ஒருமுறை இந்த நாட்டின் எதிர்க்கட்சித் தலைவராக இருந்த அ.அமிர்தலிங்கத்துக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணையை சிங்கள ஆட்சியாளர்கள் கொண்டு வந்தார் கள். அப்போது அமைச்சராக இருந்த சிறில் மத்யூ, பாணந்துறைப் பாராளுமன்ற உறுப்பினராக இருந்த நெவில் பெர்ணான்டோ ஆகியோர் எதிர்க்கட்சித் தலைவர் அமிர்தலிங்கத்தை கண்டபாட்டில் திட்டினர். காலிமுகத்திடலில் வைத்து அமிர்தலிங்கத்தைக் ...
நீதியரசர் சி.வி.விக்னேஸ்வரன் பாராளுமன்றத்தில் ஆற்றிய கன்னியுரையில்; இந்த நாட்டின் மூத்த குடிகளின் தாய்மொழி தமிழ் என்ற உண்மையைக் கூறியதால் சிங்களப் பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலர் வெகுண்டெழுந்துள்ளனர். இதனைப் பார்க்கும்போது இந்தச் சின்னத் தனமானவர்களை என்ன செய்வது என்றே எண்ணத் தோன்றும் அதிலும் கடந்த ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் ...
ஞானம் என்பது திருவருளாலும் காலத்தின் நீட்சியாலும் கிடைக்கப் பெறுவது. கருவில் திருவுடையவரை ஞானம் தேடி வரும். அஞ்ஞான இருளில் மூழ்கியிருப்போர்க்கு காலத்தின் அசைவு ஞானத்தைப் போதிக்கும். இங்கு முன்னையது தெய்வீகமானது. பின்னையது அனுபவித்து அடைவது. இதை நாம் கூறும்போது, இதற்கு உதாரணம் கூறுங்கள் என்று நீங்கள் யாரேனும் கேட்கலாம். ...
பழக்கதோசம் என்பது சந்தர்ப்பத்தில் வந்தே ஆகும் என்பதற்குப் பின்வரும் கதை பொருத்துடையது. ஒருவர் எதற்கெடுத்தாலும் தான் கட்டியிருக்கும் சாரத்தை மடித்து சண்டியன் கட்டுக் கட் டிக் கொள்வார். அந்த நபரை நாடகம் ஒன்றில் நடிக்க வைத்தார்கள். நாடகம் கோவலன் – கண்ணகி. கண்ணகி பாத்திரம் அந்த நபருக்கு வழங்கப்பட்டது. ...
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் புதிய துணைவேந்தராகப் பேராசிரியர் சி.ஸ்ரீசற் குணராஜா நியமிக்கப்பட்டுள்ளார். யாழ்ப்பாணப் பல்கலைக்கழக பேரவையால் தெரிவு செய்யப்பட்ட மூன்று பேராசிரியர்களில் முன்னிலையில் இருந்தவர் பேராசிரியர் சிறி சற்குணராஜா என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. தவிர, துணைவேந்தர் நியமனத்தில் கால இழுத்தடிப்புகள் எதுவுமின்றி உடனடியாகவே அந் நியமனத்தை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக் ...
என் எதிராளி எதைச் செய்தாலும் அதை எதிர்ப்பதுதான் என் கடமை என்று யார் நினைத் தாலும் அஃது பெரும் பிழையாகவே முடியும். ஒருமுறை கர்மவீரர் காமராஜர் அவர்களின் தேர்தல் பிரசாரக் கூட்டம் நடந்து கொண்டி ருக்கிறது. காங்கிரஸ் தொண்டர் ஒருவர் மேடையில் உரையாற்றிக் கொண்டிருக்கிறார். அவரின் உரை பேரறிஞர் ...
நீதியரசர் சி.வி.விக்னேஸ்வரன் அவர்கள் பாராளுமன்றத்தில் ஆற்றிய உரை உள்ளபடி ஹன்சார்ட்டில் வெளியாகியுள்ளது. உலகின் மூத்த மொழியும் இந்த நாட்டின் ஆதிக்குடிகளின் மொழியுமாகிய தமிழ் மொழி யால் உங்களை வாழ்த்துகிறேன் என நீதியரசர் விக்னேஸ்வரன் புதிய சபாநாயகரை வாழ்த்தினார். இந்த நாட்டின் மூத்த குடிகள் தமிழர்கள் என்பதையும் அவர்களின் தாய் ...
தமிழர்களின் பிரச்சினைக்குத் தீர்வுகாண்பதில் இருந்து ராஜபக்க்கள் விலக முடியாது என வாசுதேவ நாணயக்கார அண்மையில் கூறியிருந்தார். வாசுதேவ நாணயக்காரவா இவ்வாறு கூறினார் என்று ஐயம் கொண்டாலும் பழைய வாசுதேவ நாணயக்கார மீது தமிழ் மக்களுக்கு இருக்கக்கூடிய நன்மதிப்பும் நம்பிக் கையும் அவர் இவ்வாறு கூறியிருக்கலாம் என்று எண்ணத் தோன்றுகிறது. ...
பாராளுமன்ற உறுப்பினராகத் தெரிவு செய்யப்பட்ட நீதியரசர் சி.வி.விக்னேஸ்வரன் பாராளுமன்றத்தில் தனது கன்னியுரையின் போது இலங்கை மண்ணின் ஆதிக்குடிகளின் மொழி தமிழ் என்பதை மிகத் தெளிவாக – துணிச்சலோடு கூறியதனூடு சிங்கள மக்கள் இலங்கை வரலாற்றை அறிய அரியதொரு வாய்ப்புக் கிடைத்துள்ளது. தவிர, நீதியரசர் சி.வி.விக்னேஸ்வரனைக் கடுமையாக எதிர்த்தவர்களும் அவரின் ...
இந்த நாட்டின் ஆதிக்குடிகளின் மொழி தமிழ் என்று பாராளுமன்ற உறுப்பினர் நீதியரசர் சி.வி.விக்னேஸ்வரன் கூறிய கருத்தை பாராளுமன்ற உரைகள் அடங்கிய ஹன்சார்ட் டில் இருந்து நீக்க வேண்டும் என்ற கோரிக்கையைப் பேரினவாதிகள்முன்வைத்துள்ளனர். செம்மொழியாகிய தமிழ் மொழி உலகின் மொழிகளுக்கெல்லாம் தாய்மொழி என்று ஆய்வாளர்கள் நிரூபணம் செய்து வருகின்றனர். எனினும் ...