தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய் தலைமையில் இன்றைய தினம் தமிழ்நாடு அமைச்சரவை விரிவாக்கம் மேற்கொள்ளப்படவுள்ளது. தமிழக முதலமைச்சராக ஜோசப் பதவியேற்றதன் பின்னர் தமிழக வெற்றிக் கழகத்தைச் சேர்ந்த ஆனந்த், ஆதவ் அர்ஜுனா, அருண்ராஜ், செங்கோட்டையன், வெங்கட்ராமன், நிர்மல்குமார், ராஜ்மோகன், பிரபு, கீர்த்தனா ஆகியோர் அமைச்சர்களாக பதவியேற்றனர். முதலமைச்சர் உள்ளிட்ட ...
இபோலா வைரஸ் தாக்கத்தை கட்டுப்படுத்துவதற்குரிய தடுப்பூசியை தயாரிக்க மேலும் 9 மாதங்கள் தேவைப்படுமென உலக சுகாதார ஸ்தாபனம் தெரிவித்துள்ளது. இதனால் குறித்த காலப்பகுதிக்குள் இபோலா வைரஸ் தாக்கத்தினால் ஏற்படும் பாதிப்புகள் மற்றும் உயிரிழப்புகள் அதிகரிக்கக்கூடுமென குறித்த ஸ்தாபனம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இபோலா வைரசை கட்டுப்படுத்தும் திறன் கொண்டதென நம்பப்படும் ...
வரதட்சணை கொடுமை காரணமாக யாழில் 19 வயது இளம் குடும்பப் பெண்ணொருவர் தற்கொலை செய்துகொண்டுள்ளார். யாழ் – நாவாந்துறை பகுதியில் சம்பவம் இடம்பெற்றுள்ளது. தான் இரு வருடங்களாக காதலித்த நபரை நான்கு மாதங்களுக்கு முன்னர் குறித்த பெண் திருமணம் செய்துள்ளார். எனினும் கணவனின் தாயார் பெண்ணை ஏற்றுக்கொள்ளாத நிலையில் ...
செப்டம்பர் மாதம் வரை மின்சாரக் கட்டணத்தை உயர்த்துவதற்கு பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவிடம் எவ்வித கோரிக்கையும் முன்வைக்கப்படமாட்டாது என துறைமுக, சிவில் விமான சேவைகள் மற்றும் எரிசக்தி அமைச்சர் அருண கருணாதிலக தெரிவித்தார். பாராளுமன்றத்தில் இன்று (21) ரவி கருணாநாயக்க எழுப்பிய வாய்மூல வினாவுக்குப் பதிலளிக்கும் போதே அமைச்சர் இதனைக் ...
ஏறாவூர் பொலிஸ் பிரிவிலுள்ள மிச்சிநகர், ரெட்பானா வீதியிலுள்ள காணி ஒன்றில் வீடு கட்டுவதற்காக, நேற்று (20) அத்திவாரம் தோண்டும்போது, நிலத்தில் புதைத்து வைக்கப்பட்டிருந்த பழுதடைந்த கைத்துப்பாக்கி மற்றும் வாள் ஒன்றை மீட்டுள்ளதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்ததாக எமது செய்தியாளர் தெரிவித்தார். குறித்த காணியில் நேற்று பிற்பகல் 2.00 மணியளவில் ...
அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் மதிப்பு இன்றைய தினம் (21) மேலும் வீழ்ச்சியடைந்துள்ளது. இதற்கமைய, இன்றைய தினம் அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை விலை 354 இலங்கை ரூபாயைக் கடந்துள்ளதுடன், அது 354.03 ரூபாயாகப் பதிவாகியுள்ளது. அதேநேரம், இன்றைய தினம் அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்வனவு விலை ...
தேசிய கலைக்கூடத்திலிருந்து 42 பழங்கால ஓவியங்கள் காணாமல் போயுள்ளதாக புத்தசாசன, மத மற்றும் கலாசார விவகாரங்கள் அமைச்சர் ஹிநிதும சுனில் செனவி தெரிவித்துள்ளார். இன்று (21) பாராளுமன்றத்தில் வாய்மூல விடைக்கான வினாக்கள் வேளையில் பதிலளித்த போதே அமைச்சர் இதனைக் குறிப்பிட்டார். பண்டங்கள் கணக்கெடுப்புச் சபை ஒன்றின் மூலம், கடந்த ...
இந்த வருடத்தின் இதுவரையிலான காலப்பகுதியில் 128 காட்டு யானைகள் உயிரிழந்துள்ளதாக வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்களம் தெரிவித்துள்ளது. கடந்த ஜனவரி முதலாம் திகதி முதல் மே 15 ஆம் திகதி வரையிலான காலப்பகுதியிலேயே இந்த காட்டு யானைகளின் மரணங்கள் பதிவாகியுள்ளதாக அத்திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. அவற்றில், துப்பாக்கிச் சூட்டுக் காயங்களினால் 20 ...
அமெரிக்க டொலரின் பெறுமதி அதிகரிப்பினால் பேருந்து கட்டணத்தை அதிகரிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர் சங்கம் தெரிவித்துள்ளது. இதனால் ஆகக்குறைந்த கட்டணம் 40 ரூபாவுக்கும் அதிகளவில் உயர்த்தப்படக்கூடும் என அதன் தலைவர் கெமுனு விஜேரத்ன நேற்று (20) ஊடகங்களிடம் தெரிவித்துள்ளார். நாடு தற்போது பாரிய ...
நேற்று (20) நள்ளிரவு முதல் பால் தேநீரின் விலையை 5 ரூபாவினால் அதிகரிப்பதற்கு சிற்றுண்டிச்சாலைகள் மற்றும் உணவக உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது. இறக்குமதி செய்யப்படும் பால்மாவின் விலை அதிகரிப்பின் காரணமாக இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அதன் தலைவர் ஹர்சன ருக்ஷான் தெரிவித்துள்ளார். இறக்குமதி செய்யப்படும் பால்மாவின் விலைகளை அதிகரிப்பதற்குத் ...