இலங்கைக்கான புதிய இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே நேற்று முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவைச் சந்தித்தார். இலங்கையின் இராஜதந்திர உறவுகளில் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வாக கடந்த மே 14ஆம் திகதி வீடியோ தொழில்நுட்பத்தின் ஊடாக அவர் தனது நற்சான்றுப் பத்திரத்தை ஜனாதிபதியிடம் கையளித்தார். சந்திப்பின் ...
இலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 1530 ஆக உயர்ந்துள்ளது. நேற்று 61 பேர் கொரோனா தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளனர். நேற்று அடையாளம் காணப்பட்டவர்களில் 15 பேர் குவைத்திலிருந்து நாடு திரும்பியவர்களாவார்கள். டுபாயிலிருந்து அழைத்து வரப்பட்டு கிரிகம தனிமைப்படுத்தல் மையத்தில் தங்க வைக்கப்பட்டிருந்தவர்களில் 17 பேர் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டனர். ...
நடுத்தர வருமானம் பெறும் குடும்பங்களுக்கு சலுகை வட்டி அடிப்படையில் வீட்டுக் கடன் திட்டத்தை வழங்க நேற்று முன்தினம் இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. அரசுக்கு சொந்தமான காணிகளில் வீடுகளை அமைக்கும் வகையில் 20 முதல் 30 ஆண்டுகளுக்கு தவணை அடிப்படையில் மீளச் செலுத்தும் வகையில் இந்த வீட்டுக் ...
கிளிநொச்சியில் டிப்பர் வாகனத் துடன் மோட்டார் சைக்கிள் மோதி விபத்துக்குள்ளானதில் தாயார் உயிரிழந்ததுடன் மகள் படுகாயமடைந்துள்ளார். குறித்த விபத்து, நேற்றுக் காலை 10.30 மணியளவில் பரந்தன் பூநகரி வீதியில் இடம்பெற்றுள்ளது. பூநகரி திசையிலிருந்து கிளிநொச்சி நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிள் மீது கிளிநொச்சியிலிருந்து யாழ் நோக்கி பயணித்த ரிப்பர் ...
நாளை மறுதினம் 31ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை மற்றும் எதிர்வரும் ஜீன் 4 வியாழன், மற்றும் ஜூன் 5 வெள்ளி ஆகிய தினங்களில் நாடு முழுவதும் ஊரடங்குச் சட்டம் அமுலில் இருக்கும் என ஜனாதிபதி ஊடகப்பிரிவு அறிவித்துள்ளது. இது தொடர்பில், ஜனாதிபதி ஊடகப்பிரிவு அனுப்பி வைத்த செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, ...
மந்திகை பகுதியில் இராணுவத்தினர் மீது தாக்குதல் நடத்திய சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார் என்று யாழ்ப்பாணம் மாவட்ட குற்றத் தடுப்புப் பொலிஸார் தெரிவித் தனர். பருத்தித்துறை மற்றும் சாவகச்சேரி ஆகிய பகுதிகளில் 3 கொள்ளைச் சம்பவங்களுடன் தொடர்புடைய புத்தளத்தைச் சேர்ந்தவரே இராணுவச்சிப்பாய் மீது தாக்குதல் நடத்தியுள்ளார் என்றும் பொலிஸார் ...
விளையாடிக் கொண்டிருந்தபோது எதிர் பாராதவிதமாக கழுத்தில் கயிறு இறுகியதால் 13 வயது ஈழத்துச் சிறுமி ஒருவர் லண்டனில் மரணமடைந்துள்ளார். இச்சம்பவம் நேற்று முன்தினம் இடம் பெற்றுள்ளது. இதில் லண்டனில் வசித்து வரும் மண்டைதீவு, 8ஆம் வட்டாரத்தைச் சேர்ந்த குலசிங் கம் சரண்ஜா (வயது-13) என்ற சிறுமியே உயிரிழந்தவர் ஆவார். ...
நாடு முழுவதும் இன்று முதல் ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்படுவதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது. இது தொடர்பில், ஜனாதிபதி ஊடகப் பிரிவு அனுப்பி வைத்த செய்திக் குறிப்பில் தெரிவிக் கப்பட்டுள்ளதாவது, இன்று முதல் நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் ஊரடங்குச் சட்டம் மறுஅறிவித் தல் வரை தினமும் இரவு 10.00 ...
குவைத்திலிருந்து அண்மையில் நாடு திரும்பிய பெண் ஒருவர் கொரோனா வைரஸ் காரணமாக நேற்று உயிரிழந்துள்ளார். இதனையடுத்து கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை இலங்கையில் 10 ஆக உயர்வடைந்துள்ளது. குவைத்திலிருந்து நாடு திரும்பிய திருகோணமலை மங்கி ப்ரிட்ஜ் இராணுவ தனிமைப்படுத்தல் முகாமில் தனிமைப்படுத் தப்பட்டிருந்த 51 வயதுடைய பெண் ஒருவரே ...
தேர்தல்கள் ஆணைக்குழு தற்போது நடந்துக் கொள்ளும் விதத்திற்கு அமைய ஆணைக்குழு சுயாதீனமாக செயற்படுகிறதா என்ற சந்தேகம் எழுவதாக முன்னாள் அமைச்சர் ஹெகலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார். தேர்தல் சட்டத்திற்கு அமைய வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டு, குறைந்தது 5 அல்லது 7 வாரங்களுக்குள் தேர்தலை நடத்த வேண்டும். வேட்புமனுக்கள் தாக்கல் செய்வது ...