அரசியலமைப்புத் திருத்தச் சட்டம் தொடர்பான பாராளுமன்ற குழுநிலை விவாதத்தின் போது உயர் நீதிமன்றம் முன்வைத்துள்ள யோசனைகயில் உள்ள யோசனைகள் மற்றும் தேவையான திருத்தங்கள் இறுதி வரைபில் சேர்க்கப்பட்டு சட்டமாக்க நடவடிக்கை எடுக்கப்படும் என கல்வியமைச்சர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார். ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் ...
20ஆவது திருத்தம் மூலம் சர்வாதிகார ஆட்சி உருவாகும். இது ஜனநாயகத்துக்கு மிகவும் ஆபத்தானது. இதனை நிறைவேற்ற விடமாட்டோம் என அரசுக்கு எதிராக மகா சங்கத்தினர் போர்க்கொடி உயர்த்தியுள்ளனர். அமரபுர நிகாயா மகா சங்கம், ராமஞ்ஞா நிகாயா மகா சங்கம் மற்றும் இலங்கை அமரபுர ராமஞ்ஞா சாமக்ரி சங்க சபை ...
நாட்டில் அண்மைய நாட்களில் பரவி வரும் கொரோனா வைரஸ் ஒரு நபரிலிருந்து மற்றொருவருக்கு எளிதில் தொற்றுகின்றமை அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. கொரோனா வைரஸைப் பற்றி ஆராய்ந்து வரும் மருத்துவ வல்லுநர்கள், தற்போது பரவிவரும் வைரஸின் தீவிரம் மிக அதிகமாக இருப்பதாகவும், அது வேகமாகவும் எளிதாகவும் பரவக்கூடுமெனக் ...
கொரோனா வைரஸ் நாணயத்தாள்கள், கையடக்கத் தொலைபேசியின் திரை மற்றும் துருப்பிடிக்காத உலோகங்களில் 28 நாட்கள் வரை தொடர்ந்தும் உயிருடன் இருக்கும் என புதிய ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. இந்த கொரோனா வைரஸ் உயிர் வாழும் காலம் என ஏற்கெனவே கணிக்கப்பட்டுள்ள காலத்தை விட அதிகம் என அவுஸ்திரேலிய தேசிய விஞ்ஞான ...
கொரோனா பரவல் அதிகரித்து வருவதையடுத்து நாடு முழுவதுமுள்ள கல்வியியற் கல்லூரிகள் தனிமைப்படுத்தல் மையங்களாக மாற்றப்பட்டுவருகிறது. அந்தவகையில், கோப்பாய் தேசிய கல்வியியற் கல்லூரியும் தனிமைப்படுத்தல் மையமாக மாற்றப்படவுள்ளது. இன்று இராணுவத்தினரால் இக்கல்லூரி பொறுப்பேற்கப்படவுள்ளது. தற்போது சுமார் 400 ஆசிரிய பயிற்சி மாணவர்கள் கோப்பாயில் கல்வி கற்று வருகிறார்கள். அவர்கள் அனைவரும் ...
கோவிட்- 19 தொற்றுக்கு மத்தியில் சுகாதாரப் பாதுகாப்புடன் நேற்று ஞாயிற்றுக்கிழமை தரம் 5 மாணவர்களுக்கான புலமைப்பரிசில் பரீட்சை நிறைவடைந்துள்ள நிலையில், இன்று கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைகள் ஆரம்பமாகவுள்ளன. உயர்தரப் பரீட்சைகள் இன்று திங்கட்கிழமை ஆரம்பமாகி நவம்பர் மாதம் 6ஆம் திகதி வரை நடைபெறவுள்ளன. இம்முறை 3 ...
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை ஆய்வுகூடத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை மேற்கொள்ளப்பட்ட கொரோனாத் தொற்றுப் பரிசோதனையில் மன்னாரில் தனிமைப் படுத்தலிலுள்ள மூவருக்கு கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் த. சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார். வடமாகாணத்தின் பல இடங்களிலிருந்தும் அனுப்பி வைக்கப்பட்ட 243 பேருக்கான மாதிரிகளில் குறித்த பரிசோதனைகள் ...
அதிகாரப் பரவலாக்கல் நாட்டைப் பிளவுபடுத்த வழிவகை செய்யும் என்று இராஜாங்க அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்தார். கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். “அதிகாரப் பரவலாக்கல் என்பது மிகவும் ஆபத்தான ஒன்றாகும். அதிகாரம் என்பது மத்திய அரசாங்கத்திடம் மட்டும்தான் இருக்க வேண்டும். இது பகிரப்படுவதானால், அது ...
நாட்டில் மேலும் 105 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். இவ்வாறு அடையாளம் காணப்பட்டவர்களில் இருவர் மினுவாங்கொட ஆடைத் தொழிற்சாலை யில் பணிபுரிபவர்கள் எனவும் ஏனைய 103 பேரும் குறித்த தொழிலாளர்களுடன் நெருங்கிய தொடர்பில் இருந்தவர்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, இதுவரை ...
வடமாகாண முன்னாள் முதலமைச்சரும் பாராளுமன்ற உறுப்பினருமான நீதியரசர் சி.வி.விக்னேஸ்வரனிடம் குற்றவியல் விசாரணைப் பிரிவினர் (சிஐடி) வாக்குமூலம் ஒன்றைப் பெற்றுள்ளனர். கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் வந்த சிறப்பு பொலிஸ் குற்றவியல் விசாரணைப் பிரிவைச் சேர்ந்த அதிகாரிகளே அவரிடம் இந்த வாக்குமூலத்தைப் பெற்றுள்ளனர் மேலும் இது தொடர்பில் தெரிய வருவதாவது, இலங்கையின் பூர்வ ...