அவசர தேவைக்குரிய மருந்துகளை பொதுமக்கள் பெற்றுக் கொள்வதற்கு வசதியாக இன்று ஏப்ரல் 2ஆம் திகதி நாளை 3ஆம் திகதி மற் றும் 6ஆம் திகதி ஆகிய தினங்களில் அனை த்து மருந்தகங்களையும் திறப்பதற்கு சுகாதார அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது. குறித்த தினங்களில் அனைத்து மருந்தகங்களையும் திறப்பதற்கு அனுமதியளித் திருப்பதாக ...
கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி நீர்கொழும்பு வைத்தியசாலையில் உயிரிழந்த குடும்பத் தலைவரை நேரடியாக காலதாமதமின்றி அரச வைத்தியசாலையில் சேர்த்திருந்தால் காப்பாற்றியிருக்க முடியும் என்று சுகாதார அமைச்சர் பவித்திரா வன்னியாராச்சி தெரிவித்துள்ளார். “அவருக்கு சுவாசக் கோளாறு எனத் தெரிவித்து கடந்த சனிக்கிழமை தனியார் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டு மறுநாளான நேற்று முன்தினமே ...
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் நேற்று முன்தினம் அனுமதிக்கப்பட்ட 8 பேருக்கும் கொரோனா தொற்று இல்லையென யாழ். போதனா வைத்தியசாலை பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார். இராணுவச் சிப்பாய், பொலிஸ் உத்தியோகத்தர், ஆடைத்தொழிற்சாலையில் பணியாற்றிய மன்னாரை சேர்ந்த இரு யுவதிகள், பருத்தித்துறை மூதாட்டி உள்ளிட்டவர்கள் கொரோனா சந்தேகத்தில் நேற்று முன்தினம் அனுமதிக்கப்பட்டிருந்தனர். ...
கொரோனா வைரஸ் (கோவிட் 19) தொற்றால் மேலும் 20 பேர் நேற்று செவ்வாய்க்கிழமை அடையாளம் காணப்பட்டுள்ளனர். இதனடிப்படையில் இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 142ஆக (ஜனவரியில் பாதிக்கப்பட்ட சீனப் பெண் உட்பட) அதிகரித்துள்ளது. அவர்களில் 17 பேர் முழுமையாகக் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இருவர் உயிரிழந்துள்ளனர். ...
நாடுமுழுவதும் ஊரடங்கு வேளையில் வீதிகளில் நடமாடிய 7 ஆயிரத்து 98 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அத்துடன், ஆயிரத்து 702 வாகனங்கள் தடுத்துவைக்கப்பட்டுள்ளன என்று பொலிஸார் அறிவித்துள்ளனர். நாடுமுழுவதும் தொடர் ஊரடங்குச்சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. 19 மாவட் டங்களில் மட்டும் இரண்டு நாட்களுக்கு ஒரு தடவை தற்காலிகமாக தளர்த்தப்படுகிறது. இந்த நிலையில் ...
கொரோனா தொற்றினால் நேற்று உயிரிழந்தவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதை யாரும் அறிந் திருக்கவில்லையென அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். அத்துடன், அவர் தொற்றுக்குள்ளாகும் விதத்தில் வெளியில் நடமாடியவருமல்ல என் றும் தெரிவித்துள்ளனர். இலங்கையின் இரண்டாவது கொரோனா தொற்று உயிரிழப்பு நேற்று பதிவாகியது. முஹம்மத் ஜமால் என்பவரே உயிரிழந்தார். யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாக ...
கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தில் பொலிஸார் உட்பட 7 பேர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் உள்ள கொரோனா சிகிச்சை விடுதியில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலை பணிப்பாளர் த.சத்திய மூர்த்தி தெரிவித்தார். வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டவர்களின் இரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டு அநுராதபுரம் வைத்தியசாலையில் உள்ள கொரோனா பரிசோதனைக்கூடத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது ...
சிலாபம், நாத்தாண்டியா பகுதி யில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐந்து பேர் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. குறித்த குடும்பத்தைச் சேர்ந்த உறுப்பினர்களிடம் நேற்று முன்தினம் கொரோனா தொற்று தொடர்பான சோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதன்போதே அவர்கள் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளமை கண்டறியப்பட்ட நிலையில் அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். ஐந்து பேர் கொண்ட இக்குடும்பத்தில் ...
கொரோனா வைரஸ் தொற்று சந்தேகத்தின் அடிப்படையில் பலாலி இராணுவ முகாமில் இருந்து இராணுவ வீரர் ஒருவர் யாழ.போதனா வைத்தியசாலையில் நேற்று இரவு அனுமதிக்கப்பட்டுள்ளார். யாழ்ப்பாணத்தில் கொரோனா தொற்றுள்ள நபர் ஒருவர் இனங்காணப்பட்டுள்ள நிலை யில் மறு அறிவித்தல்வரை ஊரடங்கு நீடிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் பலாலி இராணுவ முகாமில் இருந்து ...
இலங்கையில் கொரோனாவின் தாக்கம் அடுத்த வாரம் இன்னும் மோசமான நிலையை அடையும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. தொற்றினால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை நாளாந்தம் அதிகரித்து வரும் நிலையில் அரசாங்க வைத்திய அதிகாரிகள் சங்கம் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளது. எதிர்வரும் ஏப்ரல் மாதம் 7 ஆம் திகதி வரையிலான காலப் பகுதியில் இலங்கையில் ...