யாழ்ப்பாணத்தில் ஊரடங்கு வேளையில் திருட்டில் ஈடுபட்டனர் என்ற குற்றச்சாட்டில் ஏழு பேர் யாழ்ப்பாணம் குற்றத்தடுப்பு பிரிவினரால் நேற்று முன்தினம் திங்கட்கிழமை கைது செய்யப்பட்டுள்ளனர். சந்தேகநபர்களிடமிருந்து 6 லட்சம் ரூபாய் மதிக்கத்தக்க திருடப்பட்ட பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன என்றும் பொலிஸார் கூறினர். ஊரடங்கு சட்டம் நடைமுறையில் உள்ள வேளையில் யாழ்ப்பாணம் அரியாலை ...
முழங்காவில் தனிமைப்படுத்தல் நிலையத்தில் தங்க வைக்கப்பட்டிருந்த 4 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதன்மூலம் நாட்டில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 233 ஆக உயர்ந்துள்ளது. யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மருத்துவபீட ஆய்வுகூடத்தில் நேற்று 24 பேரின் மாதிரிகள் பரிசோதனைக்குட்படுத்தப்பட்ட தில் 12 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உள்ளமை ...
பொலிஸ் அலுவலகரின் கட மைக்கு இடையூறு வழங்கினார் என்ற குற்றச்சாட்டில் முன்னாள் பிரதி அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க கைது செய்யப்பட்டுள்ளார். நேற்று திங்கட்கிழமை இரவு அவர் கைது செய்யப்பட்டார் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர். மிரீஹான பகுதியில் வீதித் தடையை ஏற்படுத்திய பொலிஸ் உத்தியோகத்தர்களின் கடமைக்கு இடையூறு விளைவித்த குற்றச்சாட்டிலேயே ...
இறுக்கமான சுகாதார மற்றும் சட்ட கட்டமைப்பில் தொடர்ந்தும் செயற்பட்டால் “கோவிட்-19″ கொரோனா வைரஸ் தொற்றுநோய்ப் பரவலை கட்டுப்படுத்த மேலும் இருவாரகாலம் போது மானதாக இருக்கும். ஏப்ரல் மாத இறுதியுடன் நாட்டில் பல மாவட்டங்களில் ஊரடங்கு சட்டத்தை தளர்த்த முடியும் என அரசாங்கம் மற்றும் சுகாதார அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். நாட்டில் ...
யாழ்ப்பாணத்தில் முதன் முதலாக கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர் வசித்த தாவடி கிராமம் 21 நாட்கள் முடக்கப்பட்டிருந்த நிலையில் நேற்றுக் காலை விடுவிக்கப்பட்டது. தாவடிக் கிராமம் கொரோனா தொற்று இல்லாத பிரதேசமாக சுகாதாரத்துறையினரால் உறுதிப்படுத்தப்பட்டு, அங்குள்ள மக்கள் பாதுகாப்பாக நடமாட அனுமதிக்கப்பட்டுள்ளனர். தாவடியைச் சேர்ந்த குடும்பத் தலைவர் கடந்த மார்ச் ...
ஊரடங்குச் சட்டத்தை மீறி பாதையில் பயணித்த நால்வரை தோப்புக்கரணம் போடவைத்து தண்டித்த இரு போக்குவரத்து பொலிஸார் உடன் அமுலுக்கு வரும் வகையில் நேற்றுமுதல் பணி இடைநிறுத்தம் செய்யப்பட்டு, ஒழுக்காற்று நடவடிக்கைகளுக்கான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. கொழும்பு நகர போக்குவரத்து பிரிவு மற்றும் அவசர அழைப்புப் பிரிவின் உதவி பொலிஸ் அத்தியட்சகரின் ...
பங்களாதேஷின் முதல் ஜனாதிபதியும் தேசத் தந்தை என அழைக்கப்படுபவருமான ஷேக் முஜிபுர் ரஹ்மானை படுகொலை செய்த இராணுவ அதிகாரிக்கு தூக்குத் தண்டனை நிறைவேற்றப்பட்டதாக அதிகாரிகள் அறிவித்துள்ளனர். கடந்த 1975 ஆம் ஆண்டு முன்னாள் பிரதமர் ஹசீனாவின் தந்தையான முஜிபுர் ரஹ்மானை படுகொலை செய்தவர்களில் ஒருவரான அப்துல் மஜேட் என்ற ...
பீகாரில் உள்ள கிராமத்தில் ஒரே குடும்பத்தில் 23 பேருக்குக் கொரோனா தொற்றிருப்பதும் ஓமன் நாட்டிலிருந்து திரும்பிய இளைஞன் மூலம் பரவியிருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டது. பீகார் மாநிலம் சிவான் மாவட்டத்தில் சிறுபான்மையின மக்கள் கணிசமாக வாழ்கி றார்கள். சுமார் 60 ஆயிரம் பேர் வளைகுடா நாடுகளில் வேலை செய்து வருகின்றனர். அந்த ...
உலகம் முழுவதும் மருத் துவ ஊழியர்கள் 22 ஆயிரம் பேருக்கு கொரோனா வைரஸ் பரவியதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்தது. கொரோனாவில் இருந்து மக்களைக் காப்பாற்ற அனைத்து நாடுகளைச் சேர்ந்த மருத் துவத்துறையினர் தீவிர முயற்சி மேற்கொண்டு வருகின்றனர். வைரஸால் பாதிக்கப்பட்டவர்களுக்கு போதிய சிகிச்சையளித்து அவர்களைக் காப்பாற் றும் ...
கொரோனாவால் இயற்கையில் ஏற்பட்ட மாற்றம் குறித்து நாசா செயற்கைக்கோள் படத்தை வெளியிட்டது. கொரோனா வைரஸ் தொற்று மிக வேகமாகப் பரவி வரும் நிலையில் அதனால் உலக மக்கள் பலரும் பாதிப்பை எதிர் நோக்கியுள்ளனர். எனினும் இதனால் இயற்கையில் பெரிய மாற்றங்கள் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதன்படி சுற்றுச்சூழல் மாசு கணிசமாகக் ...