நெல்லியடி நகரில் உள்ள பிரபல வெதுப்பகம் ஒன்றில் பணிபுரியும் ஒருவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்ட நிலையில் வெதுப்பகம் சுகாதாரப் பகுதியினரால் நேற்று திங்கட்கிழமை சீல் வைத்து மூடப்பட்டது. சில தினங்களுக்கு முன்னர் நெல்லியடி நகர் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனை முடிவுகள் நேற்று திங்கட்கிழமை மாலை கிடைக்கப் பெற்றது. ...
கொரோனா விதிகளை மீறி குருந்தூர்மலையில் விகாரை புனருத்தாபனம் இன்று ஆரம்பமாகவுள்ளது. இராணுவத்தினரின் ஏற்பாட்டில் நேற்று இரவோடிரவாக பிரித்ஓதல் நிகழ்வும் இடம்பெற்றது அகழ்வாராய்ச்சி நடைபெற்று வரும் முல்லைத்தீவு தண்ணி முறிப்பு குருந்தூர்மலை பகுதியில் கோவிட் – 19 விதிமுறைகளை மீறி முல்லைத்தீவு பாதுகாப்பு படை தலைமையகத்தின் ஏற்பாட்டில் நூற்றுக் கணக்கான ...
துரிதமாக அதிகரித்து வரும் கொரோனாப் பரவலைக் கட்டுப்படுத்தும் நோக்கில் எதிர்வரும் 30ஆம் திகதி வரை மாகாணங்களுக்கு இடையிலான பயணக் கட்டுப்பாடுகளை விதிப்பதற்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக் அதிரடியாக அறிவித்துள்ளார். ஜனாதிபதியின் ஊடகப் பேச்சாளர் கிங்ஸ்லி ரத்நாயக்க இதனை அறிவித்துள்ளார். கோவிட்-19 பர வலை கட்டுப்படுத்தும் நோக்கில் ஜனாதிபதியால் இந்த ...
யாழ்.பருத்தித்துறை நகர சபை உத்தியோகத்தர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில் நகர சபை முடக்கப்பட்டுள்ளது. நேற்று முன்தினம் வெளியான பி.சி.ஆர் பரிசோதனை முடிவுகளில் நகர சபை உத்தியோகத்தர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டது. இதனையடுத்து சுகாதார முற்பாதுகாப்பு நடவடிக்கையாக நகர சபை முடக்கப்பட்டுள்ளதுடன் ஊழியர்கள் தனிமைப்படுத்தப்பட்டு பி.சி.ஆர் ...
கொரோனாத் தொற்றுக்கு உள்ளான மேலுமொருவர் யாழ்ப்பாணத்தில் உயிரிழந்துள்ளதாக யாழ்.போதனா வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. உடுப்பிட்டியைச் சேர்ந்த 89 வயதுடைய முதியவர் ஒருவர் கொரோனா அறிகுறிகளுடன் தனிமைப்படுத்தலில் இருந்த நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் நேற்று உயிரிழந்துள்ளார். அவருக்கு மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனையில் கொரோனாத் தொற்றுள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. இதனால் ...
யாழ்.மாவட்டத்தில் 15 பேர் உட்பட வடக்கில் 21 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக மாகாண சுகாதாரப் பணிப்பாளர் ஆ.கேதீஸ்வரன் கூறியுள்ளார். இதன்படி தெல்லிப்பழை வைத்தியசாலையில் பி.சி.ஆர் பரிசோதனை மேற்கொண்டிருந்த யாழ்.மாவட்ட செயலக மேலதிக அரச அதிபருக்கு கொரோனாத் தொற்று உறுதிப்படுத்தப்பட்டிருக்கின்றது. மேலும் யாழ்.போதனா வைத்தியசாலையில் 2 பேருக் கும் ...
காலி கராப்பிட்டி மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்றுவந்த மேலுமொரு கர்ப்பிணித் தாயொருவர் கோவிட் தொற்று காரணமாக உயிரிழந்துள்ளார். கோவிட் தொற்றிற்குள்ளான கர்ப்பிணிப் பெண் முல்லேரியா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். அவரது உடல் நிலை மோசமடைந்ததைத் தொடர்ந்து, காலி கராப்பிட்டி மருத்துவமனையின் தீவிர சிகிச்சை பிரிவுக்கு ...
பாடசாலைகளை மீண்டும் திறப்பது தொடர்பாக புதன்கிழமை கலந்துரையாடல் நடத்தப்படவுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. நேற்று அநுராதபுரத்தில் ஊடகங்களிடம் பேசிய அமைச்சர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸ், நாட்டின் கொரோனா வைரஸ் நிலைமை வாரந்தோறும் மதிப்பிடப்படுகிறது. பாடசாலைகள், முன்பள்ளிகள், அற நெறிப் பாடசாலைகள், பல்கலைக்கழகங் கள் மற்றும் கல்வி வகுப்புகள் மீண்டும் ...
வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரியின் தொழிநுட்ப நிறுவனம், நாவற்குழியில் அமைந்துள்ள அரச களஞ்சியக் கட்டடம் என்பவற்றை கோவிட்-19 சிகிச்சை நிலையங்களை அமைப்பதற்கு இராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. அத்துடன், இராணுவத்தின் கட்டுப்பாட்டுப் பகுதியில் உள்ள வசாவிளானில் அமைந்துள்ள கட்டடம் ஒன்றிலும் கோவிட்-19 சிகிச்சை நிலையம் அமைக்கப்படுகிறது. நாட்டில் கோவிட்-19 நோய்த்தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை ...
நாட்டில் கோவிட் – 19 நோய்த் தொற்றால் நேற்று ஒரே நாளில் 2 ஆயிரத்து 672 பேர் பாதிக்கப்பட்டுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது என்று இராணுவத் தளபதி, ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார். நாட்டில் ஒரே நாளில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் தொற்றாளர்களின் அதிகூடிய எண்ணிக்கை இதுவாகும். இதனால் மருத்துவமனைகளில் தொற்றாளர்களை ...