கொரோனாத் தொற்று நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணமுள்ளது. நிலைமை எவ்வாறாகுமோ என்ற ஏக்கம் மக்களைப் பீடிக்கத் தொடங்கியுள்ளது. இந்நிலையில் பாடசாலைகளை மூடியும் பொது நிகழ்வுகளை நிறுத்தியும் கொரோனாத் தொற்று ஏற்பட்டுள்ள இடங்களை முடக்கியும் தொற்றைத் தடுக்கின்ற நட வடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. இவ்வாறான நடவடிக்கைகள் எதுவரை நீடிக்கும் என்பது தெரியாத ...
உலகம் முழுவதையும் உலுக்கி நிற்கும் கொரோனாத்தொற்றில் இருந்து மக்களைப்பாதுகாப்பதில் நாடுகள் கடும் பிரயத்தனம் செய்கின்றன. எனினும் தொற்று ஏற்பட்டு ஒரு வருடம் கடந்துவிட்டபோதிலும் கொரோனாவைக் கட்டுப்படுத்த முடியவில்லை என்பதுதான் உண்மை. கொரோனாத்தடை மருந்துகள் கண்டறியப்பட்ட போதிலும் அவை சாதாரண மக்களை வந்தடைவதற்கு இன்னும் சில வருடங்கள் ஆகலாம். தவிர, ...
பரத நாட்டியம் எமக்கு மிக அறிமுகமான கலை. ஆடவல்லானின் திருத்தாண்டவங்கள் பரதத்தினூடாக வெளிப்படுத்தப்படுகின்றன. இதனால் பரத நாட்டியக்கலையைத் தமது பிள்ளைகளுக்குக்கற்பிப்பதில் நம் பெற்றோர்கள் அதிக விருப்பு உடையவர்களாக இருப்பதைக் காண முடியும். இங்கு பரதநாட்டியத்தின் அத்தனை அசைவுகளுக்கும் அடிநாதமாக இருப்பது நட்டுவாங்கம். தாம்… தீம்… தோம்… என்ற உச்சாடனம் ...
பொதுவில் வார்த்தைகள் பெறுமதியானவை. அதிலும் கூறுவோரைப்பொறுத்தும் வார்த்தைகளின் பெறுமானம் உயர்ந்து நிற்கிறது. இஃது எல்லா விடயங்களிலும் இருக்கக்கூடிய ஒன்றுதான். மகாத்மா காந்தி எழுதிய கடிதங்கள், சிறையில் இருந்த ஜவர்ஹலால் நேரு அவர்கள் தன் மகள் இந்திரா காந்திக்கு எழுதிய கடிதங்கள் என்பன ஏகப்பட்ட பெறுமதியுடையவை. குறித்த கடிதத்தின் உள்ளீடு ...
அறத்தைப் போதிப்பதற்காக எழுதப்பட்ட வையே புராண இதிகாசங்கள் ஆகும். இவை இந்து சமயம் சார்ந்த அறநூல்கள். இதுபோல கத்தோலிக்க சமயம் புனித விவிலியத்தின் மூலமாக மனித குலத்தை அறத்தின்பால் வழிப்படுத்துகிறது. பெளத்தத்துக்கு திரிபீடகமும் இஸ்லாத்துக்கு குரானும் தர்ம நூல்களாகும். ஆக, எல்லாச் சமயங்களும் அறத்தைப் போதிக்கின்றன. தாம் போதிக்கின்ற ...
மேல் மாகாணத்தை தவிர்ந்த நாட்டின் அனைத்து மாகாணங்களிலும் உள்ள அனைத்து தர வகுப்புக்களைக் கொண்ட பாடசாலைகள் எதிர்வரும் 15ஆம் திகதி மீண்டும் திறக்கப்படும் என்று கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார். இதற்கமைவாக பாடசாலைகளை மீண்டும் திறப்பதற்கான திட்டத்தில் எந்தவித மாற்றமும் இல்லையென்றும் அமைச்சர் கூறினார். மேல் மாகாண ...
வடக்கு, கிழக்கு உள்ளிட்ட சில பகுதிகளில் நேற்று இரவு திடீர் மின்தடை ஏற்பட்டது. நேற்றிரவு 7.00 மணி முதல் இரவு 9 மணி வரை திடீர் மின்தடை ஏற்பட்டது. யாழ்ப்பாணம், வவுனியா, மன்னார், முல்லைத்தீவு, கிளிநொச்சி, திருகோணமலை, மட்டக்களப்பு உள்ளிட்ட நாட்டின் மேலும் சில பகுதிகளிலும் முன்னறிவிப்பின்றி மின்தடை ...
யாழ்.போதனா வைத்தியசாலை மற்றும் யாழ்.பல்கலைக்கழக ஆய்வுகூடங்களில் நேற்று மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனைகளில் 23 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். யாழ்.போதனா வைத்தியசாலையில் 22 பேரும் யாழ். பல்கலைக்கழக ஆய்வு கூடத்தில் ஒருவரும் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர் என்று வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் தெரிவித்துள்ளார். யாழ்.போதனா வைத்தியசாலைத் தரவுகளின் ...
யாழ்.கந்தர்மடம், மணல் தறை ஒழுங்கையில் ஓய்வுபெற்ற ஆசிரியை ஒருவர் வீட்டுக்குள் நுழைந்த கொள்ளையர்கள் கத்தி முனையில் வீட்டிலிருந்த தங்க நகைகள் மற்றும் பணம் ஆகியவற்றை கொள்ளையடித்து சென்றுள்ளனர். குறித்த சம்பவம் நேற்று முன்தினம் இரவு 10.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது. வீட்டின் வெளிப்புறத்தில் இருந்த மின்குமிழை அகற்றிய கொள்ளையர்கள் பின்னர் ...