இலங்கையின் முதலாவது டிஜிட்டல் வாகன காப்புறுதி அட்டை மே முதலாம் திகதி முதல் அறிமுகப்படுத்தப்படவுள்ளதாக நிதி மற்றும் திட்டமிடல் அமைச்சு தெரிவித்துள்ளது. தேசிய டிஜிட்டல்மயமாக்கல் திட்டத்திற்கமைய இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளதுடன் இதன்மூலம் பொதுமக்கள் பாதுகாப்பை மேம்படுத்தவும் எதிர்பார்க்கப்பட்டுள்ளது. பிளாஸ்டிக் அட்டைகளை இல்லாமல் செய்வதன் ஊடாக சுற்றுச்சூழல் நிலைத்தன்மைக்கும் பங்களிப்பாற்ற ...
கோழிப்பண்ணை உரிமையாளர் ஒருவரிடம் இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில் குற்றவாளியாகக் காணப்பட்ட அதிகாரி ஒருவருக்கு 6 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து கொழும்பு மேல் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. கடந்த 2009 ஆம் ஆண்டு, மொனராகலை மாவட்டம் வெல்லவாய பகுதியில் உள்ள கோழிப்பண்ணை உரிமையாளர் ஒருவரிடம், இந்த அதிகாரி சட்ட விவகாரங்களைச் சாதகமாக ...
இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் 840,000 இற்கும் அதிகமான சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்கு வருகை தந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது. அதன்படி, ஜனவரி முதலாம் திகதி முதல் ஏப்ரல் 22 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் 840,411 சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருகை தந்துள்ளதாக ...
சுமார் 12 கோடி ரூபா பெறுமதியான 12 கிலோ கிராம் ஹெரோயின் போதைப்பொருளுடன் சந்தேகநபர் ஒருவர் மேல் மாகாண வடக்கு குற்றத்தடுப்பு பிரிவினரால் நேற்று (24) ஹோமாகமவில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். இவ்வாறு கைது செய்யப்பட்டவர் ஹோமாகம பிரதேசத்தைச் சேர்ந்த பிரசாத் நிஷாந்த கொலம்பகே என அடையாளம் காணப்பட்டுள்ளார். ...
சட்டவிரோதமாக நாட்டிற்குள் கொண்டுவரப்பட்ட 38.67 மில்லியன் ரூபா பெறுமதியான வெளிநாட்டு சிகரெட்டுக்களுடன் நபர் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைதுசெய்யப்பட்டுள்ளார். சந்தேக நபருடன் வருகை தந்த மற்றும் சிலர் இந்த கைது நடவடிக்கையின் பின்னர் அங்கிருந்து தப்பியுள்ளதாக தெரியவந்துள்ளது. கைதானவர் கொழும்பைச் சேர்ந்த 27 வயது வர்த்தகர் ...
பேங்கொக்கில் இருந்து கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்த கொழும்பைச் சேர்ந்த 33 வயது இளைஞர், சுமார் 25 மில்லியன் ரூபா பெறுமதியான 2,505 கிராம் குஷ் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளார். விமான நிலையத்தின் பசுமை வழி ஊடாக வெளியேற முயன்றபோது சுங்க போதைப்பொருள் கட்டுப்பாட்டு அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டது. ...
இலங்கை அதிபர் சேவையின் தரம் 3ற்கான ஆட்சேர்ப்பு தொடர்பான மட்டுப்படுத்தப்பட்ட போட்டிப்பரீட்சை, மறு அறிவித்தல் வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நாளையதினம் நடைபெறவிருந்த குறித்த பரீட்சை, தவிர்க்க முடியாத காரணங்களால் ஒத்திவைக்கப்பட்டதாக பரீட்சை ஆணையாளர் நாயகம் ஏ.கே.எஸ். இந்திகா குமாரி லியனகே தெரிவித்துள்ளார். புதிய பரீட்சை திகதி பின்னர் அறிவிக்கப்படும் ...
திறைசேரி ஊடாக அண்மையில் செலுத்தப்பட்ட 2.5 மில்லியன் அமெரிக்க டொலர் பணம் ஹேக்கர்களினால் (Hackers) கைகளுக்கு சென்ற சம்பவம் தொடர்பாக முறையான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று வலியுறுத்தி, இளைஞர் குழுவொன்று இன்று (24) நிதியமைச்சின் முன்பாகப் போராட்டத்தில் ஈடுபட்டது. அத்துடன், இந்தச் சம்பவத்திற்குப் பொறுப்புக்கூற வேண்டிய நிதியமைச்சர் ...
வவுனியா பூந்தோட்டம் மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் அண்மைக்காலமாக நள்ளிரவு நேரங்களில் தொடர்ச்சியாக இடம்பெற்று வரும் திருட்டுச் சம்பவங்களால் பொதுமக்கள் பெரும் அச்சத்திற்குள்ளாகியுள்ளனர். பூந்தோட்டம் பகுதியில் கடந்த சில தினங்களாக மர்ம நபர்களின் நடமாட்டம் அதிகரித்துள்ளதுடன், நள்ளிரவு வேளைகளில் வீடுகளின் ஜன்னல்கள் மற்றும் கதவுகளை உடைத்து உள்நுழையும் நபர்கள் ...
லங்கா சதொச நிறுவனத்திற்குச் சொந்தமான லொறியொன்றை துஷ்பிரயோகம் செய்தமை தொடர்பான வழக்கில், கடந்த நான்கு மாதங்களாக விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ, வத்தளை நீதவான் நீதிமன்றத்தினால் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். இன்று (24) இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, தலா 5 இலட்சம் ரூபா பெறுமதியான ...