கொரோனா பரவல் அதிகரித்து வருவதையடுத்து நாடு முழுவதுமுள்ள கல்வியியற் கல்லூரிகள் தனிமைப்படுத்தல் மையங்களாக மாற்றப்பட்டுவருகிறது. அந்தவகையில், கோப்பாய் தேசிய கல்வியியற் கல்லூரியும் தனிமைப்படுத்தல் மையமாக மாற்றப்படவுள்ளது. இன்று இராணுவத்தினரால் இக்கல்லூரி பொறுப்பேற்கப்படவுள்ளது. தற்போது சுமார் 400 ஆசிரிய பயிற்சி மாணவர்கள் கோப்பாயில் கல்வி கற்று வருகிறார்கள். அவர்கள் அனைவரும் ...
கோவிட்- 19 தொற்றுக்கு மத்தியில் சுகாதாரப் பாதுகாப்புடன் நேற்று ஞாயிற்றுக்கிழமை தரம் 5 மாணவர்களுக்கான புலமைப்பரிசில் பரீட்சை நிறைவடைந்துள்ள நிலையில், இன்று கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைகள் ஆரம்பமாகவுள்ளன. உயர்தரப் பரீட்சைகள் இன்று திங்கட்கிழமை ஆரம்பமாகி நவம்பர் மாதம் 6ஆம் திகதி வரை நடைபெறவுள்ளன. இம்முறை 3 ...
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை ஆய்வுகூடத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை மேற்கொள்ளப்பட்ட கொரோனாத் தொற்றுப் பரிசோதனையில் மன்னாரில் தனிமைப் படுத்தலிலுள்ள மூவருக்கு கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் த. சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார். வடமாகாணத்தின் பல இடங்களிலிருந்தும் அனுப்பி வைக்கப்பட்ட 243 பேருக்கான மாதிரிகளில் குறித்த பரிசோதனைகள் ...
அதிகாரப் பரவலாக்கல் நாட்டைப் பிளவுபடுத்த வழிவகை செய்யும் என்று இராஜாங்க அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்தார். கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். “அதிகாரப் பரவலாக்கல் என்பது மிகவும் ஆபத்தான ஒன்றாகும். அதிகாரம் என்பது மத்திய அரசாங்கத்திடம் மட்டும்தான் இருக்க வேண்டும். இது பகிரப்படுவதானால், அது ...
நாட்டில் மேலும் 105 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். இவ்வாறு அடையாளம் காணப்பட்டவர்களில் இருவர் மினுவாங்கொட ஆடைத் தொழிற்சாலை யில் பணிபுரிபவர்கள் எனவும் ஏனைய 103 பேரும் குறித்த தொழிலாளர்களுடன் நெருங்கிய தொடர்பில் இருந்தவர்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, இதுவரை ...
கொரோனா வைரஸ் தொற்று தொடர்பில் நாட்டில் தற்பொழுது ஏற்பட்டுள்ள நிலைமைகள் குறித்து மக்கள் பதற்றமடைய தேவையில்லை என தொற்று நோயியல் பிரிவின் பிரதானி மருத்துவர் சுதத் சமர வீர தெரிவித்துள்ளார். மினுவாங்கொட ஆடைத் தொழிற்சாலையில் நோய்த் தொற்றாளிகள் கொத்தணி தற்பொழுது குறைவடைந்து வருவதாகத் தெரிவித்துள்ளார். எவ்வாறெனினும், மக்கள் உரிய ...
மட்டக்களப்பு மாவட்டத்தின் களுவாஞ்சிக்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தேற்றாத்தீவு பகுதியில் விடுதலைப் புலிகள் மறைத்து வைத்ததாகக் கூறப்படும் தங்கத்தினைத் தேடும் பணிகள் நேற்று சனிக்கிழமை காலை முன்னெடுக்கப்பட்டன. நேற்று முன்தினம் இரவு தேற்றாத்தீவு மயான வீதியில் கடற்கரையினை அண்டியுள்ள சவுக்கு மர காட்டிற்குள் சந்தேகத்திற்கு இடமான முறையில் நடமாடிய ஒருவரைக் ...
அனலைதீவு பிரதேசத்தில் மஞ்சள் கடத்தலில் ஈடுபட்ட மூவர், நீதவான் அனுமதியுடன் பி.சி.ஆர்.பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு தனிமைப் படுத்தப்பட்ட சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். இதனையடுத்து அனலை தீவு பகுதியில் மஞ்சள் கடத்தலில் ஈடுபட்ட நபர்கள் நடமாடியதாக கருதப்படும் 10 குடும்பங்களைச் சேர்ந்த 39பேர் கட்டாய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதோடு, நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை ...
தருமபுரத்தில் மருந்து வில்லைகளை அருந்திய மாணவி ஒருவர் யாழ். போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்துள்ளார். தொலைபேசியை கேட்டபோது தரமறுத்ததால் குறித்த மாணவி விபரீத முடிவெடுத்ததாக கூறப்படுகின்றது. தருமபுரம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட முசுரம்பிட்டி பகுதியில் நேற்று முன்தினம் குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. மருந்து வில்லைகள் அருந்திய நிலையில் ...
வடமாகாண முன்னாள் முதலமைச்சரும் பாராளுமன்ற உறுப்பினருமான நீதியரசர் சி.வி.விக்னேஸ்வரனிடம் குற்றவியல் விசாரணைப் பிரிவினர் (சிஐடி) வாக்குமூலம் ஒன்றைப் பெற்றுள்ளனர். கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் வந்த சிறப்பு பொலிஸ் குற்றவியல் விசாரணைப் பிரிவைச் சேர்ந்த அதிகாரிகளே அவரிடம் இந்த வாக்குமூலத்தைப் பெற்றுள்ளனர் மேலும் இது தொடர்பில் தெரிய வருவதாவது, இலங்கையின் பூர்வ ...