கொரோனா வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்த இலங்கை மக்களின் பெரும்பாலானவர்கள் மிகப் பெரியளவில் ஒத்துழைப்புகளை வழங்கி வருவதாக கொரோனா தடுப்பு செயலணியின் பிரதானியான இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். வேறு நாடுகளுடன் ஒப்பிடும்போது, இலங்கை மக்கள் கொரோனா தடுப்பு வேலைத் திட்டத்தில் ஈடுபட்டுள்ள அதிகாரிகளுக்கு முழு ஒத்துழைப்புகளையும் வழங்கி ...
யாழ்ப்பாணம் உள்ளிட்ட இடர் வலயங்களை தவிர 19 மாவட்டங்களில் இன்று 10 மணி நேரம் ஊரடங்கு தளர்த்தப்படும் என ஜனாதிபதி செயலகம் அறிவித்துள்ளது. இது தொடர்பில் செயலகம் அனுப்பி வைத்த செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட் டுள்ளதாவது, கொழும்பு, கம்பஹா, களுத்துறை, புத்தளம், கண்டி மற்றும் யாழ்ப்பாணம் தவிர்த்து நாட்டின் ...
கனடாவில் வசித்து வந்த தமிழ் தம்பதியொன்று கொரோனா தொற்றிற்கு இலக்காகி உயிரிழந்த துயரச் சம்பவம் நடந்துள்ளது. கிளிநொச்சியை சேர்ந்த பெண்ணொருவர் கனடாவில் கொரோனா தொற்றினால் கடந்த 13ஆம் திகதி உயிரிழந்திருந்தார். நெடுந்தீவைப் பிறப்பிடமாகவும் வட்டக்கச்சி இராமநாதபுரத்தில் வசித்து, பின்னர் கனடா ரொறன்ரோவில் குடியேறிய புஸ்ப ராணி நாகராஜா (வயது-56) ...
கொழும்புத்துறை பகுதியிலுள்ள பாடசாலை ஒன்றில் திர ட்டு முயற்சியில் ஈடுபட்ட நபர் ஒருவர் அயலவர்களினால் மடக்கிப்பிடிக்கப்பட்டு யாழ். பொலிஸாரிடம் ஒப்படைக் கப்பட்டுள்ளார். இச்சம்பவம் நேற்று இடம்பெற்றுள்ளது. இதேவேளை இப்பாடசாலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பும் திருட்டுச் சம்பவம் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
அமெரிக்காவின் டெட்டிரோய்டின் சினாய் கிரேஸ் வைத்தியசாலையில் உடல்கள் ஒன்றின் மீது ஒன்றாக அடுக்கிவைக்கப்பட்டிருப்பதைக் காண்பிக்கும் படங்கள் வெளியாகின. சினாய் கிரேஸ் வைத்தியசாலையில் அவசர சிகிச்சைப் பிரிவைச் சேர்ந்த பணியாளர்கள் இந்தப் படங்களை வெளியிட்டனர். வைத்தியசாலையின் பல பகுதிகளில் உடல்கள் ஒன்றின் மீது ஒன்றாக அடுக்கி வைக்கப்பட்டிருப்பதை அந்தப் படங்கள் ...
வவுனியா மயிலங்குளம் குளத்தில் மீன்பிடிக்கச் சென்ற குடும்பஸ்தர் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் நேற்று மதியம் இடம்பெற்றுள்ளது. இதில் நகுலேஸ் என்ற நான்கு பிள்ளைகளின் தந்தையான 43 வயதுடையவரே உயிரிழந்துள்ளார். ஆசிகுளம் பகுதியை சேர்ந்தவரான இவர் மீன் பிடிப்பதற்கு சென்ற வேளை குளத்தில் மூழ்கிய நிலையில் அங்கிருந்தவர்கள் ...
விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க சிறைச்சாலையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார். நீர்கொழும்பு, தலுபொத்த பிரதேசத்தில் அமைந்துள்ள இளம் குற்றவாளிகள் சீர்திருத்த நிலையத்தில் கொரோனா வைரஸ் பரிசோதனைக்காக தனிமைப்படுத்தப்பட்டுள்ளார். சிறைத்தண்டனை பெறும் கைதிகள் சிறைக்கு அனுப்பப்பட முன்னர் கொரோனா பரிசோதனைக்கு உட்படுத்தப்படுவது இப் போது நடைமுறையில் உள்ளதால் இந்த ...
வடக்கில் கொரோனா வைரஸ் தொற்று சமூகப் பரவலாக இல்லையெனவும் ஓரளவு பாது காப்பாகவே வட மாகாணம் உள்ளதாகவும் யாழ். போதனா வைத்தியசாலை பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார். இதனால் மக்கள் அச்சமடையத் தேவையில்லை என்பதுடன் விழிப்புடன் இருப்பதும் அவசியம் என அவர் குறிப்பிட்டுள்ளார். வடக்கில் கொரோனா வைரஸ் நிலைமை தொடர்பாக ...
மாகாண மட்டத்தில் கிடைக்கப் பெறும் சுகாதார பரிந்துரைகளை கருத்திற்கொண்டு மாகாண மட்டத்தில் ஊரடங்கை தளர்த்துவது குறித்து தீர்மானிக்கப்படும் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக் தெரிவித்துள்ளார். தேசிய பொருளாதாரத்தை பாதுகாக்கும் வகையில் நாளாந்த பொருளாதார செயற் பாடுகளை உடனடியாக ஆரம்பிக்கக்கூடிய வாய்ப்புகளை கண்டறியும் நோக்குடன் மாகாண மட்டத்தில் தகவல்களை கேட்டறி ...
யாழ்ப்பாணம் கன்னாதிட்டிப் பகுதியில் வீடொன்றில் சட்டத்துக்குப் புறம்பாக மதுபான விற்பனையில் ஈடுபட்டவர் கைது செய்யப்பட்டார் என்று பொலிஸார் தெரிவித்தனர். அவரிடமிருந்து 78 போத்தல்கள் (கால் போத்தல் அளவுடைய) மதுபானம் கைப்பற்றப் பட்டன என்று பொலிஸார் கூறினர். யாழ்ப்பாணம் பிராந்தியத்துக்குப் பொறுப்பான சிரேஷ் பொலிஸ் அத்தியட்சகரின் கீழுள்ள சிறப்புப் புலனாய்வுப் ...