யாழ்.சாவகச்சேரிப் பகுதியில் போதைப்பொருளுடன் ஓட்டம் காட்டிய இளைஞனை பொலிஸார் விரட்டிச் சென்று மடக்கிப் பிடித்துள்ளனர். சாவகச்சேரி நகரத்தில் நேற்றுப் பிற்பகல் இந்த சம்பவம் நடந்தது. போதைப்பொருளுடன் வந்த இளைஞன் ஒருவர், பொலிஸாரைக் கண்டதும் ஓட்டம் பிடிக்க ஆரம்பித்தார். அவரை குறிவைத்து நின்ற சிவில் உடை பொலிஸார், இளைஞனை விரட்டினார்கள். ...
தேர்தல் சட்டங்களை மீறிய குற்றச்சாட்டில் இதுவரை ஆறு வேட்பாளர்கள் கைது செய்யப் பட்டுள்ளனர் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர். தேர்தல் சட்ட மீறல்களை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கை களை விரிவுபடுத்த பொலிஸார் முடிவு செய்துள்ளதாக தேர்தல் தொடர்பான நடவடிக்கைகளுக்குப் பொறுப்பான மூத்த பிரதி பொலிஸ்மா அதிபர் பிரியந்த விஜேசூரிய குறிப்பிட்டார். இதற்காக, ...
இலங்கையின் மூத்த குடிகள் தமிழ் மக்களே என நீதியரசர் விக்னேஸ்வரன் வெளியிட்ட அறிக்கை தொடர்பாக பொலிஸார் நேற்று அவரிடம் இரண்டு மணிநேரம் தீவிர விசாரணை செய்தனர். கொழும்பிலிருந்து விடப்பட்ட உத்தரவின் பேரில் நல்லூரில் உள்ள அவரது அலுவலகத்தில் வைத்து இந்த விசாரணை இடம்பெற்றது. விக்னேஸ்வரனின் அறிக்கை இனங்களிற்கிடையில் முறுகலை ...
நீதியரசர் சி.வி.விக்னேஸ்வரன் தலை மையிலான தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் தேர்தல் பரப்புரைக் கூட்டம் நேற்று வல்வெட்டித் துறை ரேவடி உல்லாசக் கடற்கரை மைதானத்தில் இடம்பெற்றது. இதன்போது கூட்டம் நடைபெறுவதற்கு முன்பு மேடை மற்றும் கதிரைகள் என்பன மோப்ப நாய் மற்றும் கருவிகள் கொண்டு பொலிஸார் தீவிர சோதனை ...
வேட்பாளர் ஒருவரின் சுவரொட்டியை சுவரில் ஒட்டிய நால்வர் நேற்று இரவு வட்டுக் கோட்டைப் பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர். யாழ், கிளிநொச்சி வேட்பாளர் ஒருவருடைய சுவரொட்டியை ஒட்டிய நால்வரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடமிருந்து வாகனம் ஒன்றும் ஒரு தொகை சுவரொட்டிகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
கிளிநொச்சி ஜெயபுரம் பொலிஸ் பிரிவில் இடம் பெற்ற விபத்தில் ஒருவர் சம்பவ இடத்திலேயே பலியானதுடன் மேலும் இருவர் படுகாயமடைந்துள்ளனர். குறித்த விபத்து சம்பவம் நேற்று முன்தினம் வியாழக்கிழமை இரவு கிளிநொச்சி ஜெயபுரம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மன்னார் யாழ் வீதியில் இடம்பெற்றுள்ளது. வீதியில் தரித்து நின்ற பார ஊர்தியுடன் யாழ் ...
கிளிநொச்சியில் நேற்று இடம் பெற்ற வீதி விபத்தில் முதியவர் ஒருவர் உயிரி ழந்துள்ளார். ஏ 9 வீதியில் நேற்று முற்பகல் 11.30 மணியளவில் இந்த விபத்து இடம் பெற்றுள்ளது. மிதிவண்டியில் பயணித்த முதியவர் வீதியைக் கடக்க முற்பட்டபோது, வவுனியாவிலி ருந்து யாழ்ப்பாணம் நோக்கிப் பயணித்த இலங்கை போக்குவரத்துச்சபை பேருந்து ...
நீதியரசர் விக்னேஸ்வரன் தமிழ் மக்களுக்கு கிடைத்த பொக்கிம். நாம் அவரை நமக்குக் கிடைத்துள்ள தலாய்லாமாவாக (திபெத்தின் ஆன்மீகத் தலைவர்) பார்க்க வேண்டும் என அரசியல் ஆய்வாளர் மு.திருநாவுக்கரசு தெரிவித்துள்ளார். சென்னையிலிருந்து இணையவழி மூலமான பேட்டி ஒன்றிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், தமிழ் மக்கள் எப்படி ...
நாட்டில் வாழும் மூவின மக்களுக்கும் சமவுரிமை உள்ளது. ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஆட்சி அமைத்தால் அனைத்து மக்களுக்கும் சமவுரிமை வழங்கப்படும் என பிரதமர் மகிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தேர்தல் பிரசாரக் கூட்டம் நேற்று வியாழக்கிழமை கந்தளாய் குணவர்த்தன மண்டபத்தில் நடைபெற்றிருந்தது. இதில் ...
வடக்கு மாகாணத்தின் ஆளுநராக முன்னாள் இராணுவ அதிகாரியை நியமிக்க ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தீர்மானித்துள்ளார் என்று தகவல் வெளியாகியுள்ளது. பொதுத் தேர்தல் இடம்பெற்று புதிய அமைச்சரவை நியமனத்தின் பின் இந்த நியமனத்தை வழங்க அவர் தீர்மானித்துள்ளார் என்று தெரிவிக்கப்படுகின்றது. ஓய்வுபெற்ற இராணுவ அதிகாரியான மேஜர் ஜெனரல் பொனிபஸ் பெரேராவை ...