அரசாங்கத்துடன் இணைந்து செயலாற்ற முன்வருமாறு வடக்கிலுள்ள தமிழ் மக்களின் பிரதிநிதிகளுக்கு கல்வி அமைச்சரும் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன முன்னணியின் தவிசாளருமான பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் அழைப்பு விடுத்துள்ளார். அஸ்கிரிய மற்றும் மல்வத்துப்பீடங்களின் தலைமைத் தேரர்களைச் சந்தித்து ஆசி பெற்றுக் கொண்ட பின் செய்தியாளர் களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே கல்வியமைச்சர் ...
வவுனியா கனகராயன் குளம் பகுதியில் காயங்களுடன் முதியவர் ஒருவரின் சடலம் நேற்றுக் காலை பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது. குறித்த பகுதியில் உள்ள வீடொன்றின் அருகாமையில் சடலம் ஒன்று இருப்பது தொடர்பாக கனகராயன்குளம் பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது. சம்பவ இடத்திற்கு சென்ற பொலிஸார் சடலத்தினை அடையாளப்படுத்தியதுடன் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். குறித்த ...
யாழ்ப்பாணம் அரியாலைப் பகுதியில் இருந்து பல மோட்டார் குண்டுகள் நேற்று முன்தினம் விசேட அதிரடிப்படையினரால் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரி வித்துள்ளனர். யாழ். அரியாலைப் பகுதியில் உள்ள வெற்றுக் காணியொன்றில் இருந்து மோட்டார் குண்டுகள் இருப்பதை அப்பகுதியில் உள்ளவர்களினால் நேற்று முன்தினம் கண்டறியப்பட்டது. உடனடியாக பொலிஸாருக்கு வழங்கப்பட்ட தகவலையடுத்து பொலிஸாரும் ...
பாடசாலை முடிந்து வீடு திரும்பிக் கொண்டிருந்த ஆசிரியை ஒருவரின் தங்கச்சங்கிலி மோட்டார் சைக்கிளில் வந்த வழிப்பறிக் கொள்ளையர்களால் கொள்ளையிடப்பட்டுள்ளது. நேற்று வெள்ளிக்கிழமை பிற்பகல் அல்வாய், செல்லையா வீதியில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது. அல்வாய்ப் பகுதியைச் சேர்ந்த ஆசிரியை பாடசாலை நிறைவடைந்ததன் பின்னர் மோட்டார் சைக்கிளில் ...
க.பொ.த. சாதாரண தரப் பரீட்சைக்கான விண்ணப்பங்களை ஏற்கும் கால எல்லை மேலும் நீடிக்கப்பட்டுள்ளதாக பரீட்சை கள் திணைக்கள ஆணையாளர் நாயகம் சனத் பி. பூஜித்த தெரிவித்துள்ளார். இதன்படி, எதிர் வரும் 31ஆம் திகதி வரை விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்படு மென பரீட்சைகள் திணைக்கள ஆணையாளர் தெரிவித்துள்ளார். பாடசாலை பரீட்சார்த்திகள் ...
வலம்புரியின் அலுவலகச் செய்தியாளர் விஜயநாதன் ஜனார்த்தன் (வயது – 20) இனந்தெரியாதவர்களால் தாக்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் நேற்று மாலை 6.15 மணி யளவில் யாழ்ப்பாணம், பிறவுண் வீதி, இரண்டாம் ஒழுங்கையில் இடம்பெற்றது. பணி முடிந்து வலம்புரி அலுவலகத்தில் இருந்து ஜனார்த்தன் மோட்டார் சைக்கிளில் தனது சொந்த இடமான ஊரெழுவுக்குப் புறப்பட்ட ...
ஜனாதிபதியின் கொள்கைப் பிரகடன உரையில் நாட்டு மக்கள் எதிர்பார்க்கும் பிரச்சினை களுக்கு எந்தத் தீர்வுகளும் இல்லை எனத் தெரிவித்துள்ள எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் லமன் கிரியெல்ல, ஜனாதிபதி கூறும் ஒரே சட்டம், ஒரே நாடு சாத்தியப்ப டாது என்றும் குறிப்பிட்டார். மேலும் 19ஆவது திருத்தச் சட்டத்துக்கு ஆதரவாக 2015இல் ...
யாழ்.கோண்டாவில் பகுதியில் இராணுவத்தினர் நேற்று திடீர் சுற்றி வளைப்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர். இந்தச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, கோண்டாவில் மேற்கு பகுதியில் இராணுவத்தினர் ஏராளமானவர்கள் குவிக்கப்பட்டு திடீர் சுற்றிவளைப்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர். அனைத்து வீதிகளிலும் சோதனை நடவடிக்கைகளில் ஈடுபட்டதுடன் இராணுவத்தினரின் மோட்டார் சைக்கிள் பிரிவினர் மற்றும் ஏராளமான ...
சஜித் பிரேமதாஸவை எதிர்க் கட்சித் தலைவராக ஏற்றுக் கொள்வதாக சபாநாயகர் அறிவித்துள்ளார். இதேநேரம் புதிய சபாநாயகர், பிரதி சபாநாயகர் மற்றும் குழுக்களின் பிரதி தவிசாளர் ஆகியோர் வாக்கெடுப்பு இன்றி நேற்று தெரிவு செய்யப்பட்டனர். புதிய சபாநாயகராக மகிந்த யாப்பா அபேவர்தனவும் பிரதி சபாநாயகராக ரஞ்சித் சியம்பலாப்பிட்டியவும் அங்கஜன் இராமநாதன் ...
பிழையான பாதையில் அரசு பயணித்தால் ஐ.தே.கவின் நிலையே ஏற்படும். சிங்கள மேலாதிக்க அதிகாரத்தை தமிழ் மக்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். தமிழ், சிங்களம், ஆங்கில மொழிகளில் தனது கன்னி உரையை நீதியரசர் நிகழ்த்தினார். 9ஆவது பாராளுமன்றத்தின் கன்னி அமர்வு நேற்று வியாழக்கிழமை காலை 9.30 மணிக்கு ஆரம்பமாகிய பின்னர் ...