யாழ்.போதனா வைத்தியசாலையின் 2ஆம், 3ஆம் இலக்க விடுதிகள் கொரோனா தொற்றாளர்களுக்கு சிகிச்சையளிப்பதற்கான தனிமைப்படுத்தல் விடுதியாக மாற்றப்படவுள்ளதாக யாழ். போதனா வைத்தியசாலை பதில் பணிப்பாளர் ஸ்ரீபவானந்தராஜா தெரிவித்துள்ளார். நேற்று மாலை ஊடகவியலாளர்களைச் சந்தித்து கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
முதல் 28 வாரங்களுக்குப் பின்னர் கர்ப்பிணிப் பெண்கள் கொரோனா தொற்றுக்கு உள்ளாகின்றமை ஒரு தீவிரமான நிலை என காசல் வைத்தியசாலையின் சிரேஷ்ட விஷேட வைத்தியர் சனத் லெனரோல் தெரிவித்துள்ளார். கர்ப்பிணிப் பெண்கள் தொற்றுக்கு உள்ளாகின்றமை தொடர்பில் நேற்று (06) கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். ...
யாழில் கொரோனாவால் இருவர் உயிரிழந்ததுடன் யாழ். மாவட்டத்தில் 20 பேர் உட்பட வடக்கில் 28 பேருக்கு நேற்று கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக யாழ். போதனா வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன்படி நேற்று 707 பேருக்கு நடத்தப்பட்ட பீ.சி.ஆர் பரிசோதனையில் யாழ். மாவட்டத்தில் 20 பேருக்கும், முல்லைத்தீவு மாவட்டத்தில் ஒருவருக்கும், ...
கொரோனாத் தொற்றுக் காலத்தில் வெசாக் தேசிய நிகழ்வை நயினாதீவில் நடத்துவதற்கு பலதரப்புகளும் கடும் எதிர்ப்பை தெரிவித்து வருகின்றன. கொரோனாத் தொற்று தென் பகுதியில் மிக மோசமாக பரவி வருகின்ற இவ்வேளையில், எதிர்வரும் மே 23 ஆம் திகதி தொடக்கம் 28 ஆம் திகதி வரையான ஒரு வார காலத்திற்கு ...
2020ஆம் ஆண்டில் நடைபெற்ற க.பொ.த உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகள் நேற்று முன்தினம் (04) வெளியாகின. பரீட்சைப் பெறுபேறுகள் வெளியாகும் போதெல்லாம் அதன் மீதான கவனயீர்ப்பு எம்மிடம் உச்சமாக இருக்கும். அந்தளவுக்கு கல்வி மீது நம் தமிழ் மக்கள் பற்றும் அளவற்ற கரிசனையும் கொண்டவர்கள். ஒரு காலத்தில் இலங்கைத் தீவில் ...
வவுனியா நகர சபை சுகாதார பரிசோதகருக்கு கொரோனாத் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. வவுனியாவில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றது. இந்நிலையில் அதனை கட்டுப்படுத்துவதற்கு சுகாதார பிரிவினரால் பல்வேறு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. இந்நிலையில் கொரோனா தடுப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வந்த வவுனியா நகர சபையின் ...
நாட்டில் கொரோனாத் தொற்றாளர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்குமாயின் பயணக் கட்டுப்பாடு விதிக்கப்படும் நிலையேற்படும் என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்திய கலாநிதி அசேல குணவர்த்தன தெரிவித்துள்ளார். இது குறித்து மேலும் அவர் கூறுகையில், கொரோனா தொற்றாளர்கள் எண்ணிக்கை மேலும் தீவிரமாக அதிகரிக்குமாயின் பயணக் கட்டுப்பாடு விதிக்கப்படும். அது ...
யாழ்.பல்கலைக்கழக பெண் விரிவுரையாளர் ஒருவருக்கு கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. யாழ்.போதனா வைத்தியசாலையில் மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனையிலேயே குறித்த தொற்றாளர் அடையாளம் காணப்பட்டுள்ளார். அவருக்கு நேற்று முன்தினம் பிசிஆர் மாதிரிகள் பெறப்பட்டிருந்த நிலையில் நேற்று பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு முடிவு அறிவிக்கப்பட்டுள்ளது. யாழ்.பல்கலைக்கழகத்தின் முகாமைத்துவ பீடத்தில் கடமையாற்றும் விரிவுரையாளரே ...
யாழ்ப்பாணம் நகரில் தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறிய 30 பேர் பொலிஸ் நிலையத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டு கடும் எச்சரிக்கையின் பின் விடுவிக்கப்பட்டனர். முகக்கவசம் அணியாதோர், சமூக இடைவெளியைப் பேணாதவர்களை கைது செய்து நீதிமன்றில் முற்படுத்துமாறு பொலிஸாருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதனடிப்படையில் யாழ்ப்பாணம் தலைமையகப் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகர் ...
யாழ்.மாவட்டத்தில் 38 பேர் உட்பட வடக்கில் 44 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப் படுத்தப்பட்டிருப்பதாக யாழ். போதனா வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன்படி நேற்றைய தினம் 727 பேருக்கு நடத்தப்பட்ட பி.சி. ஆர் பரிசோதனையில் யாழ். மாவட்டத்தில் 38 பேருக்கும், வவுனியா மாவட்டத்தில் 3 பேருக்கும், கிளிநொச்சி மாவட்டத்தில் ...