மினுவாங்கொட ஆடைத் தொழிற்சாலை தொற்றாளர்களுடன் தொடர்புடைய மேலும் 19 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து கம்பஹா கொத்தணி கொரோனா தொற்று மொத்த எண்ணிக்கை ஆயிரத்து 53 ஆக அதிகரித்துள்ளதாக இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார்.
யாழ்ப்பாணத்தில் அண்மைய நாட்களில் இடம்பெற்ற வாள் வெட்டு வன்முறைகளுடன் தொடர்புடைய ஒருவர் சிறப்பு அதிரடிப் படையினரால் நேற்று கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேகநபரிடம் கைப்பற்றப்பட்ட அலைபேசியில், பிரான்ஸில் தங்கியுள்ள நவாலியைச் சேர்ந்த ஒருவரால் பல வன்முறைச் சம்பவங்களை அங்கிருந்து கொண்டு இயக்குவதற்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளன என்று பொலிஸார் குறிப்பிட்டனர். அத்துடன், ...
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கலைப்பீட இரண்டாம் மற்றும் மூன்றாம் ஆண்டு மாணவர்கள் இடையே ஏற்பட்ட மோதல் உச்சக்கட்டத்தையடைந்த போது சமரச முயற்சியில் துணைவேந்தர் பேராசிரியர் எஸ்.சிறீசற்குணராஜா மற்றும் பல்கலை நிர்வாகம் ஈடுபட்டபோது அங்கு பதற்றநிலை ஏற்பட்டது. இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, நேற்றைய தினம் மாலை பல்கலைக்கழக மாணவர்கள் சிலருக்கிடையில் ...
கொவிட் – 19 வைரஸ் பரவல் காரணமாக நாட்டை முழுமையாக முடக்க வேண்டிய தீர்மானங்கள் ஏதும் இதுவரையில் எடுக்கப்படவில்லை. பொதுமக்கள் அச்சம் கொண்டு அத்தியாவசிய உணவுப் பொருட்களை தேவைக்கு மேலதிகமாக கொள்வனவு செய்வதை தவிர்த்துக் கொள்ள வேண்டும் என வர்த்தகத் துறை அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார். அவர் ...
மினுவாங்கொட ஆடைத் தொழிற்சாலையில் கொவிட்-19 தொற்று ஏற்பட்ட நிலையில் இனங்காணப்பட்ட பெண் முதலாவது தொற்றாளர் அல்ல. முதல் தொற்றாளர் யார், எவ்வாறு தொழிற்சாலையிலுள்ளவர்களுக்கு தொற்று ஏற்பட்டது என்பதை இனங்காண்பதில் நெருக்கடி ஏற்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோய் பிரிவின் பணிப்பாளர் விசேட வைத்திய நிபுணர் சுதத் சமரவீர தெரிவித்தார். ...
கடந்த 2015 தொடக்கம் 2019 வரையில் இலங்கை மின்சாரசபை 181.4 பில்லியன் ரூபாய் நட்டத்தை சந்தித்துள்ளதாகவும், தேசிய மின் உற்பத்தி நிலையங்கள் எதுவும் இந்தக் கால எல்லைக்குள் புனரமைக்கப்படாதமையும், மின்சார கட்டணங்களில் எந்தவித மாற்றங்களும் செய்யாதமை மற்றும் மின்சார சபைக்கு அளவுக்கு அதிகமான ஊழியர்கள் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளமையுமே பிரதான ...
திவுலப்பிட்டிய ஆடைத் தொழிற்சாலையில் பணிபுரியும் சுமார் 1034 பேருக்கு கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் இவர்களில் 528 பேர் மாத்திரம் நேற்று முன்தினம் மாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அத்துடன் திவுலப்பிடியவில் கொரோனாத்தொற்று உறுதிப்படுத்தப்பட்ட 506 பேர் தலைமறைவாகியுள்ளனர் எனவும் தகவல் வெளியாகியுள்ளது. கம்பஹா மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற ...
இரு பெண்களுக்கு 2020 ஆம் ஆண்டின் இரசாயனவியலுக்கான நோபால் பரிசு வழங்கப்பட்டுள்ளது. பிரான்ஸின் இம்மானுவேல் கார்ப்ரன்டியர் மற்றும் அமெரிக்காவின் ஜெனிஃபர் டௌட்னா ஆகியோருக்கே இவ்வாறு இரசாயனவியலுக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டுள்ளது. வெற்றியாளர்கள் 10 மில்லியன் ஸ்வீடிஸ் குரோனர் பரிசுத் தொகையைப் பகிர்ந்து கொள்வார்கள். சுவீடன் தலைநகர் ஸ்டாக்ஹோமில் உள்ள ...
கிர்கிஸ்தானில் பொதுத் தேர்தல் முடிவுகளை ரத்து செய்யக்கோரி தலைநகர் பிஷ்கெக்கில் உள்ள மத்திய சதுக்கத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டு பிரமாண்ட போராட்டம் நடத்தினர். மத்திய ஆசிய நாடுகளில் ஒன்றான கிர்கிஸ்தானில் கடந்த ஞாயிற்றுக்கிழமை பொதுத் தேர்தல் நடைபெற்றது. 120 உறுப்பினர்களைக் கொண்ட பாராளுமன்றத்திற்கு 16 கட்சி களைச் சேர்ந்த ...
நாட்டில் கொவிட் -19 வைரஸ் பரவலின் இரண்டாம் அலை உருவாகியுள்ளது அச்சுறுத்தல் என்றாலும் கூட இப்போது முழு நாட்டினையும் முடக்க வேண்டிய அவசி யம் இல்லை எனத் தெரிவித்த சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி, நோயாளர் அடையாளம் காணப்படும் எண்ணிக்கைக்கு அமையவே ஊரடங்குச் சட்டத்தை பிறப்பிப்போம் என்றும் சுட்டிக்காட்டினார். ...