சுமார் 6 இலட்சம் பேர் வசிக்கும் யாழ்ப்பாணத்தில் 360 பேருக்கு மட்டுமே கொரோனா பரிசோதனை செய்துவிட்டு யாழ்ப்பாணத்தில் கொரோனா வைரஸ் சமூகத்தில் தொற்றாக ஏற்படவில்லை என யாரும் கூறிவிட முடியாது என அரச வைத்திய அதிகாரிகள் சங் கம் அறிவித்துள்ளது. யாழ்ப்பாணத்தில் நேற்று புதன்கிழமை நடத்திய ஊடகவியலாளர்சந்திப்பின்போதே அவர் ...
நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை 330 ஆக அதிகரித்துள்ளது. மட்டக்களப்பிலுள்ள தனிமைப்படுத்தல் நிலையம் மற்றும் பொலன்னறுவையிலிருந்து நேற்றையதினம் 20 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அதற்கமைய, 213 நோயாளர்கள் வைத்தியசாலைகளில் தங்கியிருந்து சிகிச்சை பெறுகின்றனர். நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளான 105 பேர் இதுவரையில் குணமடைந்துள்ளனர். இலங்கையில் கொரோனா தொற்றினால் ...
கொழும்பில் கொரோனா அபாய வலயமாக அறிவிக்கப்பட்ட பகுதியிலிருந்து யாழ்ப்பாணத்துக்கு பாரவூர்தி மூலம் 8 பேர் தப்பித்து வந்துள்ளனர். குறித்த நபர்களால் யாழ் மாவட்டத்திற்கு கொரோனா வைரஸ் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக யாழ். மாவட்ட அரச அதிபர் மகேசன் எச்சரிக்கை விடுத்துள்ளார். யாழ் மாவட்டத்தில் நேற்று புதன்கிழமை இரவு நடத்திய ...
ஒரு கிலோ மஞ்சள் தூளிற்கான அதிகபட்ச சில்லறை விலைக்கான வர்த்தமானி நேற்று வெளியாகியுள்ளது. இந்நிலையில், ஒரு கிலோ மஞ்சள் தூளின் அதிக பட்ச சில்லறை விலை ரூபாய் 750 என நுகர்வோர் விவகார அதிகார சபை தெவித்துள்ளது.
அவரச தேவைக்காக மட்டுமே ஊரடங்கு தளர்த்தப்பட்டுள்ளது. பொதுமக்கள் அனைவரும் சுகாதார பிரிவினரின் அறிவுறுத்தலை பின்பற்றி நடக்க வேண்டும் என அகில இலங்கை இந்து மாமன்றத்தின் உப தலைவரும் தெல்லிப்பழை ஸ்ரீதுர்க்காதேவி தேவஸ்தானத்தின் தலைவருமான கலாநிதி ஆறு. திருமுருகன் வேண்டுகோள் விடுத்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், உலகம் முழுவதும் வாழும் ...
நாட்டிலுள்ள அனைத்து மதுபான விற்பனை நிலையங்களையும் உடனடியாக மூடுமாறு அரசாங்கம் உத்தரவு பிறப்பித்துள்ளது. நாட்டின் சில மாவட்டங்களில் ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்பட்ட பின்னர் நேற்று முன் தினம் மதுபான விற்பனை நிலையங்களை திறப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டிருந்தது. எனினும், மறு அறிவித்தல் வரையில் மதுபான விற்பனை நிலையங்களை மூடுமாறு அரசாங்கம் ...
கொழும்பில் நோயாளிகளின் எண்ணிக்கை திடீரென அதிகரித்ததன் காரணமாக மே 11 அன்று பாடசாலைகளை மீண்டும் ஆரம்பிக்கும் முடிவை அரசாங்கம் மறுபரிசீலனை செய்யவுள்ளது. இது குறித்து ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய பிரத்தியேக பேட்டியில் கருத்து தெரிவித்த அமைச்சர் பந்துல குணவர்தன, பாடசாலைகள் மற்றும் பல்கலைக்கழகங் களை மீண்டும் திறப்பது ...
கொரோனா அச்சம் முழுமையாக நீங்கும்வரை பொதுத் தேர்தல் நடத்தப்படாது என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மகிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். ஜூன் மாதம் 20 ஆம் திகதியை பொதுத் தேர்தலுக்கான திகதியாக தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ள நிலையில் திகதியை மீள் பரிசீலனை செய்யுமாறு அரசி யல் கட்சிகள் தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு ...
ஊரடங்குச் சட்டத்தின் போது பொலிஸாரின் கடமைக்கு இடையூறு ஏற்படுத்திய குற்றத்திற்காக கைதுசெய்யப்பட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவிற்கு நேற்று நீதிமன்றால் பிணை வழங்கப்பட்டுள்ளது. மாதிவெல குடியிருப்புத் தொகுதியில் உள்ள ரஞ்சன் ராமநாயக்கவின் வீட்டின் பாதுகாப்பு நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த பொலிஸாரினால் வழங்கப்பட்ட தகவலை அடுத்தே மிரிஹான பொலிஸார் அவரை ...
உலகம் முழுவதும் அதி தீவி ரமாகப் பரவியுள்ள கொரோனா வைரஸ் கனடாவிலும் தற்போது அதிக தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. அந்நாட்டில், நேற்று முன்தினம் ஆயிரத்து 673 பேருக்கு வைரஸ் தொற்று உறுதிப்படுத் தப்பட்டுள்ள நிலையில் நேற்று முன்தினம் மட்டும் 117 பேர் மரணித்தனர். மேலும், கனடாவில் மொத்தமாக 35 ...