில் தொடர்ந்து அதிகரித்து வரும் கடுமையான வெப்பம் காரணமாக ஏற்பட்டுள்ள காலநிலை தாக்கங்களினால், கடந்த சில நாட்களுக்குள் பிரான்சில் மட்டும் 40 பேர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக அறிக்கை செய்யப்பட்டுள்ளது. பிரான்சின் பெரும்பான்மையான மக்களுக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் கடுமையான ...
யாழ்ப்பாணம் , வடமராட்சி கிழக்கு பகுதியில் வெடி மருந்துடன் கடற்றொழிலாளர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். வெற்றிலைக்கேணி பகுதியில் சட்டவிரோத கடற்தொழிலில் சிலர் ஈடுபடுவதாக கடற்படையினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் , கடற்படையினர் திடீர் சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டனர் அதன் போது ஒரு கடற்தொழிலாளர் வெடி மருந்துகளுடன் கைது ...
குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் (CID) தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள அரச புலனாய்வுச் சேவையின் முன்னாள் பணிப்பாளர் சுரேஷ் சலே எதிர்நோக்கும் மனிதாபிமானப் பிரச்சினைகளில் தலையிடுமாறு கோரி, அவருடைய குடும்ப உறவினர்கள் பரிசுத்த பாப்பரசர் லியோவிற்கு இன்று (23) கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளனர். அது தொடர்பான கடிதம் இலங்கையிலுள்ள பரிசுத்த ...
முல்லைத்தீவில் யானை தாக்குதலுக்கு இலக்காகி இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். குறித்த சம்பவமானது இன்று அதிகாலை இடம்பெற்றுள்ளது. சம்பவத்தில் முல்லைத்தீவு குமுளமுனையை சேர்ந்த இளைஞரே உயிரிழந்துள்ளார். குறித்த சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, முல்லைத்தீவு குமுழமுனையை சேர்ந்த இளைஞர் ஒருவர் வயல் காவலுக்கு இத்திமடு கிராமத்தில் உள்ள வயல் பகுதிக்கு ...
இஸ்லாமிய மார்க்கத்தை அவமதிக்கும் வகையில் கருத்து வெளியிட்டு, இனங்களுக்கு இடையிலான நல்லிணக்கத்தைச் சீர்குலைக்க செயற்பட்டார் என்ற குற்றச்சாட்டின் கீழ், பொதுபல சேனா அமைப்பின் பொதுச்செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரருக்கு கொழும்பு நீதவான் நீதிமன்றம் விதித்த 9 மாத சிறைத்தண்டனையை கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று (23) உறுதி ...
ஏ9 வீதியில் கிளிநொச்சி நகரில் அமைந்துள்ள வடமாகாண விளையாட்டு வளாகத்திற்கு அருகில், யாழ்ப்பாணம் திசை நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிள் ஒன்று வீதியை கடக்க முயன்ற பாதசாரி ஒருவருடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த விபத்தில் பாதசாரி, மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் மற்றும் பின்னால் பயணித்தவர் ஆகிய மூவரும் படுகாயமடைந்த ...
கிளிநொச்சி – தர்மபுரம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பிரமந்தனாறு பகுதியில், இரண்டு வயதுக் குழந்தை ஒன்று கிணற்றில் தவறி விழுந்து பரிதாபகரமாக உயிரிழந்துள்ளது. நேற்று (22) மதியம் அயலவர் வீட்டில் விளையாடிக் கொண்டிருந்த போதே, இக்குழந்தை பாதுகாப்பற்ற கிணறு ஒன்றில் தவறுதலாக விழுந்து உயிரிழந்துள்ளது. தாயும் குழந்தையும் அருகிலுள்ள அயலவர் ...
உலக கிண்ண காற்பாந்தாட்ட தொடரில் ஆஸ்திரியாவுக்கு எதிரான ஆட்டத்தின் போது, அர்ஜென்டினா அணியின் லியோனல் மெஸ்ஸி உலகக் கிண்ணத் தொடர்களில் தனது 17 ஆவது கோலை பதிவு செய்ததன் மூலம், ஆண்களுக்கான உலகக் கிண்ண வரலாற்றில் அதிக கோல்களை அடித்த வீரர் என்ற சாதனையைப் படைத்ததுடன், ஜெர்மனி அணியின் ...
2027 ஆம் ஆண்டளவில் நாட்டின் ஒன்பது மாகாணங்களுக்கும் ஒரே மாதிரியான முன்பள்ளி கல்வி முறைமையை செயல்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சர் சரோஜா சாவித்திரி போல்ராஜ் தெரிவித்துள்ளார். ஆரம்பப் பருவ சிறுவர் அபிவிருத்தி கல்வித் திட்டத்தின் ஆரம்ப விழாவில் உரையாற்றும் போதே அவர் ...