முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பு, தேவிபுரம் பகுதியில் தனியார் பால் கொள்வனவு நிலையம் ஒன்றில் பணிபுரிந்த இளைஞன் ஒருவர் மதில் வீழ்ந்து, அதற்குள் அகப்பட்டு உயிரிழந்துள்ளார். ஒட்டுசுட்டான் பகுதியினை சேர்ந்த 23 வயதுடைய சௌந்தராஜன் சயந்தன் என்ற இளைஞனே உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, குறித்த இளைஞன் நேற்று முன்தினம் ...
மன்னார் – மதவாச்சி பிரதான வீதி, பரப்பாங்கண்டன் பகுதியில் நேற்று வியாழக்கிழமை மதியம் 2.30 மணியளவில் இடம் பெற்ற விபத்தில் இரண்டு பெண் சகோதரிகள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். மன்னாரில் இருந்து சென்ற மோட்டார் சைக்கிளும், முருங்கன் பிரதான வீதியூடாக மன் னார் நோக்கி வந்த பிக்கப் ரக ...
யாழில் புத்தாண்டு வரை ஊரடங்கு தொடர்ந்து அமுல்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் ஜனாதிபதி ஊடகப்பிரிவு அனுப்பி வைத்த செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, கொரோனா தொற்று பரவலை கவனத்திற்கொள்ளும் போது இடர்வலயங்களாக இனம் காணப்பட்டுள்ள கொழும்பு, கம்பஹா, களுத்துறை, புத்தளம், கண்டி மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்களில் தற்போது ...
யாழ்ப்பாணம் திருநெல்வேலியிலுள்ள வர்த்தக நிலையமொன்றிற்குள் இளைஞர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். முல்லைத்தீவு, உடையார்கட்டை சேர்ந்த சுதாகரன் சுபீகன் (வயது-17) என்ற இளைஞனே சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இறப்பு எப்படி நிகழ்ந்தது என்பது தொடர்பான தகவல் வெளியாகாததால் பொலிஸார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இலங்கையில் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 7 ஆக அதிகரித்துள்ளது. கொழும்பு தொற்று நோயியல் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த 48 வயதான நபரே நேற்று உயிரிழந்துள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 07 அதிகரித்துள்ளதாக அமைச்சு குறிப்பிட்டுள்ளது. இலங்கையில் கொரோனா வைரஸ் ...
யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இளம் யுவதி ஒருவர் கொரோனா வைரஸ் தொற்றுக் காரணமாக பிரான்ஸில் நேற்றுக் காலை உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணம் நீராவியடிப் பகுதியைச் சேர்ந்த உமாசுதன் சாம்பவி (வயது-31) என்பவரே கொரோனா வைரஸ் காரணமாக உயிரிழந்தவராவார். தாய், தந்தை இல்லாத நிலையில், திருமணம் செய்து பிரான்ஸ் க்ரீட்டில் பகுதியில் வசித்து ...
நாடுமுழுவதும் உள்ள அனைத்து மருந்தகங்களையும் நாளை வியாழக்கிழமை திறப்பதற்கான அனுமதியை வழங்க அரசு தீர்மானித்துள்ளது. அதனடிப்படையில் நாளை வியாழக்கிழமை காலை 9 மணி தொடக்கம் மாலை 5 மணிவரை அனைத்து மருந்தகங்களும் திறப்பதற்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளது.
தென் கொரியாவில் கொரோனாவில் இருந்து பூரண குணமடைந்து திரும்பிய 51 பேருக்கு மீண்டும் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. தென் கொரியாவில் மிக மோசமாக பாதிக்கப்பட்டிருந்த தேகு நகரிலேயே குறித்த சம்பவம் பதிவாகியுள்ளது. இதில் நோயாளிகளுக்கு நோய் பரவிய தல்ல எனவும் அவர்களுக்குள் இருந்த வைரஸ் மீண்டும் செயற்பாட்டுக்கு ...
கொரோனா வைரஸ் பரவலானது எதிர்வரும் இரு வார காலத்துக்குள் இரு மடங்காக அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுவதால் தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள விதிமுறை களும் கட்டுப்பாடுகளும் மேலும் கடுமையாக்கப்பட வேண்டும் என சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி அறிவுறுத்தல் விடுத்துள்ளார். கொரோனா வைரஸ் பரவல் குறித்து, சுகாதாரம் மற்றும் சுதேச வைத்திய ...
கொரோனா வைரஸைக் கட்டுப்படுத்துவதற்கான முறையான நடவடிக்கைகளை அரசாங்கம் பின்பற்றாவிட்டால் நோய்த் தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை ஆயிரக்கணக்கில் அதிகரிக்கும் வாய்ப்புள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் எச்சரித்துள்ளது. மேலும் வைரஸ் பரவலை முழுமையாக கட்டுப்படுத்துவது எளிதல்ல என்றும் சுட்டிக்காட்டியுள்ளது. நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண நிலை தொடர்பாக கருத்துத் தெரிவித்துள்ள அரச ...