உயர்பதவிகளில் இருக்கக்கூடிய அதிகாரிகள் தற்துணிவு உடையவர்களாகவும் தமது பதவிகளை மக்கள் பணிக்காகப் பயன்படுத்தக் கூடியவர்களாகவும் இருக்க வேண்டும். மாறாக, தமக்குக் கிடைத்த பதவி இறை வனால் தரப்பட்டது என்ற நினைப்பும் இறை வனால் தரப்பட்ட பதவியை மக்கள் தொண்டு செய்வதற்குப் பயன்படுத்த வேண்டும் என்ற மனத்திடமும் இருக்க வேண்டும். ...
கொரோனாத் தொற்று நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணமுள்ளது. நிலைமை எவ்வாறாகுமோ என்ற ஏக்கம் மக்களைப் பீடிக்கத் தொடங்கியுள்ளது. இந்நிலையில் பாடசாலைகளை மூடியும் பொது நிகழ்வுகளை நிறுத்தியும் கொரோனாத் தொற்று ஏற்பட்டுள்ள இடங்களை முடக்கியும் தொற்றைத் தடுக்கின்ற நட வடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. இவ்வாறான நடவடிக்கைகள் எதுவரை நீடிக்கும் என்பது தெரியாத ...
உலகம் முழுவதையும் உலுக்கி நிற்கும் கொரோனாத்தொற்றில் இருந்து மக்களைப்பாதுகாப்பதில் நாடுகள் கடும் பிரயத்தனம் செய்கின்றன. எனினும் தொற்று ஏற்பட்டு ஒரு வருடம் கடந்துவிட்டபோதிலும் கொரோனாவைக் கட்டுப்படுத்த முடியவில்லை என்பதுதான் உண்மை. கொரோனாத்தடை மருந்துகள் கண்டறியப்பட்ட போதிலும் அவை சாதாரண மக்களை வந்தடைவதற்கு இன்னும் சில வருடங்கள் ஆகலாம். தவிர, ...
பரத நாட்டியம் எமக்கு மிக அறிமுகமான கலை. ஆடவல்லானின் திருத்தாண்டவங்கள் பரதத்தினூடாக வெளிப்படுத்தப்படுகின்றன. இதனால் பரத நாட்டியக்கலையைத் தமது பிள்ளைகளுக்குக்கற்பிப்பதில் நம் பெற்றோர்கள் அதிக விருப்பு உடையவர்களாக இருப்பதைக் காண முடியும். இங்கு பரதநாட்டியத்தின் அத்தனை அசைவுகளுக்கும் அடிநாதமாக இருப்பது நட்டுவாங்கம். தாம்… தீம்… தோம்… என்ற உச்சாடனம் ...
பொதுவில் வார்த்தைகள் பெறுமதியானவை. அதிலும் கூறுவோரைப்பொறுத்தும் வார்த்தைகளின் பெறுமானம் உயர்ந்து நிற்கிறது. இஃது எல்லா விடயங்களிலும் இருக்கக்கூடிய ஒன்றுதான். மகாத்மா காந்தி எழுதிய கடிதங்கள், சிறையில் இருந்த ஜவர்ஹலால் நேரு அவர்கள் தன் மகள் இந்திரா காந்திக்கு எழுதிய கடிதங்கள் என்பன ஏகப்பட்ட பெறுமதியுடையவை. குறித்த கடிதத்தின் உள்ளீடு ...
அறத்தைப் போதிப்பதற்காக எழுதப்பட்ட வையே புராண இதிகாசங்கள் ஆகும். இவை இந்து சமயம் சார்ந்த அறநூல்கள். இதுபோல கத்தோலிக்க சமயம் புனித விவிலியத்தின் மூலமாக மனித குலத்தை அறத்தின்பால் வழிப்படுத்துகிறது. பெளத்தத்துக்கு திரிபீடகமும் இஸ்லாத்துக்கு குரானும் தர்ம நூல்களாகும். ஆக, எல்லாச் சமயங்களும் அறத்தைப் போதிக்கின்றன. தாம் போதிக்கின்ற ...
தமிழ் மக்களின் பிரச்சினைக்கு சர்வதேசம் தீர்வு தரும் என்ற எமது நம்பிக்கை மெல்ல மெல்ல பொய்த்துப் போவதைக் காண முடிகின்றது. ஆம், ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் கூட்டத்தொடர்களின் போதெல்லாம் இந்தத்தடவையாவது எங்களுக்கு ஒரு தீர்வு கிடைக்கும் என்று நம்பியிருப்போம். எங்கள் நம்பிக்கையை உசார்படுத்துவது போல கூட்டத்தொடரின் முற்பகுதியில் ...
இன்று மார்ச் 8. சர்வதேச மகளிர் தினம். உலகு வாழ் பெண்களின் உரிமை தொடர்பில் ஓங்கி குரல் எழுப்புவதற்காக உலகத்தால் நிர்ணயிக்கப்பட்ட நாள். பொதுவில் பெண்களின் உரிமைகளை மறுக்கின்ற நாடுகளும் சமயங்களும் இன்னமும் உயிர்ப்புடன் இருக்கவே செய்கின்றன. அதேவேளை ஒரு காலத்தில் நிலவிய பெண்ணடிமைத்தனம் இப்போது எவ்வளவோ அறுபட்டு ...
தமிழர், சிங்களவர், முஸ்லிம்கள் என இந்த நாட்டில் வாழும் மூவின மக்களின் வாழ்வியல் முறைகள், அவர்களின் தொழில் முயற்சிகள், பண்பாட்டு அம்சங்கள், கல்வி மற்றும் சமூக பொருளாதார நிலைமைகள் என்பவற்றை எடுத்து நோக்கும்போது, தொழில்சார் முயற்சிகளில் நம் தமிழ் இனம் பின்னடைவில் இருக்கிறது என்பதை இங்கு கூறித் தானாக ...
தமிழ் மொழியில் அரசன், அரசு, அரசாங்கம் என்ற சொற்பதங்கள் உள்ளார்ந்தமாக வித்தியாசமான பொருளைத் தந்து நின்றாலும் வெளியரங்கில் ஒத்தபொருளை உணர்த்துவதாகவே கொள்ளப்படுகின்றது. முடியாட்சி நிலவிய காலத்தில் அரசன் என்பவனே ஆட்சிக்குரியவன். மக்களின் குறைகளைக் கேட்டறிந்து அந்தக் குறைகளைத் தீர்த்து வைத்து நல்லாட்சியை வழங்குவது அரசர்களின் கடமையாக இருந்தது. எனினும் ...