தேர்தல் முடிந்து விட்டது. எங்கள் பணி நிறைவடைந்தாயிற்று என்றிருந்தால், மீண்டும் நாம் படுகுழி நோக்கியே விழ வேண்டிவரும். பாராளுமன்ற உறுப்பினர் பதவியைப் பெற்ற வர்கள் தமிழ் மக்களுக்காகத் தம்மை முற்று முழுதாக அர்ப்பணிப்பார்கள் என்று நீங்கள் நினைத்தால் அதைவிட்ட கேடு வேறு எதுவு மாக இருக்க மாட்டாது. இதைநாம் ...
பொதுத் தேர்தல் நடந்து முடிந்து விட்டது. பாராளுமன்ற உறுப்பினர்களாகத் தெரிவு செய்யப்பட்டவர்களுக்கு அடுத்து வரும் ஐந்து வருடங்கள் வெள்ளி திசை. வாக்களித்து அவர்களுக்கு வெள்ளி திசை கொடுத்த மக்களுக்கு என்ன திசை என்று எவரும் கணித்துப் பார்ப்பதில்லை. மக்களால் தெரிவு செய்யப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வெள்ளி திசை என்றால், ...
தினை விதைத்தவன் தினை அறுப்பானோ இல்லையோ வினை விதைத்தவன் வினை யறுப்பான். இதில் எந்த மாறுதலுக்கும் இடமில்லை. இப்போது எம் தமிழர் அரசியல் படும் பாட்டை ஒரு கணம் பாருங்கள். இலங்கைத் தமிழரசுக் கட்சிக்கு இப்படியயாரு கதிவரும் என்று யாராவது நினைத்திருப்பார்களா என்ன? தோல்வியைச் சந்திக்கும்போதுதான் குற்றச்சாட்டுக்கள் துள்ளி ...
அரசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்றாகும் என சிலப்பதிகாரம் போதித்து நிற்கிறது. எங்கும் எதிலும் அறத்தைப் பாதுகாப்பதன் அவசியத்தைக் கூறுவதற்காக இளங்கோ அடிகள் அறம் கூற்றாகும் என்றார். அரசியல் பிழைத்தோர் என்று இளங்கோ அடிகள் சுட்டி நிற்பதற்குள் இருக்கக்கூடிய பேருண்மையை உணர்தல் அவசியம். அரசியல் என்பது பொதுமக்களைப் பிரதி நிதித்துவம் ...
இப்போதெல்லாம் மாணவர்கள் வீட்டில் இருந்தபடி இணைய வழியினூடாகக் கல்வி கற்கின்றனர். கொரோனா அதற்கான சந்தர்ப்பத்தை தந்தது. ஆசிரியர் கற்பிக்கத் தயாரானார். மாணவர்கள் தத்தம் இணையவழி சாதனங்களின் முன் அமர்ந்தனர். நாவடக்கம் பற்றி ஆசிரியர் கற்பிக்கத் தொடங்கினார். எப்போதும் நாம் பண்பாகப் பேச வேண்டும். கதைக்க வேண்டும். ஒருவரின் பேச்சும் ...
மன்னன் சாலமனின் சபைக்கு ஒரு விசித் திரமான வழக்கு வருகிறது. இரண்டு தாய். ஒரு குழந்தை. இருவரும் குழந்தை தமது என வாதிக்கின்றனர். அவர்களின் வாதம் மன்னன் சாலமனைக் குழப்புகிறது. ஒரு தாய்க்கு இரண்டு குழந்தைகள் இருக்க முடியும். இரண்டு தாய்க்கு ஒரு குழந்தை எப்படிச் சாத்தியமாகும். மன்னன் ...
அன்புக்குரிய தமிழ் மக்களே! எங்கள் தமிழ் அரசியல் படும் பாட்டை நீங்கள் நன்கு அறிந்திருப்பீர்கள். இல்லாதது பொல்லாதது என அடிப்படை மனச்சாட்சியின்றி தேர்தல் பிரசாரங்கள் நடந்தா கின்றன. இவைபற்றி நீங்கள் அறியாதவர்கள் அல்ல. எனினும் ஓர் உண்மையை இங்கு நாம் கூறி யாக வேண்டும். 1330 குறட்பாக்களைத் தந்த ...
பாராளுமன்றத் தேர்தலின்போது வடக்கு மாகாணத்தில் விசேட கவனம் செலுத்தப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மகிந்த தேசப்பிரிய கூறியிருப்பது மிகுந்த ஆறுதலைத் தருகிறது. பொதுவில் தேர்தல்கள் நியாயமாகவும் நீதியாகவும் நடத்தப்பட வேண்டும் என்பதுடன் கட்சிக்கான வாக்குகள் எண்ணப்பட்டு – உரிய விருப்பு வாக்குகள் கணிக்கப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும் வரையில், ...
ஒரு நாள் இராமகிருஷ்ண பரமஹம்சர் ஆற்றில் நீராடிக் கொண்டிருந்தார். அந்நேரம் மட்டத்தேள் ஒன்று ஆற்றில் தத்தளித்துக் கொண்டிருந்தது. இதனைக் கண்ணுற்ற பரமஹம்சர் தனது கைகளை நீட்டி அந்த மட்டத்தேளைத் தூக்கி னார். அவ்வளவுதான் தேள் அவரின் கையில் கொட்டியது. தேள் கொட்டியதும் தன் கையை உதறினார் பரமஹம்சர். மீண்டும் ...
தமிழ் மக்கள் தொடர்பில் இலங்கை ஆட்சியாளர்களின் வன்மம் இன்னமும் தீர்ந்த பாடில்லை வன்னிப் பெருநிலப்பரப்பில் தமிழினத்தை வதைத்து சங்காரம் செய்தும் அவர்களின் பகைமை அடங்கவில்லை எனும்போது, தமிழினத்தின் எதிர்காலம் இன்னும் ஆபத்தாகவே இருக்கப் போகிறது. வன்னிப் பெருநிலப்பரப்பில் நடந்த யுத்தத்தில் பல்லாயிரக்கணக்கான தமிழ் மக்கள் கொல்லப்பட்டனர். இதற்கு மேலாக, ...