எதிர்வரும் 21 ஆம் திகதி முதல் மீண்டும் நாடு பூராகவும் பயணக்கட்டுப்பாடு விதிக்கப்படவுள்ளதனால் அந்த நாட்களில் பொதுப் போக்குவரத்து நடவடிக்கைகள் இடம்பெற மாட்டாது என போக்குவரத்து அமைச்சு தெரிவித்துள்ளது.
கெரோனா வைரஸ் இலங்கையை கடுமையாக ஆட்டிப் படைத்து வருகின்றது. புதுவருட கொவிட் கொத்தணியில் நாட்டில் ஒரே நாளில் 3623 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இலங்கையில் முதல் தடவையாக ஒரு நாளில் 3623 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்திருக்கின்றது. இந்நிலையில் மொத்த கொரோனா ...
யாழ். மாவட்டத்தில் 69 பேர் உட்பட 137 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதாக யாழ்.போதனா வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன. இதில் 6 பேர் சிறுவர்கள் எனத் தெரிவிக்கப்படுகின்றது. நெற்றைய தினம் 581 பேருக்கு நடத்தப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனையில் யாழ்.மாவட்டத்தில் 69 பேருக்கும் முல்லைத்தீவு மாவட்டத்தில் 40 பேருக்கும் ...
கொரோனாவால் மன்னாரில் ஒருவர் உயிரிழந்துள்ளார். மன்னார் மாவட்டத்தில் நிகழ்ந்த 4ஆவது மரணம் இதுவாகும். கடந்த ஒரு வாரமாக மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த திருக்கேதீஸ்வரத்தைச் சேர்ந்த ஆண் ஒருவரே இவ்வாறு கொரோனாத் தொற்றால் உயிரிழந்துள்ளார்.
கொரோனா தொற்றினால் கொல்லப்பட்டாலும் பரவாயில்லை. நாட்டை முடக்கும் தீர்மானத்தை மட்டும் எடுக்கவேண்டாம் என அன்றாடம் உழைத்து வாழும் மக்கள் கூறுகிறார்கள். ஆனால் இந்த விடயத்தில் சகல தரப்பினரதும் கருத்துக்களை நாங்கள் கருத்தில் எடுக்க வேண்டியுள்ளது என மேற்கண்டவாறு இராணுவ தளபதியும் தேசிய கோவிட் தடுப்பு செயலணியின் தலைவருமான ஜெனரல் ...
யாழ்.போதனா வைத்தியசாலை நிர்வாகத்துக்கு அன்பு வணக்கம்.உங்களின் மருத்துவப்பணிக்கு என்றும் எமது நன்றிகள் உரித்தாகட்டும். தவிர, இவ் அவசர மடலை எழுத வேண்டிய சூழ்நிலை தவிர்க்க முடியாததாயிற்று. பொதுவில் இன்றைய வடமாகாண நிர்வாகம் மாலுமி இல்லாத கப்பல் பயணம் போல நடந்தாகிறது. அவரவர் தத்தம்பாடு. நிர்வாகப் பணிகள் எப்படியாக இருக்கிறது ...
கிளிநொச்சி பொதுச்சந்தையில் வெற்றிலைக் கடை உரிமையாளர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில் சந்தையில் உள்ள வெற்றிலைக் கடைகள் அனைத்தும் முடக்கப்பட்டிருக்கின்றன. சந்தைக் கட்டடத் தொகுதியில் காணப்பட்ட 32 கடைகளில் 25 வெற்றிலை கடைகளும் 7 தேங்காய் கடைகளும் உள்ள டங்குகின்றன. குறித்த கடை உரிமையாளர் 6 நாட் ...
யாழ்ப்பாணத்தில் கொரோனாத் தொற்றுக்குள்ளான மேலும் ஒருவர் நேற்று உயிரிழந்துள்ளார். யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த குருநகர்ப் பகுதியைச் சேர்ந்த 66 வயதுடைய ஒருவரே உயிரிழந்துள்ளார். அவர் உயிரிழந்த நிலையில் நேற்று மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனயில் குறித்த நபருக்கு தொற்று இருந்தமை உறுதி செய்யப்பட்டுள்ளது.
முல்லைத்தீவு – முள்ளிவாய்க்கால் பகுதியில், இறுதி யுத்தத்தில் உயிரிழந்த உறவுகளை நினைவுகூர்ந்து சிவகுரு ஆதீன குரு தவத்திரு வேலன் சுவாமிகள் சுடரேற்றி அஞ்சலி செலுத்தியுள்ளார். இதேவேளை முள்ளிவாய்க்காலில் பயங்கரவாதத்தைத் தூண்டாத வகையிலும் கொரோனா கட்டுப்பாட்டு நடைமுறைகளை பின்பற்றி அஞ்சலி நிகழ்வை மேற்கொள்ளலாம் என முல்லைத்தீவு நீதிமன்றம் நேற்றுமுன்தினம் தீர்ப்பு ...
பல்லாயிரக்கணக்கான தமிழ் மக்கள் கொன்று குவிக்கப்பட்டதை நினைவுகூரும் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகள் நேற்று தமிழர் தாயகத்தில் பரவலாக இடம்பெற்றன. அரச படையினரின் கடுமையான கெடுபிடிகளுக்கு மத்தியில் அஞ்சலி நிகழ்வு உணர்வுபூர்வமாக இடம்பெற்றது. நாட்டில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள கோவிட்-19 தனிமைப்படுத்தல் சட்டங்களுக்கு அமைய மக்களைத் திரட்டாமல் பல்வேறு இடங்களில் நினைவேந்தல் நிகழ்வுகள் ...