யாழ்.நாவற்குழி – விகாரை அமைந்துள்ள காணியில் பிறி தொரு கட்டடத்தை அமைப் பதற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு நேற்று நடைபெற்றது. விகாரைக்கு தேவையான கட்டடம் ஒன்றை அமைப்பதற் காகவே இவ்வாறு கட்டடம் அமைக்கப்பட்டதாக கூறப்படுகின்றது. ஏற்கெனவே விகாரை அமைப்பதில் எழுந்துள்ள சர்ச்சைகளை மக்களும் அரசியல்வாதிகளும் மறந்த நிலையில் புதிதாக ...
வவுனியாவில் நாய்க்கடிக்கு இலக்காகி வவுனியா வைத்திய சாலையில் சிகிச்சைக்காக அனு மதிக்கப்பட்ட குடும்பஸ்தர் ஒருவர் சிகிச்சை பலனின்றி நேற்று மதியம் மரணமடைந்துள்ளார். அவருக்கு தவறுதலான தடுப்பூசியை ஏற்றியமையாலேயே மரணம் ஏற்பட்டதாக அவரது உறவினர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர். குறித்த சம்பவம் தொடர்பாக இறந்தவரது உறவினர்கள் கருத்து தெரிவிக்கையில், வவுனியா மகாறம்பைக்குளம் ...
வவுனியா ஓமந்தை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நொச்சிமோட்டை பகுதியில் ஒரே குடும்பத்தினை சேர்ந்த நால்வர் குளவிக் கொட்டுக்கு இலக்காகிய நிலையில் அதில் சிகிச்சை பலனின்றி 3 வயது சிறுமி ஒருவர் மரணமடைந்துள்ளார். நொச்சிமோட்டையில் உள்ள அவர்களது விவசாயக் காணியில் நேற்று மதியம் 12.30 மணியளவில் குளவிக் கொட்டுக்குள்ளான சம்பவம் இடம்பெற்றுள்ளது. ...
இலங்கையில் மாடுகளை வெட்ட தடை விதிக்கும் தீர் மானத்துக்கு பெரமுனவின் பாராளுமன்றக் குழு ஒப்புதல் வழங்கியுள்ளது. பிரதமர் மகிந்த ராஜபக்வினால் முன்மொழியப்பட்ட குறித்த திட்டத்துக்கு பெரமுன வினர் ஆதரவு வழங்கியுள்ளனர். மாட்டிறைச்சி தேவை ஏற்படின் வெளிநாட்டில் இருந்து மாட்டிறைச்சி இறக்குமதி செய் வது குறித்த வேலைத்திட்டம் ஒன்றை உருவாக்கலாம் ...
கூமாங்குளம் கிராம சேவையாளர் பிரிவுக்குட்பட்ட இரண்டாம் குறுக்குத்தெரு வீதியில் இளம் குடும்பஸ்தரின் சடலத்தினை பொலிஸார் மீட்டெடுத்துள்ளனர். நேற்று மாலை 5.00 மணியளவில் இடம்பெற்ற இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், 22 வயதுடைய ரஞ்சித் வசந் என்ற இளைஞன் திருமணம் முடித்து மனைவியுடன் கூமாங்குளம் இரண்டாம் ஒழுங்கை பகுதியில் வசித்து ...
மோட்டார் சைக்கிளில் பயணித்த இளம் குடும்பப் பெண் விபத்துக்குள்ளாகி படுகாய மடைந்து சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்துள்ளார். இந்தச் சம்பவத்தில் தெல்லிப்பழை பகுதியைச் சேர்ந்த பிரதீபன் சதீனா (வயது – 38) என்ற மூன்று பிள்ளைகளின் தாயே உயிரிழந்தவராவார். இந்தச் சம்பவம் தொடர்பில் ...
இரத்தினக்கல் மற்றும் தங்க ஆபரணக் கைத்தொழிலாளர்கள் ஈட்டும் இலாபத்தின் மீது விதிக்கப்பட்டிருந்த 14 சதவீத வருமானவரி மற்றும் 15 சதவீத தங்க இறக்குமதி வரிகளை நீக்குவதற்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தீர்மானம் மேற்கொண்டுள்ளார். “1971ஆம் ஆண்டு முதல் தங்கம் மற்றும் ஆபரணக் கைத்தொழிலுக்கு வழங் கப்பட்டிருந்த வரிச்சலுகை 2017ஆம் ...
பாதுகாப்பு செயலாளர் மேஜர் ஜெனரல் கமால் குணரட்னவால் எழுதப்பட்ட பாதாளயோ (பாதாள உலகத்தினர்) என்ற நாவலும் கோட்டாபய என்ற நூலின் ஆங்கிலப் பிரதியும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் கையளிக்கப்பட்டது. உண்மையான பல நிகழ்வுகளை அடிப்படையாகக் கொண்டு பாதாளயோ என்ற நாவல் எழு தப்பட்டுள்ளது. கோட்டாபய என்ற சிங்கள நூல் ...
நவகமுவ, கொத்தலாவல பகுதியில் வீட்டுச்சுவர் இடிந்து வீழ்ந்ததில் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்ததுடன் இருவர் காயமடைந்தனர். இச் சம்பவம் நேற்று முன்தினம் இடம்பெற்றது. காயமடைந்தவர்கள் மலாபேயில் உள்ள தனியார் வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
ஆலயத்துக்குச் சென்று விட்டு வீடு திரும்பிய பெண்ணொருவரின் 2 பவுண் நிறையுடைய தங்கச் சங்கிலி மோட்டார் சைக்கிளில் வந்த வழிப்பறி கொள்ளையரினால் கொள்ளையிடப்பட்டுள்ளது. நேற்று ஞாயிற்றுக்கிழமை கொடிகாமம் இராமாவில் பகுதியில் பிற்பகல் 1.30 மணி யளவில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. இராமாவில் முருகன் ஆலயத்தில் இடம்பெற்ற சங்காபிஷேக நிகழ்வுக்கு சென்று ...