எதிர்வரும் ஆறு மாத காலத்திற்கு முன்னர் தற்போதைய அரசாங்கத்தை கவிழ்க்க போவ தாக ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினரும் முன்னாள் அமைச்சருமான ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார். எந்த வகையிலும் மேலும் ஆறு மாதங்களுக்கு இந்த அரசாங்கம் முன் நோக்கி செல்ல இடமளிக்க போவதில்லை எனவும் அவர் கூறியுள்ளார். ...
தியாகி திலீபனின் நினைவேந்தலுக்கு நீதிமன்றம் தடைவிதித்தமை தெரிந்ததே. நீதிமன் றத்தின் தீர்ப்புகள், உத்தரவுகள் விமர்சனத் துக்குரியவை அல்ல என்ற வகையில் மேற் படி விடயத்தை ஜனாதிபதி கோட்டாபய ராஜ பக்வினதும் பிரதமர் மகிந்த ராஜபக்வின தும் கவனத்துக்குக் கொண்டுவருவதென தமிழ் அரசியல் கட்சிகள் கூட்டாக முடிவு செய்துள்ளன. இதன் ...
ராஜபக்க்களின் அரசாங்கத்தில் தமிழ்ப் பாராளுமன்ற உறுப்பினர்களும் இடம்பெற் றுள்ளனர். எனினும் அவர்கள் அரசாங்கம் செய் கின்ற அத்தனை விடயங்களையும் ஆதரிப்ப வர்களாக இருப்பதனால், அவர்களால் தமிழ் மக்களின் உரிமை விடயத்தில் எதுவும் செய்ய முடியாமல் போகிறது. குறிப்பாகத் தமிழர் தாயகத்தில் நடக்கின்ற நில ஆக்கிரமிப்புகள் மற்றும் இராணுவப் பிர ...
பகிரங்கமாக பொதுவெளியில் கூறமுடியாதளவு மோசமான பாலியல் இம்சைகள் இடம்பெற்றுள்ளது எனவும் அதனுடன் தொடர்புடைய 4 மாணவர்கள் உடனடியாக இடைநிறுத்தப்பட் டுள்ளதாக யாழ். பல்கலைக்கழக துணைவேந்தர் எஸ்.சிறிசற் குணராஜா தெரிவித்துள்ளார். நேற்று வெள்ளிக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின்போதே அவர் இவ் வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட ...
அரசியல் சாராத மக்கள் இயக்கமாக தமிழ் மக்கள் பேரவை தொடர்ந்து செயற்பட வேண்டும் என்பதற்காக பேரவையின் இணைத் தலைவர் பதவியிலிருந்து நீதியரசர் விக்னேஸ்வரன் விலகினார். தேசிய ரீதியான நெருக்கடிகள் தமிழ் மக்களுக்கு உருவாகும் போது, கட்சி சார்பற்ற வகையில் அதனை தமிழ் மக்கள் பேரவை கையாள்வதற் கான சூழலை ...
யாழ்.கட்டப்பிராய் பகுதியில் நேற்று இடம்பெற்ற வீதி விபத்தில்; குடும்பப் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். இதில் கல்வியங்காடு ஆனந்தபுரம் பகுதியைச் சேர்ந்த ஒரு பிள்ளையின் தாயாரான சுபேசன் பவானி (வயது-33) என்ற பெண்ணே உயிரிழந்தவராவார். கட்டைப்பிராய் பகுதி ஊடாக பிரதான வீதிக்கு மோட்டார் சைக்கிளை செலுத்த முற் பட்டபோது பிரதான ...
வலம்புரிப் பத்திரிகை விநியோகஸ்தர் மீது இனந்தெரி யாத கும்பலொன்று வாள்வெட் டுத் தாக்குதல் நடத்திவிட்டு அவரது மோட்டார் சைக்கிள் மற்றும் கைத்தொலைபேசி என்பவற்றை அபகரித்து தப்பிச் சென்றுள்ளது. இச்சம்பவம் சுன்னாகம் கந்தரோடை வெளியில் நேற்று அதிகாலை 4.30 மணியளவில் இடம் பெற்றுள்ளது. இச்சம்பவத்தில் இணுவிலைச் சேர்ந்த 47 வயதுடைய ...
நீதியரசர் விக்னேஸ்வரனுக்கு எதிராக வடக்கு மாகாண முன்னாள் அமைச்சர் டெனீஸ்வரன் தாக்கல் செய்த வழக்கு வாபஸ் பெறப்பட்டுள்ளமை கண்டு தமிழ் மக்கள் திருப்தியடைந்துள்ளனர். வழக்கை வாபஸ் பெறுவதாக டெனீஸ்வரன் நீதிமன்றில் அறிவித்தமை காலம் உணர்ந்து அவர் செய்த கைங்கரியம் என்பதை இங்கு கூறித்தானாக வேண்டும். எமக்குள் ஆயிரம் பிரச்சினைகள், ...
தியாகி திலீபனுக்கு அஞ்சலி செலுத்துவதற்கு வவுனியா நகரசபை உறுப்பினர் முற்பட்ட நிலையில் சட்டத்தினை காரணம் காட்டி தவிசாளர் அதனை மறுத்திருந்தார். வவுனியா நகர சபையின் மாதாந்த அமர்வு தவிசாளர் கௌதமன் தலைமையில் நேற்று இடம் பெற்றது. இதன்போது கூட்டமைப்பின் பெண் நகர சபை உறுப்பினர் லக்சனா நாகராஜன் தியாகி ...
யாழ்ப்பாண பல்கலைக்கழக புதுமுக மாணவர்கள் மீது இணையவழியில் பாலியல் ரீதியில் மிக மோசமான பகிடிவதை நடைபெறுவதாக கொழும்பு ஆங்கில நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது. “இரண்டு சிரேஷ்ட மாணவர்களும் இரண்டு சிரேஷ்ட மாணவிகளும் இந்த மோசமான பகிடிவதையில் ஈடுபட்டுள்ளனர். வட்ஸ்அப் மற்றும் பிற சமூக ஊடகங்களின் வழியாக நிர்வாண புகைப்படங்கள், ...