யாழ்ப்பாணம் கொக்குவில் பகுதியில் 530 மில்லிகிராம் ஹெரோயின் போதைப்பொருளு டன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கொக்குவிலில் வீடொன்றில் ஹெரோயின் விற்பனை இடம்பெறுவதாக விமானப் படையின் புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைத்த இரகசியத் தகவலுக்கமைய அந்த வீடு சுற்றி வளைக்கப்பட்டது. இதன்போது வீட்டில் வைத்து ஹெரோயின் விற்பனையில் ஈடுபட்ட சந்தேக நபர் ...
தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான சி.வி. விக்னேஸ்வரன் மீது சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டுமென, சட்டத்தரணி தர்சன வெரதுவேஜ் பொலிஸ் முறைப்பாடு பதிவு செய்துள்ளார். சமூகங்களிடையே இன அல்லது மத வெறுப்பைத் தூண்டும் வகையில் ஊடகங்களுக்கு அறிக்கைகளை வழங்கியதற்காக விக்னேஸ்வரன் மீது அவர் முறைப்பாடு ...
வடக்கு மாகாண அமைச்சுக்களின் செயலாளர் பலரிற்கு நேற்று முன்தினம் முதல் அதிரடி மாற்றங்கள் வடக்கு மாகாண ஆளுநரினால் வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறு வழங்கப்பட்ட இட மாற்றங்களில் தற்போதைய ஆளுநர் செயலக செயலாளர் எஸ்.சத்தியசீலன் கொழும்பு அமைச்சிற்கு விடுவிக்கப்பட்டுள்ளதாக அறிய முடிகிறது. அவரது இடத்திற்கு தற்போதைய உள்ராட்சி அமைச்சின் செயலாளரான திருமதி ...
50 ஆயிரத்து 177 பட்டதாரி கள் நேற்று அரச சேவையில் இணைத்துக் கொள்ளப்பட்ட னர். அவர்களுக்கான நியமனம் வழங்கும் நிகழ்வு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலை மையில் நேற்று ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்றது. நியமனங்களை வழங்குவதற்காக 25 நிமிடங்களுக்கு மாத்திரம் மட்டுப்படுத்தப்பட்ட எளிமையான நிகழ்வொன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. சுபீட்சமான ...
முப்படைகளின் தளபதி என்ற வகையில் நாட்டின் பாதுகாப்புக்கு பொறுப்புக் கூற வேண்டியவரான ஜனாதிபதி பாதுகாப்பு அமைச்சராக பதவி வகிக்கும் உரிமை 19ஆவது அரசியலமைப்புத் திருத்தச் சட்டத்தின் மூலம் இல்லாமல் செய்யப்பட்டுள்ளதாக கல்வியமைச்சர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார். கண்டியில் நடைபெற்ற கூட்டம் ஒன்றில் உரையாற்றும் போதே அவர் இதனைக் கூறியுள்ளார். ஜனாதிபதி ...
யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 90.8 மில்லி மீற்றர் மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளதாக திரு நெல்வேலியில் அமைந்துள்ள பிராந்திய வளிமண்டலவியல் ஆராய்ச்சி திணைக்கள பொறுப்பதிகாரி த.பிரதீபன் தெரிவித்தார். “இலங்கையைச் சூழவுள்ள கீழ் வளி மண்டலத்தில் ஏற்பட்ட தளம்பல் காரணமாக தற்போது ஏற்பட்டுள்ள மழைவீழ்ச்சியானது மேலும் 18 மணித்தியாலங்களுக்கு தொடரலாம் என வளிமண்டலவியல் ...
இலங்கையில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக நாட்டில் பல மாவட்டங்களுக்கு இன்று நள்ளிரவு வரை சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நாட்டை அண்மித்து நிலவும் தாழ முக்க நிலை காரணமாக கிளிநொச்சி, முல்லைத்தீவு, மன்னார், திருகோண மலை, மட்டக்களப்பு, புத்தளம், குருநாகல், கண்டி, கேகாலை, இரத்தினபுரி, கம்பஹா, கொழும்பு, களுத்துறை, ...
நாட்டில் நேற்று மட்டும் 43 பேர் கொரோனா தொற்றிற்கு உள்ளாகினர். இதன்மூலம் தொற் றாளர் எண்ணிக்கை 3 ஆயிரத்து 081 ஆக உயர்ந்துள்ளது. கட்டாரிலிருந்து நாடு திரும்பிய 22 பேர், மாலைதீவிலிருந்து நாடு திரும்பிய 6 பேர், இந்தியாவிலிருந்து திரும்பிய 2 பேர், ஐக்கிய அரபு எமிரேட்ஸிலிருந்து திரும்பிய ...
சந்நிதி கோயில் தேர்த் திருவிழாவில் தங்க நகைகளை பறி கொடுத்த 16 பேர் வல்வெட்டித்துறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர். தொண்டைமானாறு செல்வச்சந்நிதி ஆலயத்தின் தேர்த் திருவிழா நேற்று செவ் வாய்க்கிழமை காலை இடம்பெற்றது. தேர்த் திருவிழாவில் பக்தர்களின் சன நெரிசலினைச் சாதகமாகப் பயன்படுத்தி திருடர்கள் தமது கைவரிசையைக் ...
தொண்டைமானாறு செல்வச்சந்நிதி ஆலயத்தில் நேற்றிரவு சிறுமி ஒருவரின் காப்பினை அபகரித்த திருடர் ஒருவர் வல்வெட்டித்துறை பொலிஸாரினால் கையும் மெய்யுமாக பிடிக்கப்பட்டுள்ளார். செல்வச்சந்நிதி ஆலயத்தின் தேர்த் திருவிழா நேற்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற நிலையில் இரவு நேர பூஜையில் கலந்து கொள்வதற்காக வந்திருந்த சிறுமி ஒருவரின் ஒன்றரை பவுண் நிறையுடைய காப்பினை ...