நாம் அனைவரும் இலங்கையர்கள் என, வார்த்தைக்கு முந்நூறு தரம் பேசும் பெரும்பான்மை அரசியல்வாதிகள் அதை நூறு விகிதம் கடைப்பிடிக்கின்றனரா எனின் அது கேள்விக்குறியே? சிறுபான்மையினர் எனின் அவர்கள் அடங்கிப் போபவர்களாக இருக்க வேண்டும் என்று நினைப்பது எவ்வளவு மோசமானது என்பது ஏனோ அவர்களுக்குப் புரியவில்லை. இந்த நாடு பெரும்பான்மைச் ...
மீண்டும் பயங்கரவாதத் தடைச்சட்டம் தமிழினத்தின் கழுத்தை இறுக்கத் தொடங்கி விட்டது. பயங்கரவாதத் தடைச்சட்டம் என்பது முற்றுமுழுதாக தமிழினத்தின் மீது பிரயோகிக்கப்படுவதற்காக உருவாக்கப்பட்டது என்பதில் மாற்றுக் கருத்தேதும் இல்லை. ஒருவர் பங்கரவாதத் தடைச் சட்டத்தில் கைது செய்யப்படுகிறார் எனின், அவரை நீதிமன்றத்தில் முற்படுத்தாமல் எத்தனை நாட்களேனும் தடுப்புக் காவலில் வைத்து ...
இந்து மதம் ஆதியும் அந்தமுமில்லா மதம். மனித வாழ்வின் ஒப்பற்ற ஒழுக்கத்தின் மூலமாக விளங்குகிறது அது. அப்பேற்பட்ட நல் ஒழுக்கம் நிறைந்த இந்து மதத்தைத் பின்பற்றி தோற்றம் பெற்றதே பௌத்தம். ஆம், கௌதம புத்த பெருமான் கொல்லாமை, திருடாமை, காம வெறியின்மை, பொய்யாமை, குடியாமை (மது அருந்தாமை) போன்ற ...
மே 18. முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் எழுச்சிப் பிரவாகத்துடன் நடந்து முடிந்திருக்கிறது. முள்ளிவாய்க்கால் தமிழின அழிப்பின் இறுதி அத்தியாயம் என்றே கூற வேண்டும். தமிழ் மக்களின் உயிர்களை துச்சமென்றெண்ணி அவர்களைக் கொன்றொழித்து வெற்றி வாகை சூடியதாய் பால் சோற்றுக்குள் பகுத்தறிவைப் புதைத்தனர் சிங்கள பேரினவாத சக்திகள் சிலர். இலங்கையில் போர் ...
உயிர்காத்த உணவு வலிசுமந்த நினைவாக்கப்பட்டது மே-18 தமிழினத்தின் வலிசுமந்த நாள். எம் இனத்தை ஒட்டுமொத்தமாய் அழித்தொழித்து வென்றுவிட்டோம் என்று பெரும்பான்மை ஆட்சியாளர்கள் கொக்கரித்த நாள். என்று இலங்கைக்கு சுதந்திரம் கிடைத்ததோ அன்றிலிருந்து இன அழிப்பு ஆரம்பமாகிவிட்டது. காலணித்துவ ஆட்சியாளர்களிடமிருந்து சுதந்திரத்தைப் பெற்றுவிட்டு தமிழினத்தின் சுதந்திரத்தைப் பறித்த வரலாற்றை தமிழினம் ...
31 ஆண்டுகள் சிறைவாசியாக நீதிமன்றப் படிகளில் ஏறி, இறங்கிய பேரறிவாளன், இப்போது வழக்கறிஞராக நீதிமன்றப் படிகளில் ஏறி இறங்கிக்கொண்டிருக்கிறார். கர்நாடகாவில் சட்டம் பயின்ற அவர், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞராகப் பணியாற்றுவதற்காக, தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சிலில் பதிவு செய்திருக்கிறார். அவரிடம் இந்தப் பயணம் குறித்து ஜூனியர் ...
எதிர்க்கட்சியாய் இருந்தால் ஆளும் கட் சியை எதிர்க்க வேண்டும். விமர்சிக்க வேண்டும். அவர்கள் ஊழல்வாதிகள் எனப் பேச வேண்டும். அதை நிரூபிப்பதால் நாலு விடயங்களை எடுத்து விட வேண்டும். இவற்றைக் கடந்து எதிர்கட்சிக்கு மிக முக்கியமானது ஆளும்கட்சியின் பலத்தை இல்லாதொழித்து அதைப் பலமிழக்கச் செய்து தாம் ஆட்சிபீடம் ஏறுவதற்கான ...
ஒற்றுமையீனம் தொடர்பில் ஒரு சிறிய கதை, மூன்று பாத்திரங்களில் கொஞ்ச நண்டுகள் உயிருடன் விடப்பட்டிருக்கின்றன. முதல் இரண்டு பாத்திரங்களின் வாய்ப்பகுதி மூடப்பட்டிருந்தது. மூன்றாவது பாத்திரத்தின் வாய்ப்பகுதி மட்டும் மூடப்படவில்லை. ஆயினும் அந்தப் பாத்திரத்திலிருந்த எந்த நண்டுகளும் வெளியே வரவில்லை. இதைக் கண்ட ஒரு நபர் கேட்கிறார். ஏன் முதல் ...
காலணித்துவ ஆட்சியின் கீழ் அடிமையாய் இருந்த இலங்கைக்கு சுதந்திரம் கிடைத்ததன் பின்னர் அழகிய இலங்கைத் தீவில் சிங்களவர், தமிழர், முஸ்லிம்கள் அனைவரும் ஒன்றாக வாழலாம். அழகிய வளம் பல நிறைந்த இலங்கையின் கேந்திர நிலையம் மிக முக்கியமானதென்பதால், அபிவிருத்தி அடைந்த நாடாக இலங்கை மாறும் என அனைவரும் எண்ணிக்கொண்டனர். ...
2009ஆம் ஆண்டு வன்னிப் பெருநிலப்பரப்பு மொத்தமும் சுக்கு நூறாக்கப்பட்டது. தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் கொல்லப்பட்டு விட்டார். விடுதலைப் புலி உறுப்பினர் பலர் போரில் கொல்லப்பட்டு விட்டனர். உயிர்பிழைத்தவர்கள் படையினரிடம் சரணடைந்தனர். நாற்பது ஆண்டு காலமாக இந்த நாட்டில் புரையேறிக் கிடந்த பயங்கரவாதம் கூண்டோடு அழிக்கப்பட்டது. இனி ...