நாடு முழுவதும் மக்கள் நடமாட்டத்துக்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ள நிலையில் நிகழ்வுகளுக்கான திருத்தப்பட்ட புதிய கட்டுப்பாடுகளை சுகாதார அமைச்சு வெளியிட்டிருக்கின்றது. இதன்படி மே 31 வரை திருமண வைபவங்களுக்கு தடை விதிக்கப்பட் டுள்ளதுடன் திருமணப் பதிவாளர் உட்பட 15 பேருடன் பதிவுத் திருமணம் செய்ய அனுமதி வழங்கப்படுவதாக சுகாதார அமைச்சு ...
இன்று இரவு முதல் எதிர் வரும் 31ஆம் திகதி வரை தினமும் இரவு 11 மணி முதல் அதிகாலை 4 மணி வரை நாடு முழுவதும் பயணக் கட்டுப்பாடு விதிக்கப்படவுள்ளதாக இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். எனினும், இக்காலப்பகுதியில் அத்தியாவசிய சேவைகளை முன்னெடுப்பதற்கு எவ்வித தடையும் இல்லை ...
வட மாகாணத்தில் கொரோனா வைரஸ் கட்டுக்கடங்காமல் பரவி வருகின்றது. கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் இருவர் வடக்கில் உயிரிழந்துள்ளனர். நேற்றும் யாழ்.மாவட்டத்தில் 67 பேர் உட்பட வடக்கில் 82 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. யாழ்.மாவட்டத்தில் 67 பேர் உட்பட வடக்கில் 82 பேருக்கு நேற்று கொரோனா தொற்று ...
தீவிரம் பெற்றுவரும் கொரோனாப் பரவலைக் கட்டுப்படுத்தும் நோக்கில் நாட்டிலுள்ள அனைத்து மதுபானசாலைகளும் மாலை 6 மணியுடன் மூடப்பட வேண்டும் என தீர்மானிக்கப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். அதற்கமைய, நேற்று முதல் இந்த நடைமுறை அமுலாக்கப்பட்டுள்ளது எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
தமிழகத்திலிருந்து கடல்வழியாக இலங்கைக்குள் நுழைந்து யாழ்.சுழிபுரத்தில் பதுங்கியிருந்த நபர் சுகாதார பிரிவினர் மற்றும் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டுள்ளார். குறித்த சம்பவம் நேற்று இடம் பெற்றுள்ளது.
இலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி மேலும் 23 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் நேற்றிரவு உறுதிப்படுத்தினார். அதன்படி, நாட்டில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 850 ஆக அதிகரித்துள்ளது. மேலும் நாட்டில் நேற்றும் +2,530 பேர் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளனர்.
இரவு வேளையில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிப்பது தொடர்பில் அரசாங்கம் இதுவரையில் தீர்மானிக்கவில்லை என்று இராணுவ தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். சமூக வலைத்தளங்களில் இன்று (நேற்று) இரவு 11 மணி முதல் நாளை (இன்று) அதிகாலை 4 மணி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்படுவதாக சில சமூகவலைத்தளங்களில் ...
நெல்லியடியில் எழுமாற்றுப் பரிசோதனையில் ஒருவருக்கு தொற்று. புதுக்குடியிருப்பு ஆடைத் தொழிற்சாலையில் எழுமாற்றுப் பரிசோதனை யில் 6 பேருக்கு கொரோனா. சாவகச்சேரி வைத்தியசாலையில் கடமையில் இருந்த பொலிஸாருக்கு தொற்று. யாழ்.மாவட்டத்தில் 35 பேர் உட்பட வடக்கில் 72 பேருக்கு கொரோனாத் தொற்று உறுதிப்படுத்தப்பட்டிருப்பதாக யாழ். போதனா வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன. ...
தொல்லியல் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வந்த முல்லைத்தீவு குருந்தூர் மலையில் இராணுவத்தினரின் ஏற்பாட்டில், பௌத்த துறவிகள், வெலிஓயா சிங்கள மக்களின் வழிபாட்டுடன் இராணுவத்தின் முழுமையான பாதுகாப்புடன் பௌத்த விகாரைக்கான வழிபாடுகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. முல்லைத்தீவு மாவட்டத்தில் சர்ச்சையினை ஏற்படுத்திய குமுழமுனையில் அமையப்பெற்ற குருந்தூர்மலையில் ஆண்டு தொடக்கத்தில் தொல்லியல் திணைக்களத்தினால் அகழ்வாராய்ச்சி பணிகள் ...
கிளிநொச்சி மகா வித்தியாலயத்தில் தரம் ஒன்பதில் கல்வி கற்கும் ஆறு மாணவர்களுக்கு கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன் கிளிநொச்சி மகா வித்தியாலயத்தில் தரம் ஒன்பதில் கல்வி கற்கும் மாணவி ஒருவருக்கு தொற்று ஏற்பட்டிருந்தது. இதனையடுத்து குறித்த வகுப்பில் உள்ள மாணவர்கள் தனிமைப்படுத்தப்பட்டிருந்த நிலையில் ...