பாராளுமன்றத் தேர்தலுக்கான 17 மில்லியன் வாக்குச்சீட்டுக்களை அச்சிடும் பணி நேற்று ஆரம்பமாகியுள்ளதாக அரசாங்க அச்சுத் திணைக்களம் தெரிவித்துள்ளது. தேர்தல் திகதி மற்றும் பாராளுமன்ற கலைப்புக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட அனைத்து மனுக்களையும் தள்ளுபடி செய்து ஐந்து பேர் கொண்ட உயர் நீதிமன்ற நீதிபதிகள் குழாம் நேற்று மாலை உத்தரவிட்டது. ...
பாராளுமன்றப் பொதுத் தேர்தல் ஓகஸ்ட் மாதம் முதல் வாரத்தில் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. சுகாதார அதிகாரிகளுடன் கலந்துரையாடிய பின்னர் உத்தியோகபூர்வமான திகதி இன்று அறிவிக்கப்படும் என்று தேர்தல்கள் ஆணைக்குழுத் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஜூன் 20ஆம் திகதி பொதுத் தேர்தலை நடத்துவதற்கான அறிவிப்பை விடுத்து தேர்தல்கள் ஆணைக்குழுவால் வெளியிடப்பட்ட அதி ...
கோண்டாவில் காரைக்கால் பகுதியில் நேற்று இரவு இடம்பெற்ற வாள்வெட்டில் இளைஞர் ஒருவர் படுகாயமடைந்துள்ளார். இரண்டு தரப்புக்கு இடையே நீடித்து வந்த மோதலே நேற்று வாள்வெட்டுச் சம்பவமாக மாறியது என்று சுன்னாகம் பொலிஸார் தெரிவித்தனர். காரைக்காலைச் சேர்ந்த குழு ஒன்று மற்றொரு குழுவை நேற்று முன்தினம் தாக்கியுள்ளது. அதற்குப் பழிதீர்க்கும் ...
வவுனியா ஈச்சங்குளம் பகுதியில் உள்ள வீட்டு காணியிலிருந்து வெடிபொருட்களை ஈச்சங்குளம் பொலிஸார் நேற்றைய தினம் மீட்டுள்ளனர். இச் சம்பவம் தொடர்பாக தெரியவருவதாவது, வவுனியா ஈச்சங்குளம் – சாளம்பன் பகுதியில் உள்ள தனியார் காணியை அதன் உரிமையாளர் உழவியந்திரம் மூலம் பண்படுத்தியுள்ளார். இதன்போது, சந்தேகத்திற்கிடமான பொருட்கள் இருப்பதை அவதானித்து வீட்டு ...
சாவகச்சேரி நகர்ப்பகுதியில் 32 மில்லி கிராம் கெரோயின் போதைப் பொருளுடன் ஒருவர் சாவகச்சேரி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். இச் சம்பவம் நேற்றுக்காலை இடம்பெற்றுள்ளது. இதில் நாவற்குழி பகுதியைச் சேர்ந்த நபர் ஒருவரே கைது செய்யப்பட்டதாக சாவகச்சேரி பொலிஸார் தெரிவித்தனர். இது தொடர்பான விசாரணைகள் பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
நாடு இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அறிவித்துள்ளார். கண்டியில் நேற்று ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்த முன்னாள் ஜனாதிபதி, எதிர்வரும் பொதுத் தேர்தலை இலக்காகக் கொண்டு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் ஸ்ரீலங்கா சுதந்திர பொதுஜன பெரமுனவும் பிரச்சாரத்தை முன்னெடுக்க தயாராக உள்ளது என்றும் தெரிவித்தார். கொரோனா ...
எமது உரிமைகளை நாம் பெற்றுக்கொள்வதை யாராலும் தடுக்க முடியாது. ஜனாதிபதி கோட்டாபய வினாலும் தடுக்க முடியாது. ஆயுதப் போராட்டம் பழைய கதை. அதைப்பற்றி பேசி பலனில்லை. இப்போது நாம் ஜனநாயகத்தின் அடிப்படையில், மனித உரிமைகளின் அடிப்படையில் பயணிக்கிறோம் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். நேற்று ...
முகநூல் காதலியைப் பார்க்கச் சென்ற இளைஞரை வழி மறித்து தாக்குதல் நடத்தியகும் பல் ஒன்று அவரிடம் இருந்து கைத்தொலைபேசி மற்றும் ஒரு தொகை பணத்தினையும் பறித்துச் சென்றுள்ளனர். கொக்குவில் பொற்பதிப்பகுதியில் நேற்று நடந்துள்ளதாக கோப்பாய்ப் பொலிஸார் தெரிவித்தனர். இச்சம்பவத்தில் இளைஞருடைய தலையில் காயம் ஏற்பட்டுள்ளது என்றும், சிகிச்சைக்காக அவர் ...
மட்டுவில் சரசாலைப் பகுதியில் நேற்று அதி காலை 3 மணியளவில் ஊரடங்கு அமுலில் இருந்த வேளை திருட்டு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. குறித்த சம்பவம் மட்டுவில் பன்றித் தலைச்சி அம்மன் ஆலய பிரதம சிவாச்சாரியார் வீட்டில் அதிகாலை இடம்பெற்றுள்ளது. அயலில் உள்ள ஆலயத்தில் அலங்கார திருவிழா இடம்பெற்றுவரும் நிலையில் ...
யாழ்.போதனா வைத்தியசாலையில் உள்ள இரத்த வங்கியில் கடந்த சில வாரங்களாக தேவையான குருதி போதிய அளவில் கிடைக்கவில்லை என யாழ். போதனா வைத்தியசாலைப் பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி தெரிவித்தார். இதனால் குருதிக் கொடையாளர்கள் இரத்ததானம் செய்வதற்கு முன்வர வேண்டும் என்று அவர் கோரிக்கை விடுத்துள்ளார். இவ்விடயம் தொடர்பில் அவர் மேலும் ...