பிரதமர் மகிந்த ராஜபக்ஷவிற்கும் இலங்கைக்கான நெதர்லாந்து தூதுவர் தன்ஞா கோன்க் ரீட்ஜூக்கும் இடையில் சந்திப்பு ஒன்று நேற்று கொழும்பில் நடை பெற்றுள்ளது. பொதுத் தேர்தல் வெற்றி மற்றும் கொரோனா நோய்ப் பரவல் தடுப்புத் தொடர்பில் அரசாங்கத்திற்கு வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் நெதர்லாந்து தூதுவர் தெரிவித்துள்ளார். மேலும் அண்மையில் இலங்கைக் கடற்பரப்பில் ...
யாழ்ப்பாணம் விசேட அதிரடிப் படையினரால் குருநகர்ப் பகுதியில் நேற்று முன்தினம் புதன்கிழமை மாலை மேற் கொள்ளப்பட்ட விசேட தேடுதல் நடவடிக்கையின்போது 500 கிராம் கேரள கஞ்சாவுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்டவர் சட்ட நடவடிக்கைகளுக்காக யாழ்ப்பாணம் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
கிளிநொச்சி பொலிஸ் நிலையத்திற்கு உட்பட்ட பரந்தன் ஓவசியர் சந்திப் பகுதியில் உள்ள பற்றைக்காட்டில் ஒரே கயிற்றில் தூக்கில் தொங்கி உயிரிழந்த நிலையில் ஆண் ஒருவரதும் பெண் ஒருவரதும் சடலங்களை பொலிஸார் நேற்று மீட்டுள்ளனர். இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது, கடந்த 04ஆம் திகதி முதல் காணாமல் போன ...
யாழ்.பொலிஸாரினால் மேற்கொள்ளப்பட்ட சுற்றி வளைப்பில் போதைப்பொருட்கள் கைவசம் வைத்திருந்தவர்கள் உட்பட 13 பேர் கைது செய்யப்பட்டனர். நேற்று முன்தினம் தொடக்கம் நேற்றுவரை முன்னெடுக்கப்பட்ட சுற்றி வளைப்பின்போதே இவர்கள் கைது செய்யப்பட்டனர். 240 மில்லிகிராம் யஹரோயின் வைத்திருந்த 2 பேரும் 55 கிராம் 300 மில்லி கிராம் கஞ்சா வைத்திருந்த ...
களுத்துறை – வடக்கும் சிரிலந்த சியறைச்சாலையில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த பெண் ஒருவர் தப்பிச் சென்றுள்ளார். ஹெரோயின் போதைப் பொருள் தொடர்பில் குற்றம் சுமத்தப்பட்டிருந்த பெண் ஒருவரே தப்பிச் சென்றுள்ளார். 48 வயதுடைய இந்தப் பெண் தப்பிச் சென்றமை தொடர்பில் விசாரணைகளை பொலிஸார் ஆரம்பித்துள்ளனர். குறித்த பெண் மதிலில் இருந்து பாய்ந்து ...
யாழ்.நாவற்குழி – விகாரை அமைந்துள்ள காணியில் பிறி தொரு கட்டடத்தை அமைப் பதற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு நேற்று நடைபெற்றது. விகாரைக்கு தேவையான கட்டடம் ஒன்றை அமைப்பதற் காகவே இவ்வாறு கட்டடம் அமைக்கப்பட்டதாக கூறப்படுகின்றது. ஏற்கெனவே விகாரை அமைப்பதில் எழுந்துள்ள சர்ச்சைகளை மக்களும் அரசியல்வாதிகளும் மறந்த நிலையில் புதிதாக ...
வவுனியாவில் நாய்க்கடிக்கு இலக்காகி வவுனியா வைத்திய சாலையில் சிகிச்சைக்காக அனு மதிக்கப்பட்ட குடும்பஸ்தர் ஒருவர் சிகிச்சை பலனின்றி நேற்று மதியம் மரணமடைந்துள்ளார். அவருக்கு தவறுதலான தடுப்பூசியை ஏற்றியமையாலேயே மரணம் ஏற்பட்டதாக அவரது உறவினர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர். குறித்த சம்பவம் தொடர்பாக இறந்தவரது உறவினர்கள் கருத்து தெரிவிக்கையில், வவுனியா மகாறம்பைக்குளம் ...
வவுனியா ஓமந்தை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நொச்சிமோட்டை பகுதியில் ஒரே குடும்பத்தினை சேர்ந்த நால்வர் குளவிக் கொட்டுக்கு இலக்காகிய நிலையில் அதில் சிகிச்சை பலனின்றி 3 வயது சிறுமி ஒருவர் மரணமடைந்துள்ளார். நொச்சிமோட்டையில் உள்ள அவர்களது விவசாயக் காணியில் நேற்று மதியம் 12.30 மணியளவில் குளவிக் கொட்டுக்குள்ளான சம்பவம் இடம்பெற்றுள்ளது. ...
இலங்கையில் மாடுகளை வெட்ட தடை விதிக்கும் தீர் மானத்துக்கு பெரமுனவின் பாராளுமன்றக் குழு ஒப்புதல் வழங்கியுள்ளது. பிரதமர் மகிந்த ராஜபக்வினால் முன்மொழியப்பட்ட குறித்த திட்டத்துக்கு பெரமுன வினர் ஆதரவு வழங்கியுள்ளனர். மாட்டிறைச்சி தேவை ஏற்படின் வெளிநாட்டில் இருந்து மாட்டிறைச்சி இறக்குமதி செய் வது குறித்த வேலைத்திட்டம் ஒன்றை உருவாக்கலாம் ...
கூமாங்குளம் கிராம சேவையாளர் பிரிவுக்குட்பட்ட இரண்டாம் குறுக்குத்தெரு வீதியில் இளம் குடும்பஸ்தரின் சடலத்தினை பொலிஸார் மீட்டெடுத்துள்ளனர். நேற்று மாலை 5.00 மணியளவில் இடம்பெற்ற இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், 22 வயதுடைய ரஞ்சித் வசந் என்ற இளைஞன் திருமணம் முடித்து மனைவியுடன் கூமாங்குளம் இரண்டாம் ஒழுங்கை பகுதியில் வசித்து ...