மன்னார், வங்காலைப்பாடு கடல் பகுதியில் இன்று அதிகாலை 4 மணியளவில் மீன்பிடிக்கச் சென்ற இரண்டு படகுகள் எதிர்பாராத விதமாக ஒன்றோடு ஒன்று மோதி விபத்துக்குள்ளாகின. வங்காலைப்பாடு மற்றும் காட்டாஸ்பத்திரி பகுதியைச் சேர்ந்த மீனவர்களின் படகுகளே இவ்வாறு விபத்திற்குள்ளாகின. இந்த மோதலில் படகுகள் பலத்த சேதமடைந்ததோடு, அதிலிருந்த மீனவர்கள் கடலில் தூக்கி வீசப்பட்டனர். இதில் காணாமல் ...
1912ம் ஆண்டு இங்கிலாந்தின் சௌதாம்ப்டனில் இருந்து நியூயார்க்கிற்கு தனது முதல் பயணத்தை தொடங்கிய சொகுசு கப்பலான டைட்டானிக் வட அட்லாண்டிக் பெருங்கடலில் மூழ்கிய நாள் இன்று. வரலாற்றின் மிகவும் சோகமான மற்றும் மறக்க முடியாத நிகழ்வுகளில் இதுவும் ஒன்று. ஏப்ரல் 14 இரவு 11:40 மணிக்கு பனிப்பாறையில் மோதிய டைட்டானிக், ...
கடந்த 13 மற்றும் 14 ஆம் திகதிகளில் மாத்திரம் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் 36 பாரதூரமான வீதி விபத்துகள் பதிவாகியுள்ளன. இந்த விபத்துக்களில் சிக்கி இருவர் உயிரிழந்தனர். ஏப்ரல் 13ஆம் திகதி 19 விபத்துகளும், புத்தாண்டு தினமான ஏப்ரல் 14ஆம் திகதி 17 விபத்துகளும் பதிவாகியுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் ...
திருகோணமலை – சேருநுவர பொலிஸ் பிரிவிலுள்ள சோமாவதி பாலத்திற்குள் கீழ் குளித்துக் கொண்டிருந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று சகோதரர்கள் நீரில் அடித்துச் செல்லப்பட்ட நிலையில் ஒருவரின் சடலம் இன்று காலை மீட்கப்பட்டுள்ளதாக சேருநுவர பொலிஸார் தெரிவித்தனர். இவ்வாறு நீரில் மூழ்கி காணாமல்போன மூன்று சகோதர்களும் சோமாவதி வீதி, ...
யாழ்ப்பாணம் அல்லைப்பிட்டி பகுதியில் உள்ள தனியார் காணி ஒன்றிலிருந்து மனித என்புச் சிதிலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. நேற்று (14) தனது காணியைப் பார்வையிடச் சென்ற உரிமையாளர் இது குறித்து வழங்கிய தகவலின் பேரில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். சம்பவ இடத்தில் உள்ள மரத்தில் நபர் ஒருவர் தூக்கிட்டதற்கான அடையாளங்கள் காணப்படுவதுடன், உடலை மிருகங்கள் கடித்துச் சிதைத்திருக்கலாம் ...
நாட்டில் கடந்த காலங்களுடன் ஒப்பிடும்போது, இந்த புத்தாண்டு காலத்தில் பட்டாசு விபத்துகளின் எண்ணிக்கை குறைந்துள்ளதாக சுகாதாரத் துறையினர் தெரிவித்துள்ளனர். ஒவ்வொரு ஆண்டும் புத்தாண்டு மற்றும் பண்டிகைக் காலங்களில் அதிகளவான, வீதி விபத்துகள் மற்றும் பட்டாசுகளால் ஏற்படும் விபத்துகள் பதிவாகும் என சுகாதாரத் துறையினர் தெரிவித்துள்ளனர். பொதுவாக ஒரு வருடம் ...
ஈரானுடனான போர் கிட்டத்தட்ட முடிவுக்கு வரும் தருவாயில் உள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். பொக்ஸ் நியூஸிற்கு வழங்கிய நேர்காணலில் இதனைத் குறிப்பிட்ட அவர், அமெரிக்கா தற்போது பின்வாங்கினாலும் ஈரான் மீண்டும் தன்னை நிலைநிறுத்திக் கொள்ள 20 ஆண்டுகள் ஆகும் என்றும், ஈரான் ஒரு புதிய ஒப்பந்தத்தைச் ...
டித்வா சூறாவளியினால் சேதமடைந்து, அரசாங்கத்தின் இழப்பீட்டுத் திட்டத்தின் கீழ் மீள நிர்மாணிக்கப்பட்ட புதிய இல்லமொன்றில் இடம்பெற்ற புத்தாண்டு கொண்டாட்டத்தில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க இன்று (14) கலந்துகொண்டார். அநுராதபுரம், கல்நேவ பிரதேசத்தின் மல்பெலிகல கிராமத்தைச் சேர்ந்த இந்திரஜித் சம்பத் என்பவரின் வீட்டிற்குப் பால் காய்ச்சி குடிபுகும் நிகழ்வோடு, ...
புத்தசாசன, சமய மற்றும் கலாசார விவகார அமைச்சினால் ஏற்பாடு செய்யப்பட்ட சிங்கள, தமிழ் புத்தாண்டு கலாசார விழாவின் சுபவேளையில் நிறைவேற்றப்படும் சடங்கு சம்பிரதாயங்கள், பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவின் தலைமையில் இன்று (14) கம்பஹாவில் இடம்பெற்றன. சமய வழிபாடுகளைத் தொடர்ந்து, கம்பஹா தர்ஷன வீரசிங்கவின் இல்லத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ...
ஆண்கள், பெண்கள் மற்றும் சிறுவர்கள் என அதிகப்படியானோர் பயணித்த படகொன்று, சீரற்ற காலநிலை மற்றும் மேலதிக பாரம் காரணமாக அந்தமான் கடலில் மூழ்கியுள்ளதாக ஐக்கிய நாடுகள் ஏதிலிகள் முகவர் நிறுவனம் தெரிவித்துள்ளது. மியான்மரில் நிலவும் உள்நாட்டுப் போர் மற்றும் அடக்குமுறைகளிலிருந்து தப்பித்து, மலேசியா போன்ற நாடுகளுக்குச் செல்லும் நோக்கில் ...