எதிர்வரும் ஓகஸ்ட் 05ஆம் திகதி பொதுத் தேர்தல் நடைபெறவுள்ளது. மக்கள் பிரதிநிதிகளைத் தெரிவு செய்வதற்காக நடைபெறுகின்ற இத்தேர்தலுக்காக செல விடப்படும் தொகையும் மனித உழைப்பும் கொஞ்சமல்ல. தவிர, தேர்தலில் போட்டியிடுகின்றவர் களும் தமது வெற்றிக்காகக் கடுமையாகப் பாடுபடுகின்றனர். தேர்தல் தொடர்பாக அவர்களுக்கு ஏற்படுகின்ற செலவுகள் ஏராளம். இருந்தும் தவிர்க்க ...
நல்லூர்க் கந்தப் பெருமானுக்கு இன்று கொடியேற்றம். நல்லூர் முருகனின் திருவிழா என்பது தமிழ் மக்களின் பெருவிழா. சமய பேதமின்றி அனைத்து மக்களும் பங்கேற்கின்ற நல்லூர்க் கந்தனின் திருவிழாவுக்குச் சென்று வந்தாலே அது பெரும் பேறு என்று கருதுபவர்கள் நாம். இதற்கு மேலாக, அலங்காரக் கந்தனைக் கண்டால் போதும். அதுவே ...
தொழிற்சங்கம் என்ற கட்டமைப்பு இன்று தனது இயல்பை இழந்து நிற்கிறது. ஒரு காலத்தில் இருந்த தொழிற்சங்கங்கள் நடுவுநிலை நின்று தமது தொழிலாளர்களின் – பணியாளர்களின் – சேவையாளர்களின் உரிமைகளுக்காகக் குரல் கொடுத்து வந்தன. அதேநேரம் அரசியல் கட்சிகளும் தத்தம் கட்சி சார்ந்த தொழிற்சங்கங்களை அமைத் திருந்தன. இவ்வாறு அரசியல் ...
ஆகாய வெளியில் ஓர் அற்புதமான சஞ்சரிப்பு. சொர்க்கம் என்பது இதுதானோ என்று எனக்குள் கேட்டுக் கொண்டேன். இஃதென்ன ஆச்சரியம். 1983 ஆடிக் கலவரத்தின்போது சிங்களப் பேரினவாதம் கொன் றொழித்தவர்கள் அங்கே வாசம் செய்கிறார்கள். 37 ஆண்டுகளுக்கு முன்னர் பார்த்த அதே தோற்றம். அவர்களைக் கண்ட ஆனந்தத்தில், எப்படி இருக்கிறீர்கள் ...
நடைபெறப்போகும் பொதுத் தேர்தலின் போது, மக்களை ஏமாற்றுகின்ற உபாயங்கள் மிக உச்சமாக இடம்பெறலாம். இதற்காக பல்வேறு திட்டங்கள் தீட்டப்பட்டுள்ளதான தகவல்கள் வெளியாகியுள்ளன. பொதுவில் வாக்களிப்புக்கு முதல் நாள் அல்லது வாக்களிப்புத் தினத்தின் போது தமிழ் மக்கள் நம்பும் வகையில் வேண்டுமென்றே சில விடயங்களை வெளிப்படுத்தி, அதன்மூலம் வாக்குகளைத் தம் ...
தமிழ் மக்களின் எதிர்காலம் எப்படியாகும் என்று தவத்திரு யோகர் சுவாமிகளிடம் கேட்ட போது, அவர் கண்ணீர் விட்டு அழுததான சம்பவத்தை நம் முன்னவர்கள் சொல்லக் கேட்டுள்ளோம். இதுபோல தமிழர்களைக் கடவுள்தான் காப்பாற்ற வேண்டும் என தந்தை செல்வநாயகம் அவர்கள் கூறியது பலருக்கும் தெரிந்த விடயமே. ஆக, ஈழத் தமிழினத்தின் ...
அன்புக்குரிய அரச சேவையாளர்கள் அனைவருக்கும் மகிழ்வான வணக்கம். இன்று தபால் மூல வாக்களிப்பு ஆரம்பமாகிறது. அரச பணியில் ஈடுபட்டிருப்பவர்கள் தேர்தல் கடமையில் ஈடுபடுவதன் காரணமாக, அவர் கள் வாக்களிப்பதற்கு வசதியாக தபால் மூல வாக்களிப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. பொதுவில் தபால் மூல வாக்களிப்பு என்பது புதுமனைப் புகுவிழாவின் போது ...
ஜனநாயகத்தை நிலைப்படுத்துவதற்காக நடத்தப்படுவதே பொதுத் தேர்தலாகும். தேர்தல் வகைமைகள் வித்தியாசப்பட்டாலும் பொதுத் தேர்தல் என்பதே பாராளுமன்ற ஆட்சிக்கான வித்திடல். அந்த வகையில் இலங்கையின் பாராளுமன்ற அரசாங்கத்தை அமைப்பதற்கான பொதுத் தேர்தல் எதிர்வரும் ஓகஸ்ட் 5ஆம் திகதி நடைபெறவுள்ளது. கெடு காலம்போல, பாராளுமன்றம் கலைக்கப்பட்ட கையோடு கொரோனாத் தொற்று உலகை ...
இந்திய தேசத்தில் கொரோனாத் தொற்று நோய் உருத்திர தாண்டவம் ஆடுவது கண்டு மனம் நொந்து போயுள்ளோம். இந்திய தேசத்தில் வேகமாகப் பரவிவரும் கொரோனாத் தொற்றில் இருந்து பாரத மக் களைக் காப்பாற்ற வேண்டுமென நாம் அனைவரும் ஆன்மிக தியானம் செய்ய வேண்டும். இவை ஒருபுறமிருக்க, அகண்ட இந்திய தேசம் ...
தமிழ் மக்களின் பிரச்சினைக்குத் தீர்வு காணப்பட வேண்டும் என்ற நிலைப்பாடுகள் ஆட்சியாளர்களிடம் இருப்பதாகத் தெரியவில்லை. கொரோனாத் தொற்றுக் காரணமாக சர்வதேச அழுத்தங்கள் அறவே இல்லாத நிலை யில், தமிழ் மக்களின் பிரச்சினைக்கான தீர்வும் மறந்து போன விடயமாகிறது. இலங்கையில் தமிழ் மக்கள் அனுபவித்து வரும் துன்பங்கள் இன்னும் தீரவில்லை. ...