கொரோனாத் தொற்றினால் இயல்பு வாழ்க்கை குழம்பிக் கிடக்கிறது. அதிலும் கொரோனாக் காலத்தில் இறப்பவர்களின் இறுதிச் சடங்குகளைச் செய்வதற்கு உறவினர்கள் படும் பாட்டைப் பார்க்கும் போது மனம் பதட்டமடைகிறது. அதிலும் கொரோனாவால் இறப்பு ஏற்பட்டது என்றால், அவ்வளவுதான். பெற்ற பிள்ளைகள்கூட அருகில் நிற்க முடியாத அளவில் நிலைமை வந்துவிடுகின்றது. என்ன ...
கொரோனாத் தொற்று இலங்கையில் வேகமெடுக்கத் தலைப்பட்டுள்ளது. கொரோனாத் தொற்றுக்கு ஆளாகி தாமாக வைத்தியசாலைக்குச் செல்கின்றவர்களின் எண்ணிக்கை ஒரு நாளுக்கு மூவாயிரம் என்ற எல்லையை எட்டி விட்டது. பொதுவில் மக்கள் மத்தியில் சென்று எழுமாறாக பிசிஆர் பரிசோதனை மேற்கொண்டால், தொற்றாளர்களின் எண்ணிக்கை பல ஆயிரத்தைக் கடந்து போகும் என்பது அனுமானிக்கக் ...
யாழ்.போதனா வைத்தியசாலை நிர்வாகத்துக்கு அன்பு வணக்கம்.உங்களின் மருத்துவப்பணிக்கு என்றும் எமது நன்றிகள் உரித்தாகட்டும். தவிர, இவ் அவசர மடலை எழுத வேண்டிய சூழ்நிலை தவிர்க்க முடியாததாயிற்று. பொதுவில் இன்றைய வடமாகாண நிர்வாகம் மாலுமி இல்லாத கப்பல் பயணம் போல நடந்தாகிறது. அவரவர் தத்தம்பாடு. நிர்வாகப் பணிகள் எப்படியாக இருக்கிறது ...
இன்று மே 18. முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நாள். வன்னிப் பெருநிலப்பரப்பில் நடந்த கொடும் போரில் எம் தமிழ் உறவுகள் துடிதுடித்துக் கொல்லப்பட்ட கொடுமை நடந்தேறி இன்று 12 ஆண்டுகள் நிறைவாயிற்று. எனினும் எங்கள் உறவுகளின் நினைவுகள் காலம் கடந்து போகாமல் அப்படியே இருக்கின்றன. ஓ! தமிழின அழிப்பாக நடந்த ...
முல்லைத்தீவு குருந்தூர்மலையில் நேற்றைய தினம் புத்தர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. நீண்ட நெடுங்காலமாக ஆதிசிவ வழிபாடு நடக்கின்ற குருந்தூர்மலையில் அடாவடித்தனமாக புத்தர்சிலையைப் பிரதிஷ்டை செய்தது எந்தவகையிலும் நியாயமாகாது. சிவத்தலம் இருக்கின்ற இடங்களைத் தமதாக்குகின்ற வில்லங்கத்தனத்தில் சிங்கள ஆட்சியாளர்களும் பெளத்த துறவிகளும் ஈடுபட்டு வருகின்றனர். அதன்வரிசையில் குருந்தூர்மலையில் புத்தர்சிலை நேற்றைய ...
வணங்குதலுக்கும் போற்றுதலுக்கும் உரிய சிவாச்சாரியப் பெருமக்களுக்கு அன்பு வணக்கம். உங்களுக்கான, இக்கடிதம் அவசரமாக எழுதப்படுகிறது. நேற்று முன்தினம் 09ஆம் திகதி காலை 9.48 மணி. யாழ்.பண்ணைச் சுற்றுவட்டத்தில் கடமையில் நின்ற போக்குவரத்துப் பொலிஸார் மோட்டார் சைக்கிளில் செல்பவர்களை இடைமறித்து அவர்களின் வாகன அனுமதிப்பத்திரங்களை சோதனையிட்டுக் கொண்டிருந்தனர். அந்நேரம் மோட்டார் ...
மனம் பற்றிப் பேசாத ஞானிகள் இல்லை. ஒரு மனிதனின் உயர்வுக்கும் தாழ்வுக்கும் அவனின் மனமே மூலகாரணமாக அமைகிறது. அதனாலேயே மனமது செம்மையானால் மந்திரங்கள் செப்ப வேண்டாம் என திருமூலர் அறிவுரை வழங்கினார். எவ்வளவுதான் அறிவாற்றல் இருந்தாலும் அதனைச் செயல்படுத்தக் கூடிய மனப்பாங்கு இல்லை எனில், அறிவால் எந்தப் பயனும் ...
சமகாலக் கொரோனாத் தொற்றால், நயினாதீவில் நடைபெறவிருந்த தேசிய வெசாக் தினத்தை நடத்த முடியாதுள்ளதாக பெளத்த சாசன அமைச்சு அறிவித்துள்ளது. கெளதம புத்தபிரான் பரிநிர்வாணமடைந்த வெசாக் பெளர்ணமி புனித நாளை, நயினா தீவில் கொண்டாட முடியாமல் போயிற்று என்பதை நினைக்கும்போது எம் இதயம் கனக்கவே செய்கிறது. கெளதம புத்தபிரான் உலகத்துக்கு ...
நாட்டில் கொரோனாத் தொற்று வேகமாக அதிகரித்து வருகிறது. நிலைமை நாளுக்கு நாள் மோசமடைவது பற்றி மருத்துவர்கள் எச்சரிக்கை செய்து வருகின்றனர். எனினும் கொரோனாத் தொற்றுக் குறைந்தபாடில்லை. இந்நிலையில் கொரோனாத் தொற்றில் இருந்து இலங்கையைக் காப்பாற்றுவதற்கு உதவுமாறு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ வெளிநாட்டுத் தூதுவர்களைச் சந்தித்து கோரிக்கை விடுத்து ...
2020ஆம் ஆண்டில் நடைபெற்ற க.பொ.த உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகள் நேற்று முன்தினம் (04) வெளியாகின. பரீட்சைப் பெறுபேறுகள் வெளியாகும் போதெல்லாம் அதன் மீதான கவனயீர்ப்பு எம்மிடம் உச்சமாக இருக்கும். அந்தளவுக்கு கல்வி மீது நம் தமிழ் மக்கள் பற்றும் அளவற்ற கரிசனையும் கொண்டவர்கள். ஒரு காலத்தில் இலங்கைத் தீவில் ...