கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி நீர்கொழும்பு வைத்தியசாலையில் உயிரிழந்த குடும்பத் தலைவரை நேரடியாக காலதாமதமின்றி அரச வைத்தியசாலையில் சேர்த்திருந்தால் காப்பாற்றியிருக்க முடியும் என்று சுகாதார அமைச்சர் பவித்திரா வன்னியாராச்சி தெரிவித்துள்ளார். “அவருக்கு சுவாசக் கோளாறு எனத் தெரிவித்து கடந்த சனிக்கிழமை தனியார் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டு மறுநாளான நேற்று முன்தினமே ...
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் நேற்று முன்தினம் அனுமதிக்கப்பட்ட 8 பேருக்கும் கொரோனா தொற்று இல்லையென யாழ். போதனா வைத்தியசாலை பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார். இராணுவச் சிப்பாய், பொலிஸ் உத்தியோகத்தர், ஆடைத்தொழிற்சாலையில் பணியாற்றிய மன்னாரை சேர்ந்த இரு யுவதிகள், பருத்தித்துறை மூதாட்டி உள்ளிட்டவர்கள் கொரோனா சந்தேகத்தில் நேற்று முன்தினம் அனுமதிக்கப்பட்டிருந்தனர். ...
கொரோனா வைரஸ் (கோவிட் 19) தொற்றால் மேலும் 20 பேர் நேற்று செவ்வாய்க்கிழமை அடையாளம் காணப்பட்டுள்ளனர். இதனடிப்படையில் இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 142ஆக (ஜனவரியில் பாதிக்கப்பட்ட சீனப் பெண் உட்பட) அதிகரித்துள்ளது. அவர்களில் 17 பேர் முழுமையாகக் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இருவர் உயிரிழந்துள்ளனர். ...
யாழ்.சிறைச்சாலையில் குற்றங்களில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 44 கைதிகள் நேற்று விடுவிக்கப்பட்டுள்ளனர். நேற்று செவ்வாய்க்கிழமை யாழ்.மேல் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட அவர்கள் சொந்த பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர். இலங்கையில் கொரோனா தொற்று அபாயம் காரணமாக சிறைச்சாலைகயில் தடுத்துவைக்கப்பட்டிருக்கும் சிறு குற்றங்களுடன் தொடர்புடையவர்களை பிணையில் விடுதலை செய்ய ஜனாதிபதி எடுத்துள்ள சிறப்பு ...
யாழில் இடம்பெற்ற சுவிஸ் போதகரின் ஆராதனையுடன் தொடர்புபட்ட 800 பேர் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற தேவாலய ஆரதனையொன்றில் சுவிஸ் போதகர் மூலம் கொரோனா தொற்றுக்கு உள்ளான ஒருவர் கண்டுபிடிக்கப்பட்டிருந்தார். குறித்த ஆராதனையில் போதகர் உட்பட 9 பேரும் கலந்துகொண்டிருந்தமையின் பிரகாரமே தனிமைப்படுத்தப்பட்டிருந்தனர். மேற்படி 9 பேருமே தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். ...
கொரோனா தொற்றினால் உயிரிழந்த இரண்டாவது இலங்கையரின் உடலை தகனம் செய்யும் நடவடிக்கை நேற்று நள்ளிரவு மேற்கொள்ளப்பட்டுள்ளது. நீர்கொழும்பு மாநகர சபைக்கு சொந்தமான பொது கல்லறையில் அவரது உடல் பாதுகாப்பாக எரியூட்டப்பட்டுள்ளது. இதன்போது நீர்கொழும்பு மாவட்ட வைத்தியசாலையின் பிரதானிகள், நீர் கொழும்பு கொச்சிக்கடை பொலிஸ் நிலைய அதிகாரிகள் மற்றும் பிரதேச ...
யாழ்ப்பாணம் நாவாந்துறை காபிஅபூபக்கர் வீதியில் 3 குடும்பங்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன. கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான நிலையில் நீர்கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நபர் நேற்று முன்தினம் உயிரிழந்த நிலையில், குறித்த நபர் நாவாந்துறை பகுதியில் மூன்று குடும்பங்களின் வீடுகளில் தங்கிச் சென்றுள்ளதாக பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. ...
கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து நாள்தோறும் 200 பேருடன் மோடி தொலைபேசியில் பேசி தகவல் கேட்டு வருவதாக பிரதமர் அலுவலகம் தெரிவித்தது. கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகளில் பிரதமர் மோடி தீவிரமாக ஈடுபட்டுள்ளார். அதற்கான பலன்கள் குறித்து அவர் நாள்தோறும் 200 பேருடன் தொலைபேசியில் பேசி தகவல் கேட்டு ...
அமெரிக்காவில் கொரோனா வைரஸ் தொற்றால் அடுத்த 2 வாரங்களில் பலி எண்ணிக்கை உச்சத்தை அடையலாம் என்று ஜனாதிபதி ட்ரம்ப் தெரிவித்தார். உயிர்க்கொல்லி வைரஸான கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்த முடியாமல் உலக நாடுகள் திணறி வருகின்றன. சீனா, இத்தாலி, ஸ்பெயின், பிரான்ஸ், ஈரான் ஆகிய நாடுகளைத் தொடர்ந்து வல்லரசு நாடான ...
நாடுமுழுவதும் ஊரடங்கு வேளையில் வீதிகளில் நடமாடிய 7 ஆயிரத்து 98 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அத்துடன், ஆயிரத்து 702 வாகனங்கள் தடுத்துவைக்கப்பட்டுள்ளன என்று பொலிஸார் அறிவித்துள்ளனர். நாடுமுழுவதும் தொடர் ஊரடங்குச்சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. 19 மாவட் டங்களில் மட்டும் இரண்டு நாட்களுக்கு ஒரு தடவை தற்காலிகமாக தளர்த்தப்படுகிறது. இந்த நிலையில் ...