கந்தக்காடு புனர்வாழ்வு மையத்தில் இருந்த யாழ்ப்பாணம் நெடுங்குளம் கிராமத்தைச் சேர்ந்த இளைஞன் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. குறித்த இளைஞனை அண்மைக் காலமாக உறவினர்கள், நண்பர்கள் எவரும் சென்று பார்க்க வில்லை. அதனால் பொது மக்கள் அச்சமடையத் தேவையில்லை என சுகாதாரப் பிரிவு அறிவித்துள்ளது.
தமிழர்களுக்கான அரசியல் தீர்வு கிடைக்கும், அரசியல் அமைப்பு மூலமாக நிரந்தர தீர்வு வழங்கப்படும் என்ற கதைகளைக் கூறிக்கூறி தமிழர்களை எழுபது ஆண்டுகளாக ஏமாற்றி விட்டனர். இந்த நாட்டில் சிறுபான்மை இனத்தவர் அழிவுகளை சந்திக்க ஒரு சூழல் உரு வாக்கியதற்கு ஆட்சியாளர்கள் அனைவரும் வெட்கப்பட வேண்டும் என மக்கள் விடுதலை ...
வடக்கு, கிழக்கில் சிவில் நிர்வாகம் செய்ய வேண்டிய அனைத்து வேலைகளையும் இராணுவமே செய்கின்றது. இந்தநிலையில், அங்கு நீதியான தேர்தல் நடைபெறுவது சந்தேகமே என்று ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார். சிங்கள ஊடகம் ஒன்றுக்கு அளித்த செவ்வியில் அவர் மேலும் தெரிவித்ததாவது, “நாடெங்கும் சிவில் நிர்வாக ...
யாழ்.அராலிப் பகுதியில் வீடொன்றின் கூரைபை பிரித்து உள்நுழைந்து திருடிய சம்பவத்துடன் தொடர்புடையவர் என சந்தேகிக்கப்படும் ஒருவரை கோப்பாய் பொலிஸாரின் மோப்ப நாய் ரொக்கியின் உதவியுடன் பொலிஸார் கைது செய்துள்ளனர். குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அராலிப் பகுதியில் நேற்று முன்தினம் வீட்டின் கூரையை ...
கிளிநொச்சி செல்வாநகர் பகுதியில் மூன்று இலட்சத்து 18 ஆயிரம் ரூபாய் பணம் மற் றும் ஒரு கிலோ கேரள கஞ்சாவுடன் நேற்று முற் பகல் 11 மணியளவில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். கிளிநொச்சி முல்லைத்தீவு பிராந்திய பிரதி பொலிஸ்மா அதிபரின் விசேட பொலிஸ் பிரிவுக்கு கிடைத்த இரகசிய தகவலுக்கு ...
இலங்கை முழுவதும் கொரோனாப் பரிசோதனை மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அனைத்து மாவட்டங்களிலும் தெரிவு செய்யப்பட்டவர்களுக்கு கொரோனாப் பரி சோதனை மேற்கொள்வதற்கு சுகாதார அமைச்சு தீர்மானித்துள்ளது. இந்த மாவட்டங்களின் மக்கள் தொகைக்கு ஏற்ப இந்த சோதனைகள் மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் சமூகத்திற்குள் பரவியுள்ளதா என்பதை அறிய இந்த சோதனைகள் ...
எமக்காகத் தம்மை அர்ப்பணித்தவர்களின் பெயரால் உண்மையாகவும் ஒற்றுமை உணர்வுடனும் நேர்மையாகவும் தூய அரசியலை முன்னெடுத்து எமது நிலைப்பாடுகளை அஞ்சாது வலியுறுத்தி முன்னேறக் கூடியவர்களை எமது பிரதிநிதிகளாகத் தெரிவு செய்வோம். எமக்கு தற்காலிகமாக வழங்கப்படும் சலுகைகளுக்காகவும் இலஞ்சத்திற்காகவும் எமது கடமையிலிருந்து விலகி விட முடியாது என்று தமிழ் மக்கள் பேரவை ...
நாடளாவிய ரீதியிலுள்ள அனைத்துப் பாடசாலைகளிலும் தரம் 11 , 12 மற்றும் 13ஆம் தரத்தில் கல்வி பயிலும் மாணவர்களுக்கு இன்று திங்கட்கிழமை கற்பித்தல் நட வடிக்கைகள் ஆரம்பமாகவுள்ளன. எனினும் இராஜாங்கனைப் பிரதேசத்திலுள்ள பாடசாலைகள் ஆரம்பிக்கப்படமாட்டாது. கொரோனா வைரஸ் பரவலினால் சுமார் 3 மாத காலம் விடுமுறை வழங்கப்பட்டிருந்த நிலையில் ...
காணாமல் ஆக்கப்பட்டோர் விடயத்தில் புதிதாக தெரிவு செய்யப்படுகின்ற பாராளுமன்ற உறுப்பினர் கள் எங்கள் போராட்டத்திற்கும் கவலைகள், கண்ணீருக்கும் காலம் தாழ்த்தாது நீதியை பெற்றுத்தர வேண்டும் என மன்னார் மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் தெரிவித்துள்ளனர். மன்னாரில் நேற்று சனிக்கிழமை காலை இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு ...
அரசியல் ரீதியான கருத்தரங்குகள், கலந்துரையாடல்கள், சந்திப்புகள், விருந்துகள் ஆகியவற்றில் தேர்தல் கடமைகளில் ஈடுபடும் அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் கலந்து கொள்வதை தவிர்க்கும் அவசியத்தை சுட்டிக்காட்டி தேர்தல் ஆணைக்குழு ஊடக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் வீடுகள் அல்லது மண்டபங்களில் ஒழுங்கு செய்யப்படும் இப்படியான வைபவங்கள் அல்லது ...