ஏப்ரல் மாதத்தில் தமது ஓய்வூதிய சம்பளத்தை பெற்றுக் கொள்ளும் ஓய்வூதிய சம்பள உரிமையாளர்களின் ஓய்வூதிய சம்பளத்தை அவர்களது வீட்டுக்கே கொண்டு சென்று ஒப் படைக்கும் வேலைத் திட்டம் தற்பொழுது தபால் திணைக்களத்தின் பணியாளர்களினால் ஆரம்பிக்கப்பட்டிருப்பதாக தபால்மா அதிபர் ரஞ்சித் ஆரியரத்ன தெரிவித்துள்ளார். இதற்கமைவாக, ஓய்வூதிய சம்பளத்துக்கு உரித்தானவர்கள் அரசாங்கத்தினால் ...
கொரோனா தடுப்பு நடவடிக்கைக்கு ஆட்கள் பற்றாக்குறை எழுந்துள்ளது என்றால் பட்டதாரிப் பயிலுநர்களை பயன்படுத்துவதற்கு பதிலாக சம்பளத்துடன் வீட்டில் இருக்கும் அரச ஊழியர்களை பயன்படுத்துங்கள் என தேர்தல்கள் ஆணைக்குழு அரசுக்கு ஆலோசனை வழங்கியுள்ளது. தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மகிந்த தேசப்பிரிய அரசுக்கு அனுப்பி வைத்துள்ள கடிதத்தில் பட்டதாரிப்பயிலுநர்களை பணிக்கு அமர்த்துவது ...
கொரோனா வைரஸ் தொற்றுக் குள்ளாகி சிகிச்சை பெற்று வந்த 58 வயதுடைய ஒருவர் நேற்று வியாழக்கிழமை இரவு உயிரிழந்துள்ளார். இதன்மூலம் இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றால் உயிரிழந்தவர்களின் எண் ணிக்கை 4ஆக அதிகரித்துள்ளது. கொழும்பு தொற்று நோயியல் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்தவரே இவ்வாறு உயிரிழந்தார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
அச்சுவேலியைப் பிறப்பிட மாகவும் பிரான்ஸில் பொண்டியை வசிப்பிடவுமாகவும் கொண்ட நாகமுத்து உதயபாஸ்கரன் என்பவர் கொரோனா வைரஸால் நேற்று முன்தினம் செவ்வாய்கிழமை உயிரிழந்துள்ளார். இதேவேளை, இவரது மகன் ஒருவரும் கொரோனா தொற்றிற்கு இலக்காகி மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வருகின்றார் என உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.
கொரோனா வைரஸ் பரவலுடன் நாட்டில் உருவாகியுள்ள நிலைமை குறித்து அரசுக்கும் ஐக்கிய தேசிய கட்சிக்கும் இடையில் நேற்று சிறப்புக் கலந்துரையாடல் நடைபெற்றது. இந்தக் கலந்துரையாடல் தொடர்பில் ஜனாதிபதி ஊடகப் பிரிவு அனுப்பிவைத்த செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, மக்கள் வாழ்க்கையை சுமுகமாக பேணுவதற்கு அத்தியாவசிய சேவைகள், உணவுப் பொருள்கள், மருந்துப் ...
அவசர தேவைக்குரிய மருந்துகளை பொதுமக்கள் பெற்றுக் கொள்வதற்கு வசதியாக இன்று ஏப்ரல் 2ஆம் திகதி நாளை 3ஆம் திகதி மற் றும் 6ஆம் திகதி ஆகிய தினங்களில் அனை த்து மருந்தகங்களையும் திறப்பதற்கு சுகாதார அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது. குறித்த தினங்களில் அனைத்து மருந்தகங்களையும் திறப்பதற்கு அனுமதியளித் திருப்பதாக ...
யாழில் கொரோனா வைரஸ் தொற்று அதிகரித்துள்ளதால் ஓய்வூதியர்கள் எவரும் வங்கிக்கு செல்ல வேண்டாம் என அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. ஓய்வூதியர்கள் வங்கிகளுக்கு செல்வதற்கான ஏற்பாடுகள் இடம்பெற்றுள்ளன. ஆனால் யாழில் கொரோனா தொற்று அதிகரித்துள்ளதால் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் வைரஸ் தொற்றுக்கு உள்ளாவதற்கு அதிக சந்தர்ப்பங்கள் ...
மதபோதகர் உட்பட யாழில் நால்வருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. சுவிஸ் போதகருடன் அரியாலை தேவாலயத்தில் நெருங்கிப் பழகியவர்களுக்கே கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதன்மூலம் யாழ்ப்பாணத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4ஆக அதிகரித்துள்ளது. யாழ்ப்பாணம் பலாலி தனிமைப்படுத்தல் நிலையத்தில் தங்கவைக்கப்பட்டிருந்த மானிப்பாய் கிறிஸ்தவ தேவாலயத்தைச் சேர்ந்த மத போதகருக்கு ...
கொழும்பு ஐ.டி.எச் வைத்தியசாலையில் உயிரிழந்த யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த கொரோனா நோயாளி தொடர்பில் யாழ்.மக்கள் அச்சமடையத் தேவையில்லை. இருந்தாலும் அவதானமாக இருக்க வேண்டுமென யாழ்.பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் இ.தேவநேசன் தெரிவித்தார். நீர்கொழும்பை வசிப்பிடமாகக் கொண்ட இறந்த கொரோனா நோயாளி யாழ்.நகர்ப் பகுதியில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்து ...
அடுத்த இரண்டு வாரங்களில் கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை நூற்றுக்கணக்கில் அதிகரிக்கலாம் என வைத்திய பரிசோதனை சபையின் பணிப்பாளர் வைத்தியர் ஜெயருவான் பண்டார இந்த எச்சரிக்கையினை விடுத்துள்ளார். இதுகுறித்து கருத்து வெளியிட்டுள்ள அவர், “ஆரம்பத்தில் ஒருவர் இருவர் என்ற வகையில் நாட்டில் கொரோனா தொற்றாளர்கள் கண்டறியப்பட்டனர். முதலில் இது ஒருவரிடம் ...