ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ள போதிலும், சீவல் தொழிலில் ஈடுபட அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக இலங்கை பனை அபிவிருத்தி சபை தெரிவித்துள்ளது. இந்த அனுமதி தொடர்பில் துறைசார் அமைச்சருடன் கலந்துரையாடி தேவையான ஆலோசனைகள் பெறப்பட்டுள்ளதாக இலங்கை பனை அபிவிருத்தி சபையின் தலைவர் கிருஷாந்த பத்திராஜ குறிப்பிட்டார். வடக்கு, கிழக்கு மாகாணங்களில் 1500 ...
கொரோனா வைரஸால் பிரித்தானியாவில் மீசாலையைச் சேர்ந்த குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இதில் இரண்டு பிள்ளைகளின் தந்தையான கிருஷ்ணசாமி சியாமளன் (வயது-42) என்ப வரே நேற்று உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவருக்கு 2 வயது மற்றும் 6 மாதத்தில் மகன்கள் உள்ளமை குறிப்பிடத்தக்கது.
இலங்கையில் கொரோனா வைரஸ் (கோவிட் 19) தொற்றுக்குள்ளான நிலையில் வெலிகந்த வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நபரொருவர் உயிரிழந்துள்ளார். இதன்மூலம் கொரோனா வைரஸ் தொற்றால் இலங்கையில் பதிவான 5ஆவது உயிரிழப்பு இதுவாகும். கொரோனா தொற்றால் உயிரிழந்தவர் வேறு எந்தவொரு நோயாலும் பாதிக்கப்படாதவர் என்று சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் ...
பொலிஸ் ஊரடங்குச் சட்டத்தை மீறி பயணித்த கார் மீது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் மூவர் காயமடைந்துள்ளனர். மொரட்டுவ, எகொடஉயன பகுதியில் வைத்தே இந்த துப்பாக்கி பிரயோகம் மேற் கொள்ளப்பட்டுள்ளது. பொலிஸார் நிறுத்துமாறு உத்தரவிட்டதையும் மீறி பயணித்த நிலையிலேயே இந்த துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. குறித்த காரில் 4 பேர் ...
தாம் யாருடன் எல்லாம் பழகினோம் என்பதை தயவுசெய்து ஞாபகத்தில் வைத்துக் கொள்ளுங்கள். விஷேடமாக மேல் மாகாணத்தின் கொழும்பு களுத்துறை, கம்பஹா மாவட்டங்கள், புத்தளம், கண்டி, யாழ். மாவட்டங்களில் உள்ளவர்கள் இக்காலப்பகுதியில் பழகியவர்கள் தொடர்பில் நினைவுபடுத்திக் கொள்ளுங்கள். உங்களுக்கு ஏதேனும் கொரோனா வைரஸ் தொற்று அறிகுறி தென்பட்டால் உடனடியாக சம்பந்தப்பட்ட ...
சுடுநீர் மூலமாகவேதான் கொரோனாவிலிருந்து மீண்டதாக கொரோனாவிலிருந்து முழுமையாக குணமடைந்ததாக நோயாளி தகவல் வெளியிட்டுள்ளார். இலங்கையில் கொரோனா நோயினால் பாதிக்கப்பட்டு முழுமையாக குணமடைந்த நோயாளிதான் காப்பாற்றப்பட்ட விதம் குறித்து ஊடகம் ஒன்றுக்கு தகவல் வெளியிட்டுள்ளார். கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்ற போது சுடுநீர் மாத்திரமே அதிகமாக வழங்கப்பட்டதென கொரோனாவில் ...
“கொரோனா உங்களை அணுகாது” என்ற தலைப்பில் யாழிலிருந்து வெளியாகும் பத்திரிகை யொன்று விளம்பரம் ஒன்றை கடந்த 15ஆம் திகதி பிரசுரித்திருந்தது. இதனைக் கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் சுட்டிக்காட்டிய பிரதமர் மகிந்த இப்படி பொறுப்பற்ற விதத்தில் விளம்பரம் பிரசுரித்ததற்கு தனது கண்டனத்தை வெளியிட்டார். கட்சித் தலைவர்கள் கூட்டமானது நேற்று முன்தினம் ...
சுவிஸ் மத போதகரால் யாழ்ப்பாணத்தில் கொரோனா வைரஸ் பரவியுள்ளது. யாழில் 4 பேருக்கு கொரோனா வைரஸ் இருப்பது உறுதிப்படுத்தப்பட்ட நிலையில் ஏனையவர்களுக்கு வைரஸ் தொற்று பரவுவதற்கான வாய்ப்புகள் அதிகமாக உள்ளது. எனவே யாழ்.மக்கள் அனைவரும் அவதானமாக இருக்குமாறு சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி எச்சரிக்கை விடுத்துள்ளார். யாழில் ஊரடங்கு ...
ஏப்ரல் மாதத்தில் தமது ஓய்வூதிய சம்பளத்தை பெற்றுக் கொள்ளும் ஓய்வூதிய சம்பள உரிமையாளர்களின் ஓய்வூதிய சம்பளத்தை அவர்களது வீட்டுக்கே கொண்டு சென்று ஒப் படைக்கும் வேலைத் திட்டம் தற்பொழுது தபால் திணைக்களத்தின் பணியாளர்களினால் ஆரம்பிக்கப்பட்டிருப்பதாக தபால்மா அதிபர் ரஞ்சித் ஆரியரத்ன தெரிவித்துள்ளார். இதற்கமைவாக, ஓய்வூதிய சம்பளத்துக்கு உரித்தானவர்கள் அரசாங்கத்தினால் ...
கொரோனா தடுப்பு நடவடிக்கைக்கு ஆட்கள் பற்றாக்குறை எழுந்துள்ளது என்றால் பட்டதாரிப் பயிலுநர்களை பயன்படுத்துவதற்கு பதிலாக சம்பளத்துடன் வீட்டில் இருக்கும் அரச ஊழியர்களை பயன்படுத்துங்கள் என தேர்தல்கள் ஆணைக்குழு அரசுக்கு ஆலோசனை வழங்கியுள்ளது. தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மகிந்த தேசப்பிரிய அரசுக்கு அனுப்பி வைத்துள்ள கடிதத்தில் பட்டதாரிப்பயிலுநர்களை பணிக்கு அமர்த்துவது ...