இலங்கையுடன் இணைந்து பயணிக்க நோர்வே அரசு தயாராக இருப்பதாக பிரதமர் மகிந்த ராஜபக்ஷவிடம் நோர்வே தூதுவர் தெரிவித்துள்ளார். இலங்கைக்கான நோர்வே தூதுவர் டீரீன யுரன்லி எஸ்கடேல், பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுடன் சந்திப்பை மேற்கொண்டார். கொழும்பு அலரி மாளிகையில் இந்தச் சந்திப்பு இன்றைய தினம் (27) இடம்பெற்றது. பாராளுமன்ற தேர்தலில் ...
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் புதிய துணைவேந்தராக கணித புள்ளி விபரவியல் துறையின் சிரேஷ்ட பேராசிரியர் எஸ்.சிறிசற்குணராஜா தெரிவு செய்யப்பட்டுள்ளார் . நேற்று வியாழக்கிழமை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவால் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத் துணைவேந்தராக சிறிசற்குணராஜா நியமிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதியின் மேலதிக செயலாளரினால் அறிவிக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத் துணைவேந்தராகவிருந்த பேராசிரியர் ஆர்.விக்னேஸ்வரன் கடந்த வருடம் ...
யாழ்.மாவட்டத்தில் மீண்டும் டெங்கு காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டுள்ளதையடுத்து கடந்த வாரத்தில் 6 பேர் யாழ். போதனா வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். யாழ் போதனா வைத்தியசாலை பணிப்பாளர் வைத்திய கலாநிதி த.சத்தியமூரத்தி சற்று முன்னதாக வெளியிட்ட அறிக்கையில் இவ்விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. அதில் குறிப்பிடப்பட்டுள்ளவாறு, கடந்த 17ஆம் திகதி முதல் 23ஆம் ...
சிங்கள மக்கள் மத்தியில் தமிழ் மக்களின் தொன்மை தொடர்பான பிழையான தகவல் கள் கொண்டு செல்லப்பட்டுள்ளன. உண்மையை சிங்கள மக்கள் மத்தியில் கொண்டு செல்ல வேண்டும். அதனாலேயே பாராளு மன்றத்தில் உண்மையைக் கூறினேன். உண்மையைக் கூறுவதற்கு பயப்பட வேண்டிய அவசியம் இல்லை என நீதியரசர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார். தமிழரின் ...
இலங்கையுடனான உறவை மேலும் வலுப்படுத்த பிரித்தானிய அரசாங்கம் ஆர்வமாக இருப்பதாக இலங்கைக்கான பிரித்தானிய பதில் உயர்ஸ்தானி கர்லிசா வன்ஸ்டல் தெரிவித்துள்ளார். நேற்று புதன்கிழமை காலை அலரிமாளிகையில் பிரதமர் மகிந்தராஜபக்ஷவை சந்தித்து கலந்துரையாடியபோதே பதில் உயர்ஸ்தானிகரால் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டதாக பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது. கொரோனா தொற்றுக்கு பின்னர் உலகம் ...
முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் கொழும்பில் அமைந்துள்ள இல்லத்திற்கு உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான விசாரணை ஆணைக்குழுவின் பொலிஸ் பிரிவினர் நேற்றுக் காலை வாக்குமூலம் ஒன்றை பெற்றுக் கொள்வதற்காக அங்கு சென்றிருந்தனர். அதனடிப்படையில் அவரிடம் சுமார் 9 மணி நேர வாக்குமூலம் பெற்று அங்கிருந்து வெளியேறியுள்ளனர். உயிர்த்த ஞாயிறு ...
மக்கள் மத்தியில் சென்று பணியாற்றுங்கள். மக்களுக்கு விரைவில் பிரதிபலன்களைப் பெற்றுக் கொடுப்பதே தற்போதைய தேவையென ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இராஜாங்க அமைச்சுக்கான செயலாளர்களுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார். 35 இராஜாங்க அமைச்சுகளுக்கான புதிய செயலாளர்களுக்கு நியமனக் கடிதங்களை வழங்கி வைக்கும் நிகழ்வு நேற்று ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் ...
தென்னிலங்கையில் கடும் எதிர்ப்புகளுக்கு மத்தியில் நீதியரசர் சி.வி.விக்னேஸ்வரனின் பாராளுமன்ற கன்னி உரை ஹன்சார்ட்டில் இணைக்கப்பட்டுள்ளது. உலகில் உயிர் வாழும் மூத்த மொழிகளில் ஒன்றும், இந்நாட்டின் முதல் சுதேச குடிமக்களின் மொழியிலும் வாழ்த்துக்களை தெரிவிப்பதாக பாராளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்னேஸ் வரன் கடந்த 20ஆம் திகதி உரையாற்றினார். இதனை அடுத்து சி.வி.விக்னேஸ்வரனின் ...
வீடு திருத்த வேலையில் ஈடுபட்டிருந்த கூலித் தொழிலாளி ஒருவர், கூரை சீமெந்துத் தளம் சரிந்ததில் அதற்குள் சிக்குண்டு பரிதாபமாக உயிரிழந்தார். சுன்னாகம், அம்பனைப் பகுதியில் நேற்று பிற்பகல் இந்தச் சம்பவம் இடம் பெற்றது. இதில் நவாலி கலையரசி லேனைச் சேர்ந்த ஒரு பிள்ளையின் தந்தையான அல்ரர் போல் (வயது-42) ...
ராஜபக்ஷர்களின் குடும்பப் பலத்தை பாதுகாக்கவே புதிய அரசியலமைப்பு திருத்தத்தை அரசாங்கம் கொண்டுவர முயற் சிக்கின்றது என்று தெரிவித்த ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் முஜிபூர் ரஹ்மான், அரசாங்கம் ஜனநாயக தன்மைக்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் அரசியலமைப்பு திருத்தத்தை கொண்டுவர முயற்சித்தால் அதற்கு எதிரான நடவடிக்கைகளை முன்னெடுப்பதாகவும் கூறினார். ...