காலம் தவறாமை ஜனநடமாட்டம் அதிகமில்லாத ஒரு சாலை அதிலே காந்திஜி ஒருநாள் வேகமாக நடந்து போய்க் கொண்டிருந்தார். குஜராத் வத்தியா பீடத்தின் நிர்வாக சபைக் கூட்டம் நடக்கப் போகிறது. அதிலே காந்திஜியும் கலந்துகொள்ள வேண்டியவர். அவரை அழைத்துக்கொண்டு வர, வண்டி உரிய நேரத்திலே போய்ச் சேரவில்லை! வண்டி வரவில்லை ...
ஏற்றுக்கொள்ளுங்கள் நம்மிலே சிலபேர் எப்படி என்றால், அவர்களுக்கு எதிரிலே உள்ளவர்கள் அனைவரும் எதிரியாகத் தெரிவார்கள்! பார்ப்பதற்கு முழுப் பகையாகத் தெரியும். குறை எங்கேயிருக்கிறது என்று நினைக்கிறீர்கள்? வெளியிலே இல்லை! அவர்களிடம்தான் இருக்கு! ஏற்றுக் கொள்கின்ற சுபாவம் இல்லை என்றால் இது மாதிரி சிக்கல்கள் இருக்கத்தான் செய்யும். உன்னைச் சுற்றி ...
தைரியம் ஒரு சின்ன பையன் என்னைத் தேடி வந்தான். “மாமா! ஒரு கதை சொல்லுங்கள்!” என்றான். “சொந்தமாக எதுவும் தெரியாதே!” என்றேன். “உங்களுக்கு சொந்தமாக எதுவும் தெரியாது என்பது எங்களுக்கும் தெரியும்!” என்றான். இந்த பையன் அடிக்கடி என்னிடம் வந்து கதை கேட்கிறவன். அதனாலே என்னுடைய இரகசியம் எல்லாம் ...
அன்பும் ஆணவமும் ஒரு பெரிய மா மரம் கம்பீரமாக நின்றுக்கொண்டிருந்தது. அதிலே நிறைய பூக்கள், கனிகள், பறவைகள். ஒரு சின்னப் பையன் அந்த மரத்தடியிலே விளையாடுவது வழக்கம். அந்த மரத்துக்கு அந்தப் பையன் மேலே ஒரு பாசம் உண்டாக ஆரம்பித்து விட்டது. பையன் அந்த மரத்திலே உள்ள பூக்களைப் ...
அளவுக்கு மிஞ்சினால் …! அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு என்று சொல்லுவார்கள். அது உண்மைதான். ஒருவருக்கு அளவுக்கு மீறிய புகழ் வந்து விட்டது என்று வையுங்கள். அதுகூட ஆபத்தாகப் போய்விடுகிறது. பழங்காலத்திலேயெல்லாம் கிரேக்க தேசத்திலே ஒரு பழக்கம் உண்டாம். அதாவது யாராவது ஒருவரை நாடு கடத்த வேண்டும் என்று ...
எதிர்மறை மனோபாவம்! “கல்யாணத்துக்குப் போய் இருந்தாயே. எப்படி இருந்தது?” என்று கேட்டார் ஒருவர்.“எப்படி இருந்தது. இரசத்திலே உப்புக் குறைவு!” என்றார் அவர். இது ஒரு மனித சுபாவம். negative விடயங்களை பார்ப்பது பேசுவதினாலேதான் மனிதனுக்கு ஆர்வம் அதிகம். இரசத்திலே உப்பு குறைவு என்பது ஒரு குறைதான். ஆனால் சாம்பாரிலே ...
நிரந்தர ஏதிரிகள் ஒரு நண்பன் எதிரியாக ஆகிவிடுறது சகஜம், எதிரி நண்பனாக ஆகுறதும் சகஜம். நேற்று வரைக்கும் நன்றாகப் பேசிக் கொண்டிருந்தவன் இன்றைக்குத் திடீர் என்று பேச்சை நிறுத்திக் கொள்வான். இன்றைக்கு வரைக்கும் விரோதியாக இருந்தவன் நாளைக்குத் திடீர் என்று வந்து ஒட்டிக் கொண்டு நண்பனாகி விடுவான். இது ...
கருவியை விழுங்கலம்! ஒரு டாக்டரிடம் போகிறீர்கள்! வயிறு வலிக்கிறது என்று சொல்கிறீர்கள்! அவர் உங்களை சோதித்துப் பார்க்கிறார்! பார்த்துவிட்டு, ஏதாவது ஒரு மாத்திரையைக் கொடுத்து ‘விழுங்கு!” என்று சொன்னால் விழுங்கி விடுவீர்கள்! மாத்திரைக்குப் பதிலாக டாக்டர் ஒரு ‘தையல் மிஷினை”க் கொடுத்து அதை விழுங்கு என்று சொன்னால் என்ன ...