சுகாதார அமைச்சினால் தற்போது வெளியிடப்பட்டுள்ள வர்த்தமானி அறிவித்தலின் படி மக்கள் ஒத்துழைத்தால் மாத்திரமே அதிகாரிகளால் எவ்வித நடவடிக்கையையும் முன்னெடுக்க முடியும். எனவே இந்த வர்த்தமானி அறிவித்தல் ஒருபோதும் கொவிட்-19 கட்டுப்படுத்தலுக்கு பிரயோசனமாக அமையாது என்று பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹன தெரிவித்தார். கொழும்பில் இன்று ...
வவுனியா கனகராயன்குளம் – ஆயிலடிப் பகுதியில் வேப்ப மரம் முறிந்து விழுந்ததில் ஒன்றரை வயதான குழந்தை உயிரிழந்துள்ளது. நேற்று மதியம் இடம்பெற்ற மேற்படி சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, குறித்த குழந்தை மற்றும் இரு சிறுவர்கள் அவரது உறவினர் ஒருவருடன் அயல் வீட்டிற்குச் சென்றுவிட்டு வீடு நோக்கி திரும்பிக் ...
எதிர்வரும் பொதுத் தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்புகள் இன்று திங்கட்கிழமை முதல் ஆரம்பமாகின்றன. தபால் மூல வாக்களிப்புக்காக ஏழு நாட்கள் வழங்கப்பட்டுள்ளதாக தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. இதற்கமைய இன்று, நாளை மற்றும் நாளை மறுதினம், 16, 17ஆம் திகதிகளிலும் எதிர்வரும் 20, 21ஆம் திகதிகளிலும் வாக்களிப்புகள் இடம்பெறவுள்ளன. ...
நடிகை ஐஸ்வர்யா ராய் மற்றும் அவரின் மகள் ஆரத்யாவும் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது. முன்னதாக, அமிதாப் மற்றும் அபிஷேக் ஆகியோர் கொவிட் – 19க்கு சாதகமாக சோதனை செய்யப்பட்டனர். வைரஸ் பாதிப்புக்குள்ளான அவர்கள் தற்போது மும்பையின் நானாவதி வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அமிதாப், அபிஷேக் ஆகியோருக்கு கொரோனா ...
வவுனியா, சேமமடு பகுதியில் மாட்டுச் சாணத்தின் விசவாயு தாக்கி இளைஞர் ஒருவர் மரணமடைந்துள்ளார். நேற்று மதியம் இடம்பெற்ற இச் சம்பவம் குறித்து மேலும் தெரிய வருவதாவது, வவுனியா, ஓமந்தை, சேமமடு பகுதியில் உள்ள காணி ஒன்றில் பல மாதங்களாக குவிக்கப்பட்டிருந்த மாட்டு சாணத்தினை பாரவூர்த்தி ஒன்றில் சிலர் ஏற்றியுள்ளனர். ...
வடக்கில் இவ்வருடம் 2,327 கிலோ கிராம் கஞ்சா போதைப் பொருள் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளதாக வடக்கு கடற்படை கட்டளைத் தலைமையக தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த வருடத்துடன் ஒப்பிடும்போது இவ்வருடம் போதைப் பொருள் கடத்தல் வடக்கில் அதிகரித்துள்ளதாக தெரிவித்துள்ள வடக்கு கடற்படை கட்டளை தலைமையகம், வடக்கு மாகாணத்தில் கடந்த 2019ஆம் ஆண்டுடன் ...
இலங்கை வரலாற்றில் முதன்முறையாக தங்கத் தின் விலை உச்சபட்ச அளவை எட்டியது. 24 கரட் தங்கத்தின் விலை முதன்முறையாக 100,000 ரூபாயை எட்டியது. கொரோனா தொற்று காரணமாக தங்க வரத்து நின்று போனதால் நாட்டில் தங்கத்திற்கு தட்டுப்பாடு நிலவுகிறது. இதனால் விலை உயர்ந்து செல்வதாக தேசிய இரத்தினக்கல் ஆபரண ...
முல்லைத்தீவு முள்ளியவளை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட கேப்பாப்புலவு பகுதியில் நேற்று முன்தினம் குடும்பத்தில் ஏற்பட்ட தகராற்றினை தொடர்ந்து தனது 5 வயதுச் சிறுமி மீது சரமாரியாக கத்தியால் வெட்டிய சம்பவத்தில் படுகாயமடைந்த சிறுமி முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனையின் தீவிர சிசிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இச்சம்பவத்தினை தொடர்ந்து பாதிக்கப்பட்ட சிறுமியின் ...
இலங்கையில் மீண்டும் கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. நேற்று ஒரே நாளில் மட்டும் 57 பேருக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் அனில் ஜாசிங்க தெரிவித்தார். வெலிக்கடை சிறைச்சாலையில் கொரோனா தொற்றுக்குள்ளான கைதியு டன் புனர்வாழ்வு நிலையத்தில் இருந்த வர்களுக்கே நேற்று கொரோனா தொற்று உறுதி ...
வாள்வெட்டுக் குழுத்தலைவனின் பிறந்தநாள் கொண்டாட்டத்திற்காக ஒன்றுகூடிய நிலையில் நேற்று முன்தினம் கைது செய்யப்பட்டவர்களில் 24 பேர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். குறித்த நபர்கள் யாழ்.நீத வான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டபோதே விளக்கமறியலில் வைக்கப்பட்டனர். கைது செய்யப்பட்டவர்களில் 2 பேர் 16 வயதிற்குட்பட்டவர்கள் என்பதால் அவர்கள் இரு வரும் ஆட்பிணையில் விடுவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.