கொழும்பில் கொரோனா அபாய வலயமாக அறிவிக்கப்பட்ட பகுதியிலிருந்து யாழ்ப்பாணத்துக்கு பாரவூர்தி மூலம் 8 பேர் தப்பித்து வந்துள்ளனர். குறித்த நபர்களால் யாழ் மாவட்டத்திற்கு கொரோனா வைரஸ் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக யாழ். மாவட்ட அரச அதிபர் மகேசன் எச்சரிக்கை விடுத்துள்ளார். யாழ் மாவட்டத்தில் நேற்று புதன்கிழமை இரவு நடத்திய ...
அவரச தேவைக்காக மட்டுமே ஊரடங்கு தளர்த்தப்பட்டுள்ளது. பொதுமக்கள் அனைவரும் சுகாதார பிரிவினரின் அறிவுறுத்தலை பின்பற்றி நடக்க வேண்டும் என அகில இலங்கை இந்து மாமன்றத்தின் உப தலைவரும் தெல்லிப்பழை ஸ்ரீதுர்க்காதேவி தேவஸ்தானத்தின் தலைவருமான கலாநிதி ஆறு. திருமுருகன் வேண்டுகோள் விடுத்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், உலகம் முழுவதும் வாழும் ...
நாட்டிலுள்ள அனைத்து மதுபான விற்பனை நிலையங்களையும் உடனடியாக மூடுமாறு அரசாங்கம் உத்தரவு பிறப்பித்துள்ளது. நாட்டின் சில மாவட்டங்களில் ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்பட்ட பின்னர் நேற்று முன் தினம் மதுபான விற்பனை நிலையங்களை திறப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டிருந்தது. எனினும், மறு அறிவித்தல் வரையில் மதுபான விற்பனை நிலையங்களை மூடுமாறு அரசாங்கம் ...
கொழும்பில் நோயாளிகளின் எண்ணிக்கை திடீரென அதிகரித்ததன் காரணமாக மே 11 அன்று பாடசாலைகளை மீண்டும் ஆரம்பிக்கும் முடிவை அரசாங்கம் மறுபரிசீலனை செய்யவுள்ளது. இது குறித்து ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய பிரத்தியேக பேட்டியில் கருத்து தெரிவித்த அமைச்சர் பந்துல குணவர்தன, பாடசாலைகள் மற்றும் பல்கலைக்கழகங் களை மீண்டும் திறப்பது ...
கொரோனா அச்சம் முழுமையாக நீங்கும்வரை பொதுத் தேர்தல் நடத்தப்படாது என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மகிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். ஜூன் மாதம் 20 ஆம் திகதியை பொதுத் தேர்தலுக்கான திகதியாக தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ள நிலையில் திகதியை மீள் பரிசீலனை செய்யுமாறு அரசி யல் கட்சிகள் தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு ...
தண்ணீர் தொட்டிக்குள் தவறி விழுந்த சிறுமி ஒருவர் மூச்சுத்திணறி உயிரிழந்துள்ளார். இச் சம்பவம் நேற்று மாலை 6.00 மணி யளவில் மல்லாவி யோகபுரம் மேற்கு பகுதியில் இடம்பெற்றுள்ளது. இதில் அதே இடத்தைச் சேர்ந்த ராகுலன் துசானி (வயது 4) என்ற சிறுமியே உயிரிழந்துள்ளார். இது தொடர்பில் பொலிஸார் மேலதிக ...
எதிர்வரும் இரண்டு வாரங்களுக்கு மக்கள் மிகவும் அவதானமாக இருக்க வேண்டுமென மருத்துவ ஆய்வு நிறுவனம் அறிவுறுத்தல் வழங்கியுள்ளது. கொரோனா வைரஸ் தொற்று மிக மோசமாக சமூகத்தில் பரவாத போதிலும் எதிர்வரும் இரண்டுவாரங்களிலும் மக்கள் மிகுந்த அவதானத்துடன் இருக்க வேண்டுமென மருத்துவ ஆய்வு நிறுவனத்தின் பணிப்பாளர் டொக்டர் ஜயருவன் பண்டார ...
சுகாதார அதிகாரிகளால் வழங்கப்பட்ட சுகாதார பாதுகாப்பு வழி முறைகளைக் கடைப்பிடிக்காமல், அதிகளவு பயணிகளை ஏற்றிச் சென்ற அனைத்து பஸ் சாரதிகள், நடத்துநர்கள் பற்றிய தகவல்களைத் திரட்டு மாறு போக்குவரத்து அமைச்சு உத்தரவிட்டுள்ளது. போக்குவரத்து அமைச்சர் மகிந்த அமரவீரவால் அமைச்சின் செயலாளர் காமினி செனவிரத்னவுக்கு, இது குறித்து பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது. ...
கொரோனா வைரஸ் அச்சம் காரணமாக ஒத்திவைக்கப்பட்ட பாராளுமன்ற பொதுத் தேர்தல் ஜூன் மாதம் 20ஆம் திகதி இடம் பெறும் என தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. தேர்தலுக்கான விசேட வர்த்தமானி அறிவிப்பு நேற்று நள்ளிரவு வெளியாகியது. பாராளுமன்ற தேர்தல் வரும் 25ஆம் திகதி என முன்னர் அறிவிக்கப்பட்டு வர்த்தமானி அறிவிப்பு ...
பலாலி தனிமைப்படுத்தல் நிலையத்தில் கண்காணிப்பிலிருந்த நிலையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி வெலிகந்த வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த நான்கு, முழுமையாகக் குணமடைந்து இன்று வீடு திரும்பினர். ஆண்கள் இருவரும் பெண்கள் இருவருமே இவ்வாறு முழுமையாகச் சுகமடைந்த நிலையில் வெலிகந்தை வைத்தியசாலையிலிருந்து யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை அம்புலன்ஸில் ...