நோன்புப் பெருநாளை முன்னிட்டு வர்த்தகர் ஒருவரிடம் பணத்தினை அன்பளிப்பாக வாங்கச் சென்ற 3 பெண்கள் கூட்ட நெரிசலில் சிக்கி பரிதாபகரமாக உயிரிழந்துள்ளனர். இச்சம்பவம் நேற்று பிற்பகல் கொரோனா வைரஸின் அபாய வலயத்துக்குள் இருக்கும் கொழு ம்பு மாளிகாவத்தையில் இடம்பெற்றுள்ளது. இது தொடர்பில் 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளதோடு 8 ...
ஏற்கனவே திட்டமிட்டப்படி ஜூன் 20ஆம் திகதி பொதுத் தேர்தலை நடாத்த முடியாது என உயர் நீதிமன்றுக்கு தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. ஜூன் 20ஆம் திகதி பொதுத் தேர்தலை நடாத்த திகதி குறிப்பிட்டு வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவிப்பை சவாலுக்குட்படுத்தும் அடிப்படை உரிமை மனுக்கள் உயர் நீதிமன்றால் நேற்று மூன்றாவது நாளாக ...
வெலிசர முகாமைச் சேர்ந்த மேலும் பல கடற்படையினருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்படலாம் என்று, தொற்று நோயியல் பிரிவின் பணிப்பாளர் சுதத் சமரவீர எச்சரிக்கை விடுத்துள்ளார். அந்த முகாம் ஒரு தனிநாடு போன்றது பல கிராமங்களைக் கொண்டது. இதனால் வைரஸ் வேகமாக பரவும் ஆபத்துள்ளது. வெலிசர கடற்படை முகாமிற்குள் ...
வட மாகாணத்திற்குள் மட்டுப்படுத்தப்பட்ட அளவில் தனியார் போக்குவரத்து சேவைகள் இன்றிலிருந்து சேவையில் ஈடுபடவுள்ளதாக வட இலங்கை தனியார் பேருந்து உரிமை யாளர்சங்கத் தலைவர் சி.சிவபரன் தெரிவித்துள்ளார். யாழில் நேற்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், கடந்த இரண்டு மாதங்களாக கொரோனா ...
பிறந்த சிசுவை வீட்டு மலசல கூடக் குழிக்குள் போட்ட தாயார் அச்சுவேலிப் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். இச் சம்பவம் நேற்று புத்தூர் கிழக்கில் இடம்பெற்றது. நான்கு நாட்களுக்கு முன்னர் குறித்த பெண்ணுக்கு சிசு பிறந்துள்ளது. சிசுவை வீட்டில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள மலசல கூடத்தின் குழிக்குள் தாயார் போட்டுள்ளார். நான்கு ...
பிரித்தானியாவில் தமிழ் மக்களின் கழுத்தறுப்பேன் என சைகை காண்பித்த இராணுவ அதிகாரி பிரியங்க பெர்னாண்டோவிற்கு மேஜர் ஜெனரலாக பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது. இப்பதவி உயர்வு வழங்கப்பட்டதனை இராணுவ ஊடகப் பிரிவும் உறுதிப்படுத்தியுள்ளது. அத்தோடு 5 பேர் மேஜர் ஜெனரல்களாகவும், 4 பேர் பிரிகேடியர்களாகவும், 39 பேர் லெப்டினன்ட் கேணல்களாகவும், ...
தீக்காயத்துக்குள்ளான வயோதிப மாது ஒருவர் உயிரிழந்துள்ளதாக வல்வெட்டித்துறைப் பொலிஸார் தெரிவித்தனர். நேற்று செவ்வாய்க்கிழமை முற்பகல் குண்டுவர்காடு ஒழுங்கை, மதவடி, வல்வெட்டித் துறையில் 65 வயதுடைய தவராசா இராஜேஸ்வரி என்பவரே உயிரிழந்தவராவார். தீக்காயத்துக்குள்ளான அவரை அவசர அம்புலன்ஸ் வண்டி மூலம் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலைக்கு எடுத்துச் சென்ற போது அவர் ...
ஜனாதிபதி கோட்டாவின் நிர்வாகம் ஆபத்தான வெறுப்பைத் தூண்டுவதாக குற்றம் சாட் டியுள்ள மனித உரிமை கண்காணிப்பகத்தின் தென்னாசியாவுக்கான இயக்குநர் மீனாட்சி கங்குலி உண்மை, நீதி, பொறுப்புக்கூறல் ஆகியவற்றுக்காக இலங்கை வழங்கிய வாக்குறுதி களை கைவிட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக கருத்து வெளியிட்டுள்ள அவர், இலங்கையில் சமீப காலமாக அதி கரித்துக் ...
பெளத்த சமயத்தால் இலங்கை வளம் பெற்றுள்ளது எனத் தெரிவித்துள்ள ஜனாதிபதி கோட்டாபய ராஜபக், இராணுவம் மீது சர்வதேச அமைப்புக்கள் எவையும் அழுத்தங்களைக் கொடுக்க முடியாது என போர் வீரர்கள் விழாவில் எச்சரிக்கை விடுத்துள்ளார். யுத்தம் முடிவுக்கு கொண்டு வரப்பட்டு 11 ஆண்டுகள் பூர்த்தியானதை முன்னிட்டு நேற்றைய தினம் 11ஆவது ...
அரச படைத்தரப்பால் ஏற்படுத்தப்பட்ட தடைகளைத் தகர்த்தெறிந்து உணர் வெழுச்சியுடன் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் இடம்பெற்றது. பொது மக்கள் பங்கு பற்றி இறுதி யுத்தத்தில் உயிரிழந்தவர்களுக்கு தமது அஞ்சலியை தெரிவித்தனர். இறுதி யுத்தத்தின்போது உயிர் நீத்த தமிழ் மக்களின் 11ஆம் ஆண்டு நினைவுகூரல் நிகழ்வு முள்ளிவாய்க்காலில் நேற்று இடம்பெற்றுள்ளது. நினைவேந்தல் நிகழ்வின் ...