அம்பாறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் சட்டவிரோத மதுபான விற்பனையுடன் தொடர்புடைய ஒருவரைக் கைது செய்யச் சென்றபோது துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. நேற்று (17) இரவு இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதுடன், பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் இந்தச் சோதனையை மேற்கொண்ட போது, சந்தேகநபர் உத்தியோகத்தர்களின் கடமைக்கு இடையூறு விளைவித்து அவர்கள் ...
யுத்த வெற்றியின் 17ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு, “தேசிய வெற்றி விழா நினைவு நிகழ்வு” கடந்த ஆண்டுகளைப் போலவே பாரம்பரிய முறைப்படி நாளை (19) நடைபெறவுள்ளது. ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க தலைமையில், பத்தரமுல்லையில் அமைந்துள்ள இராணுவ நினைவிடத்திற்கு முன்பாக இந்த நினைவு நிகழ்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ...
யுத்தம் முடிவடைந்து 17 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள போதிலும் ஈழத்து தமிழ் உறவுகளுக்கு இதுவரை நீதி கிடைக்கவில்லை என தென்னிந்திய பிரபல திரைப்பட நடிகர் நிழல்கள் ரவி கவலை வெளியிட்டுள்ளார். முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் குறித்து கருத்து தெரிவிக்கும் போதே, அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார். பெரும்பான்மையின அரசின் அடக்குமுறையை எதிர்த்து ...
இலங்கையின் ரப்பர் பயிர்ச்செய்கைத் துறையை திறன்மிக்க மற்றும் தரமான நிலைக்கு உயர்த்தும் நோக்கில், ரப்பர் அபிவிருத்தி திணைக்களத்திற்கு 41 புதிய ரப்பர் அபிவிருத்தி அதிகாரிகள் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளனர். பெருந்தோட்ட மற்றும் சமூக உள்கட்டமைப்பு அமைச்சின் வழிகாட்டலின் கீழ் இந்த புதிய அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். இந்த புதிய அதிகாரிகளுக்கான நியமனக் ...
மானிப்பாய் – சங்குவேலி பகுதியில் சுவிட்சர்லாந்தில் இருந்து வந்த முதியவர் ஒருவர் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளதுடன், பெருந்தொகை நகை மற்றும் பணம் கொள்ளையிடப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சுவிஸ் நாட்டில் இருந்து இரண்டு மாதங்களுக்கு முன்பு வந்த 66 வயதுடைய வள்ளிபுர சந்திரசேகர் எனும் முதியவர், சங்குவேலியில் ...
உலக சந்தையில் கச்சா எண்ணெயின் விலை மீண்டும் உயர்வடைந்துள்ளது.இதற்கமைய பிரென்ட் ரக ஒரு பீப்பாய் கச்சா எண்ணெய் இன்றைய தினம் 110.70 டொலராக பதிவாகியுள்ளது. கடந்த 5ம் திகதியின் பின்னர் பதிவான அதிக விலை உயர்வு இதுவாகும். WTI கச்சா எண்ணெயின் விலை 107.26 டொலராக காணப்படுகிறது. அமெரிக்க ...
தேசிய மக்கள் சக்தியின் காலி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் டி.கே ஜயசுந்தர பயணித்த கெப் ரக வாகனம், முச்சக்கரவண்டி ஒன்றுடன் மோதி விபத்துக்குள்ளானதில் இருவர் காயமடைந்துள்ளனர். இந்த விபத்தில் முச்சக்கரவண்டியின் சாரதி மற்றும் 8 வயது சிறுவனும் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். குறித்த விபத்து ஹினிதும, ஹபரகடை ...
தாய்லாந்தின் தலைநகரான பேங்கொக்கில் சரக்கு ரயில் மீது பேருந்து மோதிய விபத்தில் 8 பேர் உயிரிழந்துள்ளதாகவும் 20க்கும் அதிகமானோர் படுகாயமடைந்துள்ளதாகவும் அந்நாட்டு பொலிஸார் தெரிவித்துள்ளனர். மத்திய பகுதியிலுள்ள விமான நிலைய ரயில் இணைப்பு நிலையம் அருகே, பிற்பகலில் இந்த விபத்து நடந்ததாக தாய்லாந்து செய்திகள் தெரிவிக்கின்றன. விபத்தின்போது எடுக்கப்பட்ட ...
மத்திய கிழக்கு ஆபிரிக்காவில் அமைந்துள்ள நாடு கொங்கோ. இந்நாட்டில் எபோலா வைரஸ் நோய் தீவிரமாக பரவி வருகிறது. கடந்த 2018-ம் ஆண்டு ஏற்பட்ட எபோலா தொற்று பரவல் காரணமாக கொங்கோவில் சுமார் 1,000 பேர் உயிரிழந்தனர். தற்போது மீண்டும் எபோலா வைரஸ் கொங்கோவில் வேகமாக பரவிவருகிறது. தற்போது எபோலா ...
மாலத்தீவில் கடலுக்கு அடியில் உள்ள ஆழமான குகை ஒன்றை ஆய்வு செய்யும் முயற்சியில் ஈடுபட்ட இத்தாலி நாட்டைச் சேர்ந்த சுற்றுச்சூழல் பேராசிரியை, அவரது மகள் உட்பட 5 நீச்சல் வீரர்கள் (Divers) மூச்சுத்திணறி பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். இத்தாலியின் புகழ்பெற்ற ஜெனோவா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த சுற்றுச்சூழல் பேராசிரியை மோனிகா மான்டெ ...