வங்கிகளில் பெறப்பட்ட கடன்களில் சலுகைகளைப் பெற்றுக் கொள்வதற்கும் 5 லட்சம் ரூபாயுக்கு உட்பட்ட காசோலைகளின் செல்லுபடிக் காலத்தை நீடிப்பதற்கு மான சலுகைக் காலம் மே 15ஆம் திகதிவரை நீடிக்கப்பட்டுள்ளது என்று இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது. இதுதொடர்பில் மத்திய வங்கி வெளியிட்டுள்ள ஊடக வெளியீட்டில் தெரிவிக்கப்பட் டுள்ளதாவது, கோவிட் ...
ஜூன் 20ஆம் திகதி பொதுத் தேர்தல் நடைபெற வேண்டுமானால், குறைந்தபட்சம் மே 15 ஆம் திகதிக்குள் நாடு இயல்பு நிலைக்கு திரும்ப வேண்டும் என்று தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மகிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். சிங்கள பத்திரிகையொன்றிற்கு வழங்கிய நேர்காணலில் இதை தெரிவித்துள்ளார். நாடு இயல்பு நிலைக்கு வந்த பின்னர் ...
நாட்டில் கொரோனா வைரஸ் தொற்று கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. கடந்த ஓரிரு நாட் களில் நோயாளிகளின் எண்ணிக்கை திடீரென அதிகரித்தமைக்கான காரணங்களை விளங்கிக் கொண்டு உரிய பரிகாரங்களை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, இலங்கைக்கான பதில் சீனத் தூதுவர் ஹவெயிடம் தெரிவித்தார். நேற்றுப் பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ...
கோவிட் – 19 கொரோனா வைரஸடன் மக்களை வாழ அனுமதிக்கும் தருணம் இதுவல்ல. இலங்கையில் இன்னமும் கொரோனா வைரஸ் தொற்று அபாயம் உள்ளது என அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் மீண்டும் எச்சரிக்கை விடுத்துள்ளது. “கோவிட் – 19″ கொரோனா வைரஸ் தொற்று நோய் பரவல் குறித்த அச்சுறுத்தல் ...
திருகோணமலை கந்தளாய் சீனித்தொழிற்சாலைக்குரிய விதை நாற்றுப் பண்ணையில் நான்கு ஏக்கரில் செய்கை பண்ணப்பட்ட கரும்புத் தோட்டத்திற்கு இனந்தெரியா தோரால் தீ வைக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். இச்சம்பவம் நேற்றுப் பிற்பகல் இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்தனர். கந்தளாய் சீனித்தொழிற்சாலையை அண்டிய பகுதியில் எம்.சி.சுகர்ஸ் லங்கா நிறுவ னத்தால் நான்கு ஏக்கர் கரும்புச் ...
ஊரடங்குச் சட்டம் அமுலில் இருந்த வேளை வெளிநாட்டு மதுபான விற்பனை நிலையம் ஒன்றை முற்றுகையிட்ட மதுவரித் திணைக்கள அதிகாரிகள் இருவர் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது. ரிகிலகஸ்கட பிரதேசத்தில் நேற்றுக்காலை இச்சம்பவம் இடம் பெற்றது. மேற்படி விற்பனை நிலையத்திலிருந்த மதுபான போத்தல்களைப் பிறிதொரு இடத்திற்கு எடுத்துச்செல்ல முயற்சிப்பதாக மதுவரித்திணைக்கள அதிகாரிகளுக்கு ...
அரசியல் நோக்கங்களை அடிப்படையாகக் கொண்டு எதிர்தரப்பினர் அரசியல் அமைப்பு நெருக்கடியை தோற்றுவிக்க முயற்சிக்கின்றார்கள் என கைத்தொழில்துறை அபிவிருத்தி அமைச்சர் விமல் வீரவன்ச குற்றம்சாட்டினார். ஜனாதிபதியால் மாத்திரமே கலைக்கப்பட்ட பாராளுமன்றத்தை, புதிய அரசாங்கம் தோற்றம் பெற முன்னர் கூட்ட முடியும் என்பதை எதிர்க்கட்சியினர் நன்கு அறிந்தும் பாராளுமன்றத்தைக் கூட்டுவதற்கு மாற்று ...
பெப்ரவரியில் சஜித் பிரேமதாஸ கடந்த பெப்ரவரி மாதம் எச்சரித்ததை அரசாங்கம் செவி மடுத்திருந்தால், கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தியிருக்கலாம் என முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரட்ன தெரிவித்தார். கொழும்பில் நேற்று முன்தினம் சனிக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், “உங்களுக்குத் தெரியும், ...
பொதுச் சுகாதார அதிகாரி ஒருவருக்கும் கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளமை நேற்று முன்தினம் இரவு உறுதிப்படுத்தப்பட்டது. இலங்கையில் பதிவான 416 ஆவது கொரோனா தொற்றாளராக இவர் அடையாளம் காணப்பட்டார். கொழும்பு மாநகர சபையின் பிரதம வைத்திய அதிகாரி டாக்டர் ருவான் விஜேமுனி இத னைத் தெரிவித்தார். இதேவேளை நேற்று ...
உரும்பிராய் கிழக்குப் பகுதியில் கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் ஒருவர் கைது செய்யப்பட்டார் என்று கோப்பாய் பொலிஸார் தெரிவித்தனர். குறித்த சந்தேக நபரிடமிருந்து 24 லீற்றர் கசிப்பு மற்றும் அதனைத் தயாரிக்கப் பயன் படுத்தப்படும் உபகரணங்களும் கைப்பற்றப்பட்டதாகப் பொலிஸார் கூறினர். இதேவேளை மதுபானசாலைகள் பூட்டப்பட்ட நிலையில் கசிப்பு உற்பத்தி ...