அமெரிக்காவின் வடக்கு கரோலினா பகுதியில் நாய் ஒன்றுக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. செல்லப்பிராணியாக வளர்க்கப்பட்ட நாய்க்கு இந்த நோய்த் தொற்று உறுதியாகியுள்ளதாக ஆய்வாளர்கள் தெரிவித்தனர். குறித்த குடும்பத்திலுள்ள மூவருக்கும் கடந்த மாதம் கொரோனா தொற்று உறுதி யாகியிருந்தது. எனினும் அவர்களுக்கு நோய் அறிகுறிகள் எவையும் காணப்படவில்லை. இந்த நிலையில் ...
ஜூன் 20ஆம் திகதி பொதுத் தேர்தல் நடைபெற வேண்டுமானால், குறைந்தபட்சம் மே 15 ஆம் திகதிக்குள் நாடு இயல்பு நிலைக்கு திரும்ப வேண்டும் என்று தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மகிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். சிங்கள பத்திரிகையொன்றிற்கு வழங்கிய நேர்காணலில் இதை தெரிவித்துள்ளார். நாடு இயல்பு நிலைக்கு வந்த பின்னர் ...
நாட்டில் கொரோனா வைரஸ் தொற்று கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. கடந்த ஓரிரு நாட் களில் நோயாளிகளின் எண்ணிக்கை திடீரென அதிகரித்தமைக்கான காரணங்களை விளங்கிக் கொண்டு உரிய பரிகாரங்களை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, இலங்கைக்கான பதில் சீனத் தூதுவர் ஹவெயிடம் தெரிவித்தார். நேற்றுப் பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ...
கோவிட் – 19 கொரோனா வைரஸடன் மக்களை வாழ அனுமதிக்கும் தருணம் இதுவல்ல. இலங்கையில் இன்னமும் கொரோனா வைரஸ் தொற்று அபாயம் உள்ளது என அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் மீண்டும் எச்சரிக்கை விடுத்துள்ளது. “கோவிட் – 19″ கொரோனா வைரஸ் தொற்று நோய் பரவல் குறித்த அச்சுறுத்தல் ...
யாழ்ப்பாணம் உட்பட வடக்கில் இன்று முதல் கடும் மழை பெய்யக்கூடிய வாய்ப்புள்ள தாக வானிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது. வங்காள விரிகுடா கடல் பிராந்தியத்தின் தென்கிழக்காக அந்தமான் கடற்பிராந்தியத்தை இணைந்ததாக இன்று வியாழக்கிழமை முதல் தாழமுக்க பிராந்தியம் உருவாகக்கூடிய சாத்தியக் கூறுகள் இருப்பதாக வானிலை அவதான நிலைய அதிகாரி ...
யாழ்ப்பாணம் – அராலி துறையில் உள்ள இராணுவ முகாமில் வெளியிலிருந்து கொண்டு வரப்பட்டவர்களுக்கான தனிமைப்படுத்தல் நிலையம் அமைப்பதற்கு அப்பகுதி மக்கள் கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர். அராலி துறையில் அமைந்துள்ள இராணுவ முகாமில் நேற்று முன்தினம் தொடக்கம் குறித்த இராணுவ முகாமில் தங்கியிராத வெளியாட்கள் தொடர்ச்சியாக அழைத்து வரப்பட்டு தனிமைபடுத்தப்பட்டுள்ளதாகத் ...
கம்பஹா பொது வைத்திய சாலையின் பணிப்பாளர் உள்ளிட்ட 8 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் தெரிவித்துள்ளார். கொரோனா தொற்றுடன் அடையாளம் காணப்பட்ட ஒருவர் அண்மையில், கம்பஹா வைத்தியசாலைக்கு சென்று பணிப்பாளரை சந்தித்து பேசியிருந்தார். இதையடுத்தே பணிப்பாளர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்.
நாடு முழுவதும் இன்று வியாழக்கிழமை இரவு 8 மணி தொடக்கம் எதிர்வரும் மே 4ஆம் திகதி அதிகாலை 5 மணி வரை ஊரடங்கு நடைமுறைப் படுத்தப்படும் என்று ஜனாதிபதி செயலகம் அறிவித்துள்ளது. இதன்படி வெள்ளி, சனி, ஞாயிறு தினங்கள் நாடு முழுவதும் முடக்கப்பட்டிருக்கும்.
கொரோனா வைரஸ் தொற்றினை கட்டுப்படுத்தும் நடவடிக்கையுடன் தொடர்புடைய கைது சம்பவங்கள் நாட்டின் சட்டங்களுக்கு அமைவானதாக இருக்க வேண்டும் என, இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் தலைவர் தீபிகா உடுகம, பதில் பொலிஸ்மா அதிபருக்கு அனுப்பியுள்ளகடிதத்தில் தெரிவித்துள்ளார். சமூக ஊடகங்களில் போலியான தகவல்களை பிரசாரம் செய்த குற்றச்சாட்டில் அண்மை யில் ...
போதியளவு சுகாதார ஏற்பாடுகள் இல்லாததால் யாழ்.கோப்பாய் தேசிய கல்வியியற் கல்லூரியில் இராணுவத்தால் அமைக்கப்பட விருந்த கொரோனா தனிமைப்படுத்தல் நிலையத்துக்கான ஏற்பாடுகள் இடைநிறுத்தப்பட்டுள்ளன. கொரோனா தனிமைப்படுத்தல் நிலையத்தை அமைப்பதற்காக நேற்று முன்தினம் தேசிய கல்வியியற் கல்லூரியில் இரு விடுதிகள் இராணுவத்தினரால் கையகப்படுத்தப்பட்டன. இந்த நிலையில் விடுமுறையில் சென்றிருந்த இராணுவத்தினர், நேற்றுக் ...