மாகாண சபைத் தேர்தல் இந்த வருடத்திற்குள் (2026) நடத்தப்படுமென விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப அமைச்சர் கிரிஷாந்த அபயசேன தெரிவித்துள்ளார். மாகாண சபைத் தேர்தலை நடத்த வேண் டும் என்ற கோரிக்கை வலுவடைந்து வரும் நிலையில், அரசாங்கத்தின் இந்த அறிவிப்பு எம் தமிழ்த் தரப்புகளை உற்சாகப்படுத்தும் என்பதில் மாற்றுக் கருத்திருக்க ...
திருவள்ளுவர் கலாசார மையத்தை யாரிடம் ஒப்படைப்பது உகந்ததது வாத்தியார் வைத்திலிங்கம் தலைமையில் ஆலடி மாநாடு கூடியது. மாநாட்டு உறுப்பினர்கள் அனை வரும் ஆலடிக்கு வந்திருந்தனர். இறைவணக்கத்துடன் ஆலடி மாநாட்டை ஆரம்பிப்பம் என்று வாத்தியார் கூற, அனைவரும் எழுந்து நின்று இறை வணக்கம் செலுத்தி அமர்ந்தனர். தொடர்ந்து பண்டிதர் பரமலிங்கம் ...
இலங்கையின் ரப்பர் பயிர்ச்செய்கைத் துறையை திறன்மிக்க மற்றும் தரமான நிலைக்கு உயர்த்தும் நோக்கில், ரப்பர் அபிவிருத்தி திணைக்களத்திற்கு 41 புதிய ரப்பர் அபிவிருத்தி அதிகாரிகள் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளனர். பெருந்தோட்ட மற்றும் சமூக உள்கட்டமைப்பு அமைச்சின் வழிகாட்டலின் கீழ் இந்த புதிய அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். இந்த புதிய அதிகாரிகளுக்கான நியமனக் ...
மானிப்பாய் – சங்குவேலி பகுதியில் சுவிட்சர்லாந்தில் இருந்து வந்த முதியவர் ஒருவர் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளதுடன், பெருந்தொகை நகை மற்றும் பணம் கொள்ளையிடப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சுவிஸ் நாட்டில் இருந்து இரண்டு மாதங்களுக்கு முன்பு வந்த 66 வயதுடைய வள்ளிபுர சந்திரசேகர் எனும் முதியவர், சங்குவேலியில் ...
உலக சந்தையில் கச்சா எண்ணெயின் விலை மீண்டும் உயர்வடைந்துள்ளது.இதற்கமைய பிரென்ட் ரக ஒரு பீப்பாய் கச்சா எண்ணெய் இன்றைய தினம் 110.70 டொலராக பதிவாகியுள்ளது. கடந்த 5ம் திகதியின் பின்னர் பதிவான அதிக விலை உயர்வு இதுவாகும். WTI கச்சா எண்ணெயின் விலை 107.26 டொலராக காணப்படுகிறது. அமெரிக்க ...
‘ஜோசப் விஜய். எனும் நான்…’ என்று நேரு உள்விளையாட்டு அரங்கமே அதிர, தமிழகத்தின் புதிய முதல்வராகப் பதவியேற்றிருக்கிறார் விஜய். பல அலைக்கழிப்புகளுக்குப் பின்னர் நடந்த ஆளுநரின் அழைப்பு, பதவியேற்பு, விஜய்யின் முதல் கையெழுத்து என ஏக குஷியில் இருக்கிறது த.வெ.க முகாம். ஆட்சியமைக்க உரிமைகோரி ஆளுநரைச் சந்திக்க விஜய் ...
உயிர்காத்த உணவு வலிசுமந்த நினைவாக்கப்பட்டது மே-18 தமிழினத்தின் வலிசுமந்த நாள். எம் இனத்தை ஒட்டுமொத்தமாய் அழித்தொழித்து வென்றுவிட்டோம் என்று பெரும்பான்மை ஆட்சியாளர்கள் கொக்கரித்த நாள். என்று இலங்கைக்கு சுதந்திரம் கிடைத்ததோ அன்றிலிருந்து இன அழிப்பு ஆரம்பமாகிவிட்டது. காலணித்துவ ஆட்சியாளர்களிடமிருந்து சுதந்திரத்தைப் பெற்றுவிட்டு தமிழினத்தின் சுதந்திரத்தைப் பறித்த வரலாற்றை தமிழினம் ...
நோயாளி இறந்து ஒருவருடம் கழிந்தது சத்திர சிகிச்சைக்கு திகதி பிறந்தது பேராண்டி… “கண்கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம் எதற்கு” எண்டொரு பழமொழியுண்டல்லோ. அதின்ர பொருள் தெரியும்தானே. அதததை அந்தந்தக் காலத்தில் செய்திடவேணும். அப்பிடிச் செய்யாமல் விட்டிட்டு, எல்லாம் முத்தி வெடிச்சதுக்குப் பிறகு பலன் தேடிப் பரிகாரம் செய்யிறதிலை எந்தப் ...
தேசிய மக்கள் சக்தியின் காலி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் டி.கே ஜயசுந்தர பயணித்த கெப் ரக வாகனம், முச்சக்கரவண்டி ஒன்றுடன் மோதி விபத்துக்குள்ளானதில் இருவர் காயமடைந்துள்ளனர். இந்த விபத்தில் முச்சக்கரவண்டியின் சாரதி மற்றும் 8 வயது சிறுவனும் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். குறித்த விபத்து ஹினிதும, ஹபரகடை ...
தாய்லாந்தின் தலைநகரான பேங்கொக்கில் சரக்கு ரயில் மீது பேருந்து மோதிய விபத்தில் 8 பேர் உயிரிழந்துள்ளதாகவும் 20க்கும் அதிகமானோர் படுகாயமடைந்துள்ளதாகவும் அந்நாட்டு பொலிஸார் தெரிவித்துள்ளனர். மத்திய பகுதியிலுள்ள விமான நிலைய ரயில் இணைப்பு நிலையம் அருகே, பிற்பகலில் இந்த விபத்து நடந்ததாக தாய்லாந்து செய்திகள் தெரிவிக்கின்றன. விபத்தின்போது எடுக்கப்பட்ட ...