கிர்கிஸ்தானில் பொதுத் தேர்தல் முடிவுகளை ரத்து செய்யக்கோரி தலைநகர் பிஷ்கெக்கில் உள்ள மத்திய சதுக்கத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டு பிரமாண்ட போராட்டம் நடத்தினர். மத்திய ஆசிய நாடுகளில் ஒன்றான கிர்கிஸ்தானில் கடந்த ஞாயிற்றுக்கிழமை பொதுத் தேர்தல் நடைபெற்றது. 120 உறுப்பினர்களைக் கொண்ட பாராளுமன்றத்திற்கு 16 கட்சி களைச் சேர்ந்த ...
நாட்டில் கொவிட் -19 வைரஸ் பரவலின் இரண்டாம் அலை உருவாகியுள்ளது அச்சுறுத்தல் என்றாலும் கூட இப்போது முழு நாட்டினையும் முடக்க வேண்டிய அவசி யம் இல்லை எனத் தெரிவித்த சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி, நோயாளர் அடையாளம் காணப்படும் எண்ணிக்கைக்கு அமையவே ஊரடங்குச் சட்டத்தை பிறப்பிப்போம் என்றும் சுட்டிக்காட்டினார். ...
க.பொ.த உயர்தரம் மற்றும் தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை என்பன ஏற்கனவே தீர்மானிக்கப் பட்ட தினத்தில் நடைபெறும் என கல்வி அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார். தகவல் திணைக்களத்தில் நேற்று நடைபெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றியபோதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். தற்போது நாட்டில் மீண்டும் கொரோனா அச்சுறுத்தல் ...
கல்கந்த தனிமைப்படுத்தப்படுத்தல் மையத்தில் அனுமதிக்கப்பட்ட பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். யக்கலவைச் சேர்ந்த 64 வயதான பெண்ணொருவரே உயிரிழந்துள்ளார். அந்த பெண்ணின் மகளுக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதையடுத்து தனிமைப்படுத்தல் மையத்திற்கு குறித்த பெண் கொண்டு செல்லப்பட்டார். தனிமைப்படுத்தல் மையத்திற்கு சென்ற 10 நிமிடங்களில் அந்தப் பெண் இறந்துவிட்டதாக ...
மினுவாங்கொட ஆடை தொழிற்சாலையில் பணியாற்றிய நிலையில் யாழ்.புங்குடுதீவுக்கு 30ஆம் திகதி வந்த பெண்ணுடன் பிறந்தநாள் நிகழ்வில் கலந்து கொண்ட 384 பேர் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தனிமைப்படுத்தப்பட்டிருக்கின்றனர். மினுவாங்கொட ஆடை தொழிற்சாலையில் பணியாற்றிய நிலையில் யாழ். புங்குடுதீவுக்கு வந்திருந்த இரு பெண்களில் ஒரு பெண் கொரோனா தொற்றுக்குள்ளானார். இதேவேளை மற்றைய ...
யாழ்.ஓட்டுமடம் பகுதியில் உள்ள வீடொன்றுக்குள் புகுந்த வாள்வெட்டுக் குழு வீட்டின் மீது தாக்குதல் நடத்தி விட்டு தப்பிச் சென்றுள்ளது. குறித்த சம்பவம் நேற்று பிற்பகல் இடம் பெற்றுள்ளது. வாள்கள், கம்பிகளுடன் வந்த 4 பேர் கொண்ட கும்பல் வீட்டில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்கள் மீதும் வீட்டிலிருந்த பொருட்கள் மீதும் ...
கம்பஹா மினுவாங்கொட கொரோனா தொற்று கொத்தணியில் மேலும் 196 பேருக்கு தொற்று இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இதையடுத்து, கடந்த மூன்றரை நாட்களில் மினுவாங்கொட தொற்றுப் பகுதியில் இருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ள தொற்றாளர்களின் எண்ணிக்கை 1028 ஆக அதிகரித்துள்ளது. முன்னதாக நேற்று முன்தினம் 729 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் ...
கம்பஹா மாவட்டத்தில் மேலும் 12 பொலிஸ் பிரிவுகளில் நேற்று மாலை 6 மணிக்கு நடைமுறைக்கு வரும் வகையில் பொலிஸ் ஊரடங்குச் சட்டம் நடைமுறைப்படுத்தப்படுகிறது என்று விடுத்த அறிவிப்பை பொலிஸ் தலைமையகம் மீளப்பெற்றுள்ளது. கம்பஹா, கிரின்டிவெல, தோம்பே, பூகோட, வீரகுல, கனேமுள்ள, வெலிவேரிய, மல்வத்முகிரிபிட்டிய, நிட்டம்புவ, மீரிகம, பல்லேவெல மற்றும் ...
ஐ.பி.எல். போட்டி தொடரில் சி.எஸ்.கே. அணி கப்டன் எம். எஸ்.டோனி விக்கெட் கீப்பராக 100 கட்சுகள் பிடித்து சாதனை படைத்துள்ளார். ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி கள் ஐக்கிய அமீரகத்தில் நடந்து வருகின்றன. இதில் சென்னை சுப்பர் கிங்ஸ் அணியின் கப்டன் எம்.எஸ். டோனி புதிய சாதனை படைத்துள்ளார். கிங்ஸ் ...
மருத்துவத்துக்கான நோபல் பரிசு அமெரிக்கா மற்றும் பிரிட்டனைச் சேர்ந்த 3 விஞ்ஞானிகளுக்கு பகிர்ந்து அளிக்கப்படும் என நோபல் குழு அறிவித்துள்ளது. மருத்துவம், இயற்பியல், வேதியியல், பொருளாதாரம், அமைதி, இலக்கியம் ஆகிய துறைகளில் மகத்தான சாதனை படைத்தவர்களுக்கு ஆண்டு தோறும் நோபல் பரிசுகள் வழங்கி கௌரவிக்கப்படுகின்றன. உலகின் மிக உயரிய ...