முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களுடன் நேற்றைய தினம் (04.05.2020) சந்திப் பொன்றை நடத்துவதற்கான அழைப்பை பிரதமர் மகிந்த ராஜபக் விடுத்திருந்தார். இந்தச் சந்திப்பு கலைக்கப்பட்ட பாராளுமன்றத்தை மீளக் கூட்டுவதற்கானதல்ல. மாறாக தேர்தலை நடத்துவதற்கானது. எனினும் பிரதமர் மகிந்த ராஜபக்வின் அழைப்பை ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் சஜித் பிரேமதாஸ தலைமையிலான ...
கொரோனா தொற்றுக்குப் பின்பாக, தமிழ் அரசியல்வாதிகளில் பலர் மெளனம் காக் கின்றனர் போல் தெரிகிறது. சற்று ஆற அமர இருந்து எங்கே இவர்கள் என்று நமக்குள் கேள்வி எழுப்பும் போது கால சூழல்களும் நம் அரசியலைத் தீர்மானிக்கிறதோ என்று எண்ணத் தோன்றும். எது எவ்வாறாயினும் இன்றைய எம் தமிழினத்துக்காக ...
மெய்யியல், வரலாறு, சைவ சித்தாந்தம் என்பவற்றில் புலமைமிக்க பேராசான் ஆ.சபாரட்ணம் அவர்கள் நேற்று முன்தினம் காலமானார் என்ற செய்தி தமிழ் அன்னையை துயரமடையச்செய்துள்ளது. சபாரட்ணம் மாஸ்ரர் மிகப் பெரும் அறிஞர். பண்பாட்டு செழுமையின் பற்றாளர். எவர் மீதும் அன்பு காட்டுகின்ற கனவான். அவரின் அறிவாற்றல் பலரையும் அவர் பால் ...
சமூக சேவைகள் திணைக்களத்தால் 2019ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட சுய அபி மான திட்ட ஆய்வில், யாழ்ப்பாணம் கோண்டாவிலில் அமைந்துள்ள சிவபூமி மனவிருத்தி பாடசாலை அகில இலங்கையில் முதலிடத்தைப் பெற்றுள்ளமை நமக்கெல்லாம் மன நிறைவையும் பெருமையையும் தருவதாகும். செஞ்சொற் செல்வர் கலாநிதி ஆறு.திருமுருகன் அவர்களால் ஸ்தாபிக்கப்பட்ட சிவபூமி அறக்கட்டளை அமைப்பு ...
சர்வதேச தினங்கள் என்ற கட்டமைப்புகள் எழுகை பெறுவதற்குச் சாயலாக இருந்தவை சமய நிகழ்வுகளும் தினங்களுமாகும். உலகில் உள்ள அனைத்துச் சமயங்களும் வருடம் முழுமையிலும் தமக்கான தினங் களைப் பிரகடனப்படுத்தி உள்ளன. சுருங்கக் கூறின் சைவ சமயத்தில் தைப்பொங்கல் சூரியனுக்கு நன்றி கூறுவதற்கானது. நாயன்மார்களின் குருபூசை குருவைப் போற்றுவது. ஆடி ...
கொரோனாத் தொற்றுக் காரணமாக நாட்டின் ஒட்டுமொத்தப் பொருளாதாரமும் வீழ்ச்சி கண்டுள்ளது. இந்த வீழ்ச்சி நிலை உலகம் முழுமைக்கும் பொருந்துமாயினும், அபிவிருத்தியின் உச்சத் தில் இருக்கக்கூடிய நாடுகள் எப்படியும் தங்களின் பொருளாதார தளர்ச்சியை நிவர்த்தி செய்து விடும். ஆனால் இலங்கை போன்ற வறிய நாடுகளால் பொருளாதார வீழ்ச்சியை நிவர்த்தி செய்வதென்பது ...
“தெளிவு” என்ற தமிழ்ச் சொல்லின் மகி மையை பலரும் உணராதிருப்பது வேதனைக் குரியது. தெளிவு என்பது ஒருவரின் நிதானத்தை, அறிவாற்றலை, விடயப் பொருள் மீது அவரி டம் இருக்கின்ற புலமையைச் சுட்டி நிற்பதாகும். இங்கு பேசுவதில், எழுதுவதில், கருத்துரைப்பதில், அச்சுப்பதிப்புச் செய்வதில் என தெளிவு என்ற உயர் சொல், ...
நாட்டில் கொரோனாத் தொற்றைக் கட்டுப் படுத்துவதில் களமிறக்கப்பட்ட படைத்தரப்பின ருக்கு கொரோனாத் தொற்றுப் பரவத் தொடங்கியுள்ளமை மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்துவதில் படையினர் களமிறக்கப்பட்டபோது பல்வேறு விமர்சனங்கள் எழுந்தன. இருப்பினும் படையினரை ஈடுபடுத்தியமை ஏற்றுக் கொள்ளக் கூடியது என்ற கருத்து நிலை கொரோனா கட்டுப்பாட்டுக்குள் வந்த ...
எப்பொருள் யார் யார் வாய்க் கேட்பினும்அப்பொருள் மெய்ப்பொருள் காண்பது அறிவு என்றார் வள்ளுவர் வள்ளுவர் கூறிய குறளின் தத்துவம் மிகவும் உன்னிப்பாகக் கவனிக்கப்பட வேண்டி யதாகும். இங்கு யார் யார் வாய்க் கேட்பினும் என்பது எவை எழுகை பெற்றாலும் அதற்கான உண்மைப் பொருளைக் கண்டறிவதே அறிவு ஆகும் எனப் ...
தற்போது நாட்டில் அமுல்படுத்தப்படும் ஊரடங்குச் சட்டம் கொரோனா தொற்று நோயிலிருந்து மக்களைப் பாதுகாப்பதற்கானதாகும். எனினும் ஊரடங்குச் சட்டத்தை தொடர்ச்சியாக நீண்ட நாட்கள் அமுல்படுத்துவதற்கான சட்ட ஏற்பாடுகள் எதுவும் இருப்பதாகத் தெரியவில்லை. ஆக, சட்ட வரையறைகளுக்குள் உட்படாத ஊரடங்குச் சட்டத்தை மக்கள் கடைப்பிடிக்க வேண்டும் என்ற நியதிக்குப் பின்னால் நியாயமான ...